ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
ஆடையில் பார்க்கும் X, XL, XXL என்பதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
X meaning | ஆடை எடுக்கும் போது நாம் கவனித்த XL, XXL, XS என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை பார்க்கலாம்.
எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம். தேர்வில் பொது அறிவு சார்ந்த பல கேள்விகள் உள்ளன. நீங்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால், பொது அறிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு பொது அறிவு சார்ந்த கேள்வியை பற்றி தான் பார்க்கவுள்ளோம். அதாவது நீங்கள் துணி எடுக்க சென்றால் உங்களது அளவு XL, XXL என்று எல்லாம் வார்த்தைகள் உபயோகிப்பீர்கள். அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
உண்மையில், ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம். XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது.
பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும். இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.
இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் குறிக்கும். ஆண்கள், பெண்கள் என அனைத்து ஆடைகளுக்கும் இதுவே குறியீடாகும்.