மரப்பாச்சி – 21 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

 மரப்பாச்சி – 21 | தூத்துக்குடி, வி.சகிதாமுருகன்

அத்தியாயம் – 21

      விப்புடன் காத்திருந்தாள் பிருந்தா ராஜனின் போன் காலுக்காக. அதை தணிக்கும் விதமாய் அவள் செல் வாயைத் திறந்தது. மறு முனையில் ராஜன்.

“ஹலோ ராஜன்”

“பிருந்தா நான் ராஜன்”

“சொல்லு ராஜன் காளிராஜ் என்ன சொன்னான்”

      மறுமுனையில் ராஜன் சொன்ன பதிலில் பிருந்தா மலர்ந்தாள். ராஜனின் பதில் அவளுக்கு ஒரு மன நிம்மதியை கொடுத்தது.கணவனின் வேலையாட்கள் இருவரும் நல்லவர்களே. குறிப்பாக காளிராஜ் இப்பொழுது அவளுடைய தங்கையின் கணவன்.எங்கே தப்புச் செய்தவனாக இருந்தால் தங்கையின் கணவனை எப்படி தண்டிப்பது?”

“என்ன பிருந்தா சத்தத்தை காணோம்?”

“ஆங் ஒண்ணும் இல்லை ராஜன், காளிராஜ் இந்தத் தப்பை பன்ணலைனு நீ எதை வச்சு முடிவு பண்ணுன?”

“விசாரிச்சேன் கொஞ்சம் மிரட்டியும் பார்த்தேன், அவன் கொஞ்சம் கூட பயப்படலை. தன் முதலாளியோட குழந்தைக்கு இப்படி ஆயிருச்சேன்ன்னு அவன் துடிச்ச துடிப்புல நடிப்பு இல்லை. என்னோட அனுமானப்படி ஹி இஸ் இன்னொசென்ட். குற்றவாளி வேற எங்கயோ இருக்கறான்.

      தங்கையின் கணவனுக்கு ராஜன் கொடுத்த சர்டிஃபிகேட் அவளுக்கு ஒரு மனநிறைவை தந்தது. ராஜன் கேட்டான்..

“இனி என்ன செய்யப்போற பிருந்தா?”

“யோசிக்கணும் ராஜன்”

“ப்ரியாவை நான் பார்க்கணும் பிருந்தா?”

“எதுக்கு ராஜன்”

“அவளை நான் விசாரிக்கறேன்”

“அவளைத் தரோவா நான் விசாரிச்சிட்டேன் அவகிட்ட தப்பு இல்லை”

“இல்லை பிருந்தா நீ விசாரிக்கத எதாவது ஒரு விஷயம் நான் அவளை விசாரிக்கும்போது அவளை அறியாம அவ சொல்லலாம்”

“அப்ப சாயங்காலம் அவட்யூஷனுக்கு போறப்ப காருல வச்சு விசாரிச்சுக்க”

“சரி” என்று செல்லை அனைத்தான் ராஜன்.

     மாலை காரில் ப்ரியாவைவை கேள்வி கேட்டான் ராஜன். பிருந்தாவும் காளிராஜும் காரிலிருந்து இறங்கி தூர நின்றார்கள்.

      ராஜன் கேள்விகளால் துளைத்தான் பிரியாவை. அதில் பிரியா சொன்ன ஒரு பதிலில் அவளுளைய கர்ப்பத்திற்கு சூத்திரதாரி யார் என்பதை கண்டுபிடித்தான் ராஜன். அந்தக் கேள்வி..

“ப்ரியா நீ எப்பவாவது எங்கயாவது மயக்கமா ரொம்ப நேரம் படுத்திருந்தியா?”

“ஆமாம் அங்கிள் டியூஷன் சார் அவர் பர்த் டே அன்னிக்கு சாக்லேட் குடுத்தார் கொஞ்சம் நேரத்துல தலை சுத்துற மாதிரி இருந்துச்சு. சார் கிட்டச் சொன்னேன் ஒன்ணும் இல்ல பித்தமா இருக்கும் உள்ளே என் பெட்டுல படுத்துக்க சரியாயிடும்னு சொன்னார். நானும் போய் படுத்திருந்தேன். டியூஷன் முடியிற நேரம் முழிப்பு வந்துச்சு. உடம்பு அடிச்சுப் போட்ட மாதிரி இருந்துச்சு.ஒண்ணும் இல்லை பித்த மயக்கம் தான்னு சொன்னாரு நானும் கிளம்பிப் போயிட்டேன்”

      ராஜனுக்குப் புரிந்து போயிற்று சாக்லெட்டில் மயக்க மருந்து தடவி அந்த டியூஷன் மாஸ்டர் தான் பிருந்தாவை சீரழித்திருக்கிறான் என்பதை. ராஜன் பிருந்தாவை தனியாக அழைத்து விஷயத்தைச் சொன்னான். பிருந்தாவின் கண்கள் சிவந்தன..அவளின் கோபத்தைக் கண்ட ராஜன் கூறினான்..

“பிருந்தா எதாவது தப்பா முடிவு பண்ணிடாதே நிதானமா முடிவெடுப்போம். அவனை நான் பார்த்துக்கறேன்”

“இல்லை ராஜன் எனக்கு உடனே அவனை போட்டுத் தள்ளிட்டு ஜெயிலுக்குப் போயிடலாங்கற வெறி வருது. ஆனா நான் அப்படிச் செய்தா இந்தப் பொண்ணு மறுபடியும் தாயில்லாப் பிள்ளை ஆயிடும். நீயும் அவசரப்பட்டு எதுவும் செய்திடாதே. உன்னை நம்பித்தான் வயசான அம்மா அப்ப இருக்கறாங்க. நிதானமா யோசிச்சு அவனுக்கான தண்டனையை நான் குடுக்கறேன்”

      பிருந்தா சொல்வதும் சரிதான் என்பதை உணர்ந்த ராஜன் “சரி பிருந்தா அப்படியே செய்வோம்” என்றான். கார் ட்யூஷன் செண்டர் செல்லாமல் வீடு திரும்பியது.கார் ஏன் ட்யூஷன் செல்லாமல் வீடு திரும்புகிறது என்று புரியாமல் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான் காளிராஜ்!

முந்தையபகுதி – 20 | அடுத்தபகுதி – 22

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...