தேசிய டாட்டூ தினம்
தேசிய டாட்டூ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தனது உடலின் தோலிற்குள் பெர்மனென்ட் ஆன இங்க்களை செலுத்தி விதவிதமான ஆர்ட்களை தங்கள் உடலில் போட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் நமது வரலாறு, கலாச்சாரம், உள்ளிட்டவைகளை டாட்டூவாக போடுபவர்களின் எண்ணிக்கைஅதிகம்சமீபகாலமாக டாட்டூ என்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.
ஆனால் டாட்டூ மையை உரிஞ்சும் ஊசி வழியாக பல்வேறு தொற்றுகளை, அலர்ஜிகளை நாம் உடலில் வாங்கிக் கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டாட்டூவை சுற்றி ஏற்படும் தடிப்பு தான் அதனால் நமக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் விஷயம். மை பழையதாக இருந்தாலும் அல்லது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக இருக்காவிட்டால் இதுபோன்று ஏற்படும்.
இதனிடையே அந்த காலத்தில் டாட்டூ என்பதை அங்கீகாரமாகவும், அடையாளமாகவும் பார்த்தனர். மேலும் நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் கையை காட்டும் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
பின்னர் வெற்றியாளரை குறிக்க, ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்த, திருடர்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க… என டாட்டூ கலை பலவிதமான அடையாளங்களாக திகழ்ந்திருக்கிறது. அதற்கு பிறகு, 19-ம் நூற்றாண்டில், பெயர்களை பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம் பிரபலமாக இருந்தது.
ஆனால் இன்றைய தலைமுறையினர், பேஷன் உலகில் தங்களை தனித்துவமாக காட்டிக்கொள்ள, டாட்டூ வரைகிறார்கள். டாட்டூ கலாசாரம் நெகட்டிவ் சேதிகளை மீறி எதிர்பார்க்காத வகையில் வளர்ந்திருக்கிறது. மேலும், இளைஞர்கள்-இளம் பெண்களின் ஹீரோவாக திகழும் நடிகர்-நடிைககள், கிரிக்கெட் பிரபலங்கள்… போன்றோரும், டாட்டூ கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, உடல் முழுக்க டாட்டூ வரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது தாக்கத்தினாலும், டாட்டூ வரைந்து கொள்ளும் பழக்கம், இளம் வயதினர் மத்தியில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
அதை ஒட்டியே இத்தினம் கொண்டாடப்படுகிறது