வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்..

 வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்..

வந்தாச்சு ஜெமினி ஆண்ட்ராய்டு ஆப்.. செந்தமிழில் அழகாய் பேசும் கூகுள்..

கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கூகுள் இந்த அறிவிப்பை ஜூன் 18ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த AI அம்சத்தை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது 9 இந்திய மொழிகளில் நாம் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது

ஜெமினி AI அப்ளிகேஷன், தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி மற்றும் உருது ஆகிய 9 இந்திய மொழிகளுடன் வருகிறது. இதன் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜெமினியுடன் தாய்மொழியில் தகவல்களைக் கேட்டுப் பெறலாம் அல்லது தங்களின் பணிகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

கூகுள் நிறுவனம் தனது கட்டண சேவையான “ஜெமினி அட்வான்ஸ்டு” (Gemini Advanced) பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது. கூகுள் நிறுவனம் இந்த AI தொழில்நுட்பத்தை முதலில் Bard என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் “Gemini” என்று மறுபெயரிட்டு ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த AI முயற்சிகள் அனைத்திற்கும் ‘ஜெமினி’ என்ற பெயரையே முதன்மை பிராண்டாகக் கொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2024-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு இந்த வெளியீடு வந்துள்ளது. ஜெமினி AI தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் முன்னதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: கூகுள் நிறுவனம் அதன் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், கூகுள் இந்த அறிவிப்பை ஜூன் 18ஆம் தேதி அன்று அறிவித்துள்ளது. முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த AI அம்சத்தை பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது 9 இந்திய மொழிகளில் நாம் ஜெமினி ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஜெமினி AI அப்ளிகேஷன், தற்போது இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி மற்றும் உருது ஆகிய 9 இந்திய மொழிகளுடன் வருகிறது. இதன் மூலம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஜெமினியுடன் தாய்மொழியில் தகவல்களைக் கேட்டுப் பெறலாம் அல்லது தங்களின் பணிகளைச் செய்யலாம் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது கட்டண சேவையான “ஜெமினி அட்வான்ஸ்டு” (Gemini Advanced) பயனர்களுக்கு கூடுதல் அம்சங்களையும் வழங்குகிறது. கூகுள் நிறுவனம் இந்த AI தொழில்நுட்பத்தை முதலில் Bard என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அதன்பின் “Gemini” என்று மறுபெயரிட்டு ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த AI முயற்சிகள் அனைத்திற்கும் ‘ஜெமினி’ என்ற பெயரையே முதன்மை பிராண்டாகக் கொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இந்தியாவில் 2024-ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிந்த பிறகு இந்த வெளியீடு வந்துள்ளது. ஜெமினி AI தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் முன்னதாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி துருக்கி, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Rahul Gandhi எந்த Stockலாம் வாங்கிருக்காரு தெரியுமா? | Stock Market | Share Market | Oneindia Tamil ஜெமினி AI மூலம் பல்வேறு பணிகளைச் செய்ய முடியும். இந்த ஆப்பை பயன்படுத்துவதன் மூலம் டைப் செய்தோ அல்லது வாயால் பேசியோ அல்லது படத்தை அனுப்பியோ உங்களுடைய கேள்விகளை கேட்க முடியும். உதாரணமாக பஞ்சரான டயரை எப்படி மாற்றுவது? என்பதற்கான வழிமுறைகளைப் பெற, அந்த டயரின் படத்தை எடுத்து ஜெமினிக்குக் காட்டலாம். அதேபோன்று பிறந்தநாள் விழா கார்டுகளில் என்ன எழுதலாம்? என்பதற்கான உதவி குறிப்புகளையும் நீங்கள் ஜெமினி AI மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் பயனர்கள் ஜெமினியை ஆப்-ஐ தங்கள் உதவியாளராக மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பவர் பட்டனை அழுத்தியோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபோன்களில் ஸ்வைப் செய்தோ அல்லது “hey google” என்ற சொல்லை சொல்லியோ கூகுள் அசிஸ்டன்ட்டை செயல்படுத்தும் இடங்களில் எல்லாம் ஜெமினியை பயன்படுத்தலாம். டைமர் அமைத்தல், விழிப்புணர்வு நினைவூட்டல்கள் அமைத்தல் போன்ற கூகுள் அசிஸ்டன்ட்-இல் உள்ள அனைத்து அம்சங்களும் ஜெமினி ஆப் மூலம் கிடைக்கும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல செயல்பாடுகளை செய்யவும் கூகுள் நிறுவனம் பணியாற்றி வருகிறது. ஜெமினி அட்வான்ஸ்டு மூலம் நீண்ட ஆவணங்கள் (1,500 பக்கங்கள் வரை) மற்றும் மின்னஞ்சல்கள், வீடியோ போன்ற பரந்த அளவிலான தகவல்களைச் எளிதில் புரிந்து உங்களுக்கு விடையளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Google One AI பிரீமியம் திட்டத்தின் ஒரு பகுதியாக Gemini Advanced பயனர்களுக்குக் கிடைக்கிறது, இது ஆரம்ப இரண்டு மாத இலவச டிரையலுடன் மாதம் ரூ.1,950-இல் பயனர்களுக்கு கிடைக்கும்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...