சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது

சென்னை: ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ் உள்​ளிட்ட உயர் பணி​களுக்​காக குடிமைப் பணி (சி​வில் சர்​வீஸ்) தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. தேசிய அளவி​லான இத்​தேர்வை மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது.

அந்த வகை​யில், 2026-ம் ஆண்​டுக்​கான சிவில் சர்​வீஸ் தேர்வு அறி​விப்பை யுபிஎஸ்சி தற்​போது வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, இந்த ஆண்டு ஐஏஎஸ், ஐஎஃப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட 23 வித​மான பதவி​களில் மொத்​தம் 933 காலி இடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

இத்​தேர்வு எழுத ஏதேனும் ஒரு பட்​டப் படிப்​பில் தேர்ச்சி பெற்​றிருந்​தால் போதும். வயது வரம்பு பொதுப் பிரி​வினருக்கு 21 முதல்32 வரை. ஓபிசி வகுப்​பினருக்கு 3 ஆண்​டும், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 5 ஆண்​டும் வயது வரம்​பில் தளர்வு அளிக்​கப்​படும். தகு​தி​யுடைய பட்​ட​தா​ரி​கள் https://upsconline.nic.in என்ற இணை​யதளம் மூல​மாக பிப்​.24-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!