ஆஸ்திரேலியா குயின்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் இயங்கி வரும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்,டுபிளக்ஸ் ப்ராப்பர்ட்டிஸ் , தபம்ஸ் குழுமம்,உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இளவேனில் விழா 2025 நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது ,உரத்த சிந்தனை நடத்தும் பாரதி உலாவின் முதல் நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது.
மகாகவி பாரதியின் திருவுருவப்படத்தை உரத்த சிந்தனையின் துணைத்தலைவர் மேகநாதன் திறந்து வைத்தார். பாரதி உலா முதல் நிகழ்ச்சி தொடங்குவதன் அடையாளமாக பாரதி உலா 2025 இலட்சினையை திரு மேகநாதன் டுப்லெக்ஸ் பிராப்பர்ட்டி நிறுவனர் அன்சார் அகமதிடம் வழங்கினார்.
250 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்ட மிகப் பெரிய அரங்கில்,குட்டி பாரதிகளின் வீறு நடை அணிவகுப்பு, பிரிஸ்பேன் தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற நற்றிணை நம்முடைய கலைகள் குறித்த நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
உரத்த சிந்தனை உதயம் ராம் தலைமையில் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் தோழிகள் பங்கேற்ற ‘எனக்கு பிடித்த பாரதி’ கருத்தரங்கம், நடைபெற்றது.
புலவர் மா .இராமலிங்கம் நடுவராக இருக்க ‘வாழ்க்கையில் பெரிதும் மகிழ்ச்சி தருவது சொத்து சுகமா? சொந்த பந்தமா? என்ற நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது.
குயின்ஸ்லாந்து தமிழ் மன்றத்தின் தலைவர் ஞானவேல் செல்வம், செயலாளர் சத்யா ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
