மறந்துபோன மரபு விளையாட்டுகள்- 5 | லதா சரவணன்
ஐந்தாம் விளையாட்டு
வாசு தடியா நல்லா தூங்கிட்டு இருக்கே நேத்தே ஒரு கட்டுரைக்கு விளையாட்டுகளும் தமிழ் சினிமாவுங்கிற தலைப்பில் ஒரு கட்டுரை வேணுன்னு சொன்னேன் நீ என்னடான்னா கும்பகர்ணனுக்கு அண்ணன்மாதிரி தூங்கிட்டு இருக்கே.
ஏய் கழுதை எல்லாம் எழுதியாச்சு வரவர உனக்கு வாய் ஜாஸ்தியாயிடுச்சு. மெயிலைச் செக் பண்ணு.
மானிட்டரை ஆன் செய்து மெளஸை இயக்கினாள். தமிழக சினிமாவின் சுவாரஸ்யம் மிகுந்த கதைக்களங்கள் அநேகம் அதில் ஒன்றுதான் விளையாட்டுகளைப் பற்றி வந்த படங்கள் அவை வெற்றியும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இளையதளபதியின் பிகில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம். இதற்கு முன்பும் வந்த திரைப்படங்களோடு ஒரு பார்வையும் விளையாட்டும்.
படம் என்னவோ கிரிக்கெட்டில் முன்னேறத் துடிக்கும் இளைஞனைப் பற்றியது என்னாலும் நண்பர்களின் கூட்டு முயற்சி என்பதற்கு எடுத்துக்காட்டுதான் விஷாலும், ஆர்யாவும் இணைந்து தயாரித்த படம் அதற்கு ஜீவா என்று நண்பரின் பெயரை சூட்டி இன்னொரு நண்பனான விஷ்ணுவிஷாலை நாயகனாக்கி எடுத்த படம் ஜீவா. இதே நேரத்தில் வெளிவந்த மற்றொரு படம் தான் ஆடாமஜெயிச்சோமடா என்ற மேட்ச் பிக்ஸிங் படமும். இதேபோல் 90களின் இறுதியில் ராஜீ சுந்தரமும், சிம்ரனும் இணைந்து நடித்த படம் ஐலவ்யூடா கிரிக்கெட் விளையாட்டில் உள்ள சிக்கல்களையும், பாதிப்புகளையும் எடுத்துச் சொன்ன படம்.
சென்னை 28 ஒரே பகுதியில் வெற்றிகரமாக வலம் வர முயற்சிக்கும் இரண்டு குழுக்களுக்கான விளையாட்டும் விபரீதமுமான சண்டைதான் படம், அதில் தடைபட்டுப் போன திருமணம் நடைபெறுவதைப் போன்ற இரண்டாவது திரைப்படத்தின் தொடர்ச்சி. நட்பின் உதவியுடன் அவர் தனது திருமணத்தை திரும்ப காண்பதுதான் சென்னை 600028ன் இரண்டாவது படக்குழு.
கனா சின்ன வயதில் கிரிக்கெட்டை தனது கனவாக கொண்டு படிப்பைக் கூட இரண்டாம் பட்சமாக கொண்ட ஒரு கிராமத்து பெண், ஊர், உற்றார் எல்லாரையும் பகைத்துக் கொண்டு பெண்ணை விளையாட்டில் முன்னெடுக்க போராடும் கதை, விவசாயத்தையும் சேர்த்து தற்போதைய நாட்டு நடப்புகளையும் பொருத்தமாகச் சொன்னதற்காக ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
புதிய ஹீரோ மேட்சிங்கான ஜோடி என தெலுங்கில் வெளியான மிஸ்டர் காம்ரேட் பெண்கள் சந்திக்கும் கல்லூரி, பள்ளி எத்தனையோ இடங்களில் நடக்கும் தவறுகளால் பாலியல் பிரச்சனைக்காக தன் கேரியரை இழக்கும் பெண்ணிற்கு ஆதரவாக கதாநாயகன் வெற்றியை நோக்கி அவளை செலுத்தும் கதையோடு நகர்ந்த வெற்றிப்படம்.
வெண்ணிலா கபடி குழு ஒரு சிறிய கிராமத்து குழு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த போராடும் படம் இறுதியில் கதாநாயகன் இறந்தாலும் படம் வெற்றியே ஆனால் இதன் இரண்டாம் பகுதி வெளிவந்தது தோல்வியைத்தான் சந்தித்தது. கில்லி தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வெளிவந்த ஹிட்டடித்த பெரிய படம் அதன் தமிழ் பதிப்பு கில்லி விஜய் திரிஷா நடித்த பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்த படம். தற்போது வெளிவந்த கென்னடி கிளப் கபடி விளையாடும் பெண்வீராங்கனைகளின் மற்றொரு பரிமாணம் இன்னும் தேர்ந்து எடுத்திருந்தால் படம் இமாலய வெற்றியைத் தொட்டிருக்கும். ஆனால், ஏற்கனவே பார்த்துப் பழகிய காட்சிகள், ஆனால் பல வருடங்களாகவே இன்னமும் விளையாட்டுகளில் கூட தமிழர்கள் அவமானப்படுத்துவது தொடர்கிறது என்பது வலி.
வல்லினம் புறக்கணிப்பட்ட விளையாட்டான கூடைப்பந்தாட்டம் மனம் வெகும்பி நிற்கும் ஒரு கோச் தனக்கு கிடைத்த மற்றொரு கல்லூரி மாணவரை வைத்து முயற்சிக்கிறார். அந்த விளையாட்டை ஒழிக்க நினைக்கும் மற்ற வீரர்கள் கிளைமாக்ஸ் வரையில் போராட்டம்.
ஹாக்கியில் கல்லா கட்டிய நட்பே துணை, அரசியல் கலக்காத இடம் ஏதுமில்லை, பழமையான அதே நேரத்தில் பராம்பரியமான மைதானத்தை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி அமைச்சர் அண்ட் கோவினரிடமிருந்து இண்டர்நேஷல் ஹாக்கி பிளேயரான ஹீரோ மீட்டு, ஊருக்குத் தந்து காப்பாற்றும் கதை !
எதிர்நீச்சல், தீவிரமான பயிற்சி, வாய்ப்பு எல்லாம் கிடைத்து கை கூடி வெற்றியை ருசித்ததும் அவளின் பாலினத்தையும், சந்தேகித்து அவளைத் தனிமைப்படுத்தும் நிலையில் கதாநாயகனை அதே விளையாட்டிற்கு தயார்ப்படுத்தும் நிகழ்வுகள்தான் படத்தின் காட்சிகளே.
பத்ரி படிப்பில் ஆர்வமில்லாத பையன் அண்ணனின் ஆசைக்காக பாக்ஸிங்கில் ஈடுபடுவது வழக்கமான கதையில் ஹீரோவின் மாஸ் உடன் படம் முடிகிறது. எம்.குமரன் S/O மஹாலட்சுமி பாக்ஸிங்தான் தன் கனவு என்று குடும்பத்தை விட்டுப் பிரியும் கணவனை தாண்டி பிள்ளையை வளர்க்கும் தாய் அன்னைக்குப் பிடிக்காது என்று நினைத்து தன் ஆசையை துறந்த மகன் அன்னையின் மறைவுக்கு பிறகு, தந்தையை நாடி சென்று இறுதியில் அவரின் மானத்தைக் காப்பாற்ற போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார் கதாநாயகன்.
இறுதிசுற்று இதுவும் அரசியலில் சிக்கித் தவிக்கும் ஒரு நேர்மையான கோச்சின் போராட்டம்தான். தமிழ் பெண் இயக்குநர் இயக்கிய படமும் கூட. பாக்சிங் ஆணையத்தின் உள் அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகும் மாதவன் சென்னை வருகிறார். அங்கே ஏதேச்சையாக மீன் விற்கும் பெண்ணிடம் உள்ள திறமையைக் கண்டுபிடித்து, வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்லும் படம்.
சிலவருடங்களுக்கு முன் பிரபு சாலமன் இயக்கி சிபிராஜ் நடித்த படம் லீ கால்பந்து போட்டியில் சர்வதேசத அளவில் வெற்றிபெறத் துடிக்கும் மாணவர்கள், அவர்கள் குழுவினரை வளரவிடாமல் தடுக்கும் வில்லன் குரூப், அதைப்போலவே பிகிலும் சிங்கப்பெண்களின் அணிவகுப்பு.
செம்மடா வாசு…. கட்டுரை ஏ ஒன் ஆமா இந்தவாரம் நீ என்ன விளையாட்டைப் பற்றி பேச்போறே ?
கபடிதான்….
பெரிய இடத்துப்பெண் திரைப்படத்தில் பலிஞ்சடுசடு என்று குரல் கொடுத்தபடியே சரோஜாதேவியும் மணிமாலாவும் விளையாடும் ஒரு பாடல் அன்று பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று. கபடி என்னும் செல்லப்பெயரிட்டு தமிழ் குடிகளால் பலகாலமாக விளையாடும் விளையாட்டு ஜல்லிக்கட்டுங்கிற வார்த்தை நம்மால் மறக்கமுடியாமல் நம் இளைஞர்களின் ஒழுக்கத்தையும், எழுச்சியையும் ஏறுதழுவுதல் என்ற வீரவிளையாட்டுக்கு முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே கபடி என்ற பெயரால் பல காலமாக விளையாடுப்படுகிறது. கை+பிடி என்பதன் இணைப்புதான் கபடி தெற்கு ஆசியநாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.
பரவலான பழகிய விளையாட்டு என்பதால் ஆட்ட விதிகள் பற்றிய பேச்சை விடவும், சடுகுடு உலகப்கோப்பை முதன்முதலாக 2004ஆம் ஆண்டில் ஆடப்பட்டது. பின்னர் 2007ஆம் ஆண்டிலும் ஆடப்பட்டது எப்போதுமே நாமதான் கெத்து காலை தூக்கிவிட்டபடியே இதுவரையில் முதல் இடத்தை நாமதான் தக்கவைத்து இருக்கிறோம் மாலினி.
இருமுறை இரண்டாவதாக வந்து மிகப்பெரும் வெற்றியை ஈரான் பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இரண்டாவதாக வந்தது. ஆனால் முதலிடம் என்றுமே இந்தியாதான். ஏறுதழுவுதல், கபடி இரண்டுமே விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுவதில்லை, போர்ப்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்காகவும் உடற்தொட்டு ஆடும் ஒரு ஆட்டம்.
பஞ்சாப்பில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கபடி போட்டிகள் நடத்தப்படுகிறது. உரூர்க்கா கலன், உதாம்சிங் கபடிக்கோப்பை, பாபா அசுத்தானா சிங் கபடிபோட்டி, அகிம்பூர் கபடி போட்டி, மவுத்தாடா கலன் கபடி போட்டி, சாந்த் மகாராஜ் சிங் என அநேகம் தலைப்பில் களத்தில் இறங்கி ஆடுகிறார்கள் விடு. ஜீட் இப்போ தூங்கப்போறேன் மீண்டும் பெட்ஷிட்டை இழுத்து காதுவரையில் பொத்திக்கொண்டான் வாசு. மீண்டும் மாலினி அவனை எழுப்பிடத் தயாரானாள்.
(- தொடரும்…)