வரலாற்றில் இன்று (19.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 19  கிரிகோரியன் ஆண்டின் 170 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 171 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 195 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

325 – நைசின் விசுவாச அறிக்கை நைசியாவில் (இன்றைய துருக்கியில்) முதலாவது பேரவையில் வெளியிடப்பட்டது.
1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் 10 வெள்ளி லிவ்ராக்கள் தண்டம் செலுத்த வேண்டும் என ஒன்பதாம் லூயி மன்னர் கட்டளையிட்டார்.
1306 – பெம்புரோக் பிரபுவின் படைகள் புரூசின் இசுக்காட்லாந்துப் படைகளை மெத்வென் சமரில் தோற்கடித்தன.
1586 – வட அமெரிக்காவில் இங்கிலாந்தின் நிரந்தரக் குடியிருப்பை அமைப்பதில் தோல்வியடைந்ததை அடுத்து ஆங்கிலேயக் குடியேறிகள் ரோனோக் தீவில் இருந்து வெளியேறினர்.
1850 – நெதர்லாந்து இளவரசி லூயீசு சுவீடன்-நோர்வேயின் பிற்கால மன்னர் இலவரசர் கார்லை மணந்தார்.
1862 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் அமெரிக்க மாநிலங்களில் அடிமை முறையைத் தடை செய்தது.
1867 – மெக்சிகோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1875 – உதுமானியப் பேரரசுக்கு எதிராக எர்செகோவினா எழுச்சி ஆரம்பமானது.
1903 – பொது வேலை நிறுத்தத்தைத் தூண்டியமைக்காக பெனிட்டோ முசோலினி பேர்ன் நகரில் கைது செய்யப்பட்டார்.
1910 – அமெரிக்காவில் வாசிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவுக்கும் சப்பானுக்கும் இடையில் பிலிப்பைன் கடல் சமர் இடம்பெற்றது.
1949 – முதலாவது தேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி இடம்பெற்றது.
1953 – பனிப்போர்: அமெரிக்காவின் அணுவாயுத இரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு யூலியசு, எத்தல் ரோசன்பர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1964 – மனித உரிமைகள் சட்டம் அமெரிக்க மேலவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1985 – மத்திய அமெரிக்கத் தொழிலாளர் புரட்சிக் கட்சி உறுப்பினர்கள் சல்வடோர் படையினராக வேடமிட்டு சான் சல்வடோரில் சோனா ரோசா பகுதியைத் தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
1987 – எசுப்பானியாவில் கடைத்தொகுதி ஒன்றில் எட்டா விடுதலை அமைப்பு போராளிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வியட்நாமின் 117 மாவீரர்களுக்குப் புனிதர் பட்டமளித்தார்.
1990 – உருசிய-சோவியத் கூட்டு சோசலிசக் குடியரசின் கம்யூனிஸ்டுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1991 – அங்கேரியில் சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
2007 – பக்தாதில் அல்-கிலானி பள்ளிவாசலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 218 பேர் காயமடைந்தனர்.
2009 – வடமேற்குப் பாக்கித்தானில் தாலிபான்களுக்கு எதிரான இரா-கி-நிசாத் இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது.
2012 – விக்கிலீக்ஸ் நிறுவனர் யூலியன் அசாஞ்சு இலண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்தார். 2019 இல் கைது செய்யப்படும் வரை அங்கேயே அவர் தங்கியிருந்தார்.

பிறப்புகள்

1566 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு (இ. 1625)
1595 – குரு அர்கோவிந்த், 6வது சீக்கிய குரு (இ. 1644)
1623 – பிலைசு பாஸ்கல், பிரான்சியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1662)
1861 – ஒசே ரிசால், பிலிப்பீனிய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 1896)
1911 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் 2வது பிரதமர் (இ. 1973)
1918 – கே. சி. நடராஜா, இலங்கை குற்றவியல் சட்டவறிஞர்
1925 – ஜெகசிற்பியன், தமிழக எழுத்தாளர் (இ. 1978)
1928 – ப. கிருட்டிணமூர்த்தி, இந்திய திராவிட மொழியியல் ஆய்வாளர் (இ. 2012)
1935 – சு. ப. திண்ணப்பன், தமிழக-சிங்கப்பூர் தமிழறிஞர்
1945 – ரதொவான் கராட்சிச், செர்பிய-பொசுனிய அரசியல்வாதி, போர்க் குற்றவாளி
1945 – ஆங் சான் சூச்சி, நோபல் பரிசு பெற்ற பர்மிய அரசியல்வாதி
1945 – டோபியாஸ் உல்ஃப், அமெரிக்க எழுத்தாளர்
1946 – மா. சந்திரமூர்த்தி, தமிழக எழுத்தாளர்
1947 – சல்மான் ருஷ்டி, இந்திய-ஆங்கிலேய எழுத்தாளர்
1951 – ஐமன் அழ்-ழவாகிரி, எகிப்திய மெய்யியலாளர், தீவிரவாதி
1959 – கிரிஸ்டியன் உல்ஃப், செருமானிய அரசியல்வாதி
1960 – லெப்டினன்ட் சங்கர், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (இ. 1982)
1961 – வித்யா தேவி பண்டாரி, நேபாளத்தின் 2வது குடியரசுத் தலைவர்
1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
1980 – நாகை ஸ்ரீராம், தமிழக கருநாடக இசைக் கலைஞர்
1985 – காஜல் அகர்வால், இந்திய நடிகை

இறப்புகள்

1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய மீகாமன் (பி. 1641)
1747 – நாதிர் ஷா, ஈரானிய அரசர் (பி. 1688)
1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிகோ மன்னர் (பி. 1832)
1990 – க. யோகசங்கரி, இலங்கைப் போராளி, அரசியல்வாதி
1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1911)
2012 – ராபின் மெக்கிலாசன், ஆங்கிலேயத் தமிழறிஞர், கிரேக்க செவ்வியல் அறிஞர்
2013 – ஜேம்ஸ் கண்டோல்பினி, அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1961)
2016 – குமரகுருபரன், தமிழகக் கவிஞர் (பி. 1974)
2020 – ஏ. எல். ராகவன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (பி. 1933)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (அங்கேரி)
தொழிலாளர் தினம் (டிரினிடாட் மற்றும் டொபாகோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!