முடி மென்மையாகும்
முடி மென்மையாகும்
தற்போதுள்ள மாசடைந்த சுற்றுச்சூழலினால் பலரது முடியானது மென்மையிழந்து, வறட்சியுடன் இருக்கிறது. இதற்கு சுற்றுச்சூழல் மட்டுமின்றி, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் காரணமாக உள்ளன.
இருப்பினும் கடைகளில் செயற்கை முறையில் முடியை மென்மையாக்குவதற்கு கெமிக்கல் கலந்த பொருட்கள் அதிகம் கிடைக்கின்றன. இப்படி கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்தினால், அது தற்காலிகமாக முடியை மென்மையாக்குவதுடன், பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.
எனவே முடியை மென்மையாக்க கெமிக்கல் கலந்த பொருட்களின் உதவியை நாடுவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களின் உதவியை நாடினால், முடியானது நிரந்தரமாக மென்மையாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி முடியை மென்மையாக்குவதில் சிறந்தது தான் முட்டை. இந்த முட்டையைக் கொண்டு வாரம் ஒருமுறை முடியை பராமரித்து வந்தால், முடியின் ஆரோக்கியம் மற்றும் மென்மை பாதுகாக்கப்படும்.
• மென்மையான முடியைப் பெற முட்டை ஹேர் பேக் போடுவது மிகவும் சிறப்பான ஒன்று. அதிலும் முட்டையில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், அவை பாதிப்படைந்த முடியை சரிசெய்யும். எனவே வாரம் ஒருமுறை தவறாமல் முட்டை ஹேர் பேக் போட வேண்டும். அதற்கு முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை முடி மற்றும் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி தேய்த்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.
• சிலருக்கு முட்டையின் நாற்றம் பிடிக்காது. அத்தகையவர்கள் முட்டையுடன் ஷாம்பு சேர்த்து கலந்து, முடிக்கு ஹேர் பேக் போடலாம். இப்படி செய்வதால் துர்நாற்றம் வீசாமல் இருக்கும். அதே சமயம் இதனால் முட்டை ஹேர் பேக்கிற்கு இணையான நன்மை கிடைக்காது.
• ஹென்னா மற்றொரு சிறப்பான முடியை மென்மையாக்கும் பொருட்களில் ஒன்று. அதே சமயம் இது நரைமுடியை மறைக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் இந்த ஹென்னாவை முட்டையுடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலசினால், முடி நன்கு மென்மையாகவும், வலுவுடனும் இருக்கும்.
• வெறும் முட்டையை நன்கு அடித்து, அதனை தலையில் தடவி நன்கு 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசினாலும், முடியானது மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்