‘கின்ட்சுகிகாதல்’ ‘கால் தடங்கள்’ ‘Reasons to Live’
1.11.25 அன்று சென்னை தி.நகர் GRT ஹோட்டல் 2 ம் தளத்தில் நடைபெற்றது.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் 2 வது நூலைப் பற்றிப் பேசுகையில், காதல் கால் தடங்கள் கவிதைகளில் ஒரு 10 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து அதற்கு இசையமைத்து டாக்டர் காணொலியாக வெளியிட்டுள்ளதைப் பார்க்கும் போது , அவர் திரைப்படங்களுக்கே பாடல் எழுதலாம் என்றார்.
முதல் நூலான சிறுகதைத் தொகுப்பில் உள்ள ” நெச்சி” கதை தன்னுடைய “குகை” சிறுகதையை ஒத்து இருப்பதாகக் கூறினார்.

“கூடு ” கதையை விசுவின்
” சம்சாரம் அது மின்சாரம்” படத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்.
எழுத்தாளர் லதா சரவணன் ” கின்ட்சுகி” கதை பற்றிப் பேசும் போது , ” விரிசல் கூட நல்லது” ஒவ்வொரு விரிசலுக்குப் பின்னும் ஒரு கதை இருக்கும் என்றார்.
ஓவியர் ஸ்யாம் தான் சொல்ல நினைத்ததை எல்லாம் லதா சரவணன் கூறிவிட்டார் என்றதோடு, எழுத்தாளர் பாலகுமாரன் இவர் வரைந்த ஓவியத்திற்கு ஏற்ப(முதலில் கதையில் இல்லாதவற்றை) கதையில் இடம் பெறச் செய்து பாராட்டியதையும் டாக்டர் மோகன் குமார் கதைகளுக்கு தான் ஓவியம் வரைய முடியாத ஆதங்கத்தையும் வெளியிட்டார்.

சுபா பாண்டியன், டாக்டர் அபர்ணா இருவரும் மூன்றாவது நூல் பற்றிப் பேசினர்.
டாக்டர் மோகன் குமார் தன் ஏற்புரையில், அவரின் தம்பி நடன இயக்குநர் கல்யாண் உடனான பள்ளி அனுபவங்கள் உட்பட பலவற்றைப் பகிர்ந்தார்.
தன்னுடைய நூல்கள் வெளிவர உறுதுணையாக இருந்தவர்களை பேச்சின் இடையே கௌரவித்ததுடன், தமிழின் மேல் தனக்கு உள்ள தணியாத ஆர்வம் பற்றிக் கூறி, சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே கார் ஓட்டுவது
” குருஷேத்ர போருக்கு” இணையானது என்றார்.

திருமதி கௌசல்யா, டாக்டர் மோகன் குமாரின் IPC ( Indian Poetry Circle) நண்பர்கள், எழுத்தாளர் கணேஷ் பாலா, விஜி கிருஷ்ணன், திருமதி.சாந்தி பிரபாகர் திருச்சி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

திருமதி.நித்யா ராமதாஸ் நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கியதோடு நன்றி நவில , சிறிய உணவு இடை வேளைக்குப் பின் விழா கேள்வி- பதில் பாணியில் ஒரு கலந்துரையாடலுடன் இனிதே நிறைவடைந்தது.

