உலகத் தமிழர் பேரமைப்பு, புதுச்சேரியில் நடத்தும் உலக மகளிர் நாள் கடந்த 06-03-2026 (வெள்ளி) அன்று புதுவை தமிழ்ச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது.
முதலாவதாக, தமிழ்த்தாய் வாழ்த்தினை பாவலர் மா.எசுரோணியுடன் அனைவரும் பாடி வணங்க, வரவேற்புரையை, பாவலர் பூ.மா.பிரீத்தி அளித்தார்.

புதுச்சேரி, இதயா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் முனைவர் ம.அலமேலு அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சங்க இலக்கிய பெண் பாவலர்களைப் பற்றி அவருடைய உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்ததாக நடந்த கவியரங்கத்தில், கலைமாமணி மாநி, பேராசிரியர் புனிதவதி, பேராசிரியர் இரா.தேவி, பாவலர் இரா.மாலதி, பாவலர் மு.விசய சாமுண்டீசுவரி, நல்லாசிரியை. மரபுப் பாவலர் சு.கவிதா, பாவலர் செயசிரி, பாவலர் பி.கவுசல்யா ஆகியோர் கவிதை படைத்தனர். மகளிரின் உயர்வு குறித்து கவிதைகள் வழங்கியவர்களை, உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பாக, கலைமாமணி, தமிழ்மாமணி, புலவர் பூங்கொடி பராங்குசம் அவர்கள் பாவலர்களுக்கு நூல்கள் அளித்துச் சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வில், புதுச்சேரி, மதகடிப்பட்டு, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி & கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், முனைவர் ம.வனிதா சிறப்புரை வழங்கினார். அப்போது, இன்றைய காலத்தில்,
பெண்கள் சந்திக்கும் இடர்கள், பொதுவாக, பெண்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகள், பெண்களுக்காக ஆண்கள் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் என விரிவாகப் பேசினார்.
இந்நிகழ்வின் தொகுப்புரையை இளமுனைவர் ஆ.சு.சுமத்ரா வழங்கினார். நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
நெஞ்சார்ந்த வணக்கங்களுடன்,
கவிஞர் மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

