பாசம் உணர்ந்த பவித்ரா

பாசம் உணர்ந்த பவித்ரா

திரு கிளாம்பூர் சங்கரசுப்பிரமணியன்அவர்களின் தலைமையில் திரு தேவி பாலா ,.லதா சரவணன் எழுத்தாளர், அகிலா ஜ்வாலா மற்றும் பல எழுத்தாளர்கள் நிறைந்த அரங்கில் ….

 திருமதி சிவகாமசுந்தரி நாகமணி எழுதிய “பாசம் உணர்ந்த பவித்ரா”நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக பிப்ரவரி 15ஆம் தேதி காலை 10 மணி அளவில் வேளச்சேரி நூலக கட்டிடவளாக அரங்கத்தில் நடந்தது.

 ‘பாசம் உணர்ந்த பவித்ரா’ நூல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் “லாலிபாப் சிறுவர் உலகம்” என்ற பதிப்பகம் மூலம் ஒரே நூலாக வெளிவந்துள்ளது.

 சென்னையில் வசித்து வரும் முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி 30 வருடங்களாக ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் M.Sc,B.Ed, PGDCA மற்றும் Ph.D

முடித்துள்ளார். பல முன்னணி இதழ்களிலும் தொடர்ந்து இவர் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமது இலக்கியப் பணிக்காகவும் ஆசிரியர் பணிக்காகவும் பல விருதுகளை பெற்று வருகிறார். பல தொகுப்பு நூல்களில் இவர் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுவரை 16  நூல்க;ள் அச்சிடப்பட்டு இருக்கிறது. 18 மின்னூல்களையும் எழுதி உள்ளார்  இவரது முதல் சிறார் இலக்கிய நூல் இது ஆகும்.

 பார்கவி சத்தீஷின் இறைவணக்க பாடலுக்குப் பிறகு விஜி R  கிருஷ்ணனின் வரவேற்புரையும் கடைசி குருவான T.N. ராதாகிருஷ்ணனின் கம்பீரக் குரலின் நிகழ்ச்சி தொகுப்புரையோடும் எழுத்தாளரும் வாசகர் வட்டத்தின் தலைவருமான திரு. கௌரிசங்கரின் நன்றி உரையோடு மிகச் சிறப்பாக நடந்தது.

 நிகழ்ச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு எழுத்தாளர் மடிப்பாக்கம் திரு வெங்கட் அவர்கள்.

 பதிப்பகத்தின் நாமகரணத்தை பார்த்ததுமே புரிந்திருக்குமே யெஸ்…இது சிறுவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். சிறுவர்களை படிக்க வைக்க வேண்டியது அவர்களது பெற்றோர்கள் தானே…

 ரூபாய் 110 விலை உள்ள இந்த நூலை வாங்கி படிக்க விரும்புவோர் 90 800 750 67 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

-திவண்யா பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!