மெட்ரோவை முடக்கிய வில்லன்

மெட்ரோவை முடக்கிய வில்லன்

சுவிங்கம் என்பது சிறுபிள்ளைகள் முதல் இளைஞர்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் விரும்பி உபயோகப்படுத்தும் ஒரு பண்டம். அதிலும் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் சுவிங்கம் மெல்வது ஒரு பழக்கமாக இருக்கிறது. அதே சிங்கம் ஒரு தேசத்தின் மெட்ரோ ரயில் சேவையை எப்படி முடக்கியது என்றும் அந்த தேசம் சுவிங்கியதற்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கை பற்றியும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1980 களின் இறுதியில் சிங்கப்பூர் அரசு பல பில்லியன் டாலர் செலவில் MRT (மெட்ரோ) ரயில் சேவையை தொடங்கியது. அப்போது சில விஷமிகள் செய்த ஒரு செயல் ஒட்டுமொத்த நாட்டையும், மெட்ரோ ரயில் துறையையும் அதிர வைத்தது.
மெட்ரோ ரயிலின் தானியங்கி கதவுகளில் உள்ள சென்சார்ர்களில் (sensors) மக்கள் மென்று துப்பிய சுவிங்கத்தை ஒட்டி வைத்தனர் இதனால் கதவுகள் சரியாக மூடுவதில்லை என்று கருதி பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்கள் பாதியிலேயே நின்றன. ஒரு சிறிய கம் துண்டால் ஒட்டுமொத்த ரயில்வே சேவையும் போக்குவரத்தும் முடங்கியது.
இது சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய தலைவலியை கொடுத்தது மெட்ரோ பிரச்சனைக்கு முன்பு சிங்கப்பூர் அரசு இந்த சுவிங்கத்தோடு போராடி வந்தது. பொது இடங்களில் மென்று துப்பப்பட்ட சுவிங்கங்கள் ஆங்காங்கே ஒட்டியிருந்ததை சுரண்டி எடுக்க மட்டும் ஆண்டுக்கு சுமார் சிங்கப்பூர் டாலர் ஒன்றரை லட்சம் (இந்திய ரூபாயின் மதிப்பில் 92 லட்சம்) செலவானது.
லிஃப்ட் பொத்தான்கள், தபால் பெட்டிகள், மற்றும் சினிமா இருக்கைகள் என எங்கு பார்த்தாலும் சிங்கம் தொல்லை அதிகரித்தது. இதை கட்டுப்படுத்த 1992இல் அப்போதைய பிரதமர் கோ சொக் டோங், சுவிங்கம் இறக்குமதி செய்யவும், விற்கவும் அதிரடியாக தடை விதித்தார்.
நீங்கள் ஒரு பெட்டி நிறைய சுவிங்கம் கொண்டு சென்றால் அது கடத்தல் கணக்கில் வரும். முதல் முறை பிடிபட்டால் சிங்கப்பூர் டாலர் ஒரு லட்சம் வரை அபராதம் (சுமார் 62 லட்சம் ரூபாய்) அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறை. கடையில் திருட்டுத்தனமாக விற்றால் சிங்கப்பூர் டாலர் 2000 அபராதம் (சுமார் 1.2 லட்சம் ரூபாய்).
சென்னை மெட்ரோ பயணிகளுக்கான இதில் ஒரு பாடம் என்னவென்றால் சிங்கப்பூர் அளவுக்கு நாம் கடுமையான சட்டங்களை கொண்டு வராவிட்டாலும் நம்ம ஊர் மெட்ரோ ரயில்களை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை ஆகும். சென்னை மெட்ரோ ரயிலில் குப்பை போட்டால் அல்லது எச்சில் தூக்கினால் ரூபாய் 500 அபராதம் அதே தவறை சிங்கப்பூரில் நீங்கள் செய்தால் ரூபாய் 62 ஆயிரம் அபராதம். ஒரு சிறிய அலட்சிய செயலால் எவ்வளவு பெரிய பாதிப்பை சிங்கப்பூர் மெட்ரோ ரயில் நிர்வாகம் எதிர்கொண்டது என்பது ஒரு உதாரணம் ஆகும்.
ஆதலால் மக்களே பொதுவெளியில் எச்சில் துப்புவது சிறுநீர் கழிப்பது மற்றும் மலம் கழிப்பது போன்ற செயல்களை செய்யாதீர்கள் ஏனெனில் இங்கு நாம் போடும் குப்பைகளை அள்ளுபவரும் ஒரு மனிதன் தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

-திவன்யா பிரபாகரன்
ஜெய்ஹிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!