Tags :கைத்தடி முசல்குட்டி

3D பயாஸ்கோப்

ரஜினி கட்சி பெயர்:

அடுத்த மாதம் அறிவிப்பு?      சென்னை : ‘தமிழகத்தில், 2021ல், நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம்’ என, அறிவித்துள்ள நடிகர் ரஜினி, அடுத்த மாதம், கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு உள்ளனர்.     திரைமறைவில், கூட்டணி குறித்தும், துாதர்கள் வாயிலாக, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வந்த ரஜினி, ‘டில்லியில் நடந்த வன்முறைக்கு, […]Read More

பாப்கார்ன்

வெற்றிகரமாக நடைபெற்ற உடல் உறுப்பு தானம்….

   தஞ்சையில் இருந்து மதுரைக்கு 140 கி.மீ. வேகத்தில் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து இறந்தவரின் கல்லீரல் உடல் உறுப்பு தானம் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.    தஞ்சையில் சாலை விபத்தில் சிக்கிய 25 வயது இளம்பெண் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் முன்வந்தனர்.     இந்த நிலையில், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயது நோயாளிக்கு […]Read More

பாப்கார்ன்

சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.    சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2020 ஜனவரி மாதத்தில் ரூ.734 ஆக விலை உயர்ந்து காணப்பட்டது. அதிலும் பிப்ரவரி மாதம் விலை திடீரென ரூ.147 விலை அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை செய்யப்பட்டது.    இந்த நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு […]Read More

பாப்கார்ன்

லீப் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுல்…

   பிப்ரவரி 29ம் தேதி என்றாலே ஒரு சின்ன சந்தோஷம் அனைவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஏன் என்றால், இந்த பிப்ரவரி 29ம் தேதியை நாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்றால் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லவா?    இன்று பிப்ரவரி 29ம் தேதி லீப் நாள். இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் குதிக்கும் டூடுலைப் போட்டு சிறப்பித்துள்ளது. 28, 29, 1 என்ற எண்கள் கூகுள் என்ற வார்த்தையில் இணைக்கப்பட்டு, அவை […]Read More

பாப்கார்ன்

200 நாட்களாக 100 அடியில்:மேட்டூர் அணை நீர்மட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு புதிய சாதனையைப் படைத்து வருகிறது. அதாவது, தொடர்ந்து 200 நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேலாகவே உள்ளது. Read More

பாப்கார்ன்

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு !!

   சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின் போது நிச்சயம் அணிந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.    அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை அணிவதில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து, பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது கட்டாயம் அடையாள […]Read More

நகரில் இன்று

அரசுப் பள்ளி ஆசிரியர் வகுப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை..!!

  மாணவர்கள் அனைவரும் சென்ற பின்பு வகுப்பறையிலேயே ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேச மாநிலம் ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த ரவீந்திர குமார் சுக்லா (49), லால்பாக் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.    செவ்வாய்க்கிழமை நேரத்துடன் பள்ளிக்கு வந்த ஆசிரியர் சுக்லா, வழக்கம்போல் பாடம் நடத்துவது உள்பட தனது பணிகளைச் செய்து வந்துள்ளார். பள்ளி நேரம் முடிந்த பின்னர் அலுவலக அறைக்குச் சென்ற […]Read More

நகரில் இன்று

தமுமுகவினர் 300 பேர் கைது…

திருப்பூர் ரயில் நிலையம், தலைமை அஞ்சல் அலுவலகம் முற்றுகை:   திருப்பூரில் ரயில் நிலையம் மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் 300 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.   தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்திய கலவரகாரர்களை கண்டித்தும், காவல் துறையினரை கண்டித்தும் தமுமுகவினர் 300 பேர் ரயில் மறியல் போராட்டம் மற்றும் தலைமை தபால் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 300 பேரையும் போலீஸார் கைது […]Read More

பாப்கார்ன்

தமிழக எல்லையில் அம்மா பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா….

   தமிழக ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் அம்மா பேரவை சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72ஆம் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.     தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான ஆரம்பாக்கத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72ஆம் பிறந்தநாள் விழாவுக்கு அம்மா பேரவை நிர்வாகி நாகராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி உறுப்பினர் என்.எஸ்.ஆர்.நிஜாமுதின், ஊராட்சித் தலைவர் தனசேகர், பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் முல்லைவேந்தன் […]Read More

கைத்தடி குட்டு

சோழர் காலக் கல்வெட்டுகளுடன் மடைத்தூண்கள் கண்டுபிடிப்பு…

    புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு:      புதுக்கோட்டை மாவட்டம் திம்மயம்பட்டியில் களஆய்வு மேற்கொண்ட முசிறி, அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர் மு. பரமசிவம் அவ்வூர்க் குளத்தில் எழுத்துப் பொறிப்புகளுடன் அமைந்த இரண்டு தூண்களைக் கண்டறிந்தார். அவர் அளித்த தகவலால் அக்கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அர. அகிலாவும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவர் முனைவர் மு.நளினியும் ஆய்வாளர் அ. செல்வியுடன் திம்மயம்பட்டித் தூண்களை ஆராய்ந்தனர். மாங்குடி […]Read More