லீப் தினத்தைக் கொண்டாடும் கூகுள் டூடுல்…
பிப்ரவரி 29ம் தேதி என்றாலே ஒரு சின்ன சந்தோஷம் அனைவருக்குள்ளும் எட்டிப்பார்க்கும். ஏன் என்றால், இந்த பிப்ரவரி 29ம் தேதியை நாம் மீண்டும் சந்திக்க வேண்டும் என்றால் 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் அல்லவா?
இன்று பிப்ரவரி 29ம் தேதி லீப் நாள். இதனை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தேடுபொறி தனது முகப்புப் பக்கத்தில் குதிக்கும் டூடுலைப் போட்டு சிறப்பித்துள்ளது.
28, 29, 1 என்ற எண்கள் கூகுள் என்ற வார்த்தையில் இணைக்கப்பட்டு, அவை குதித்துக் கொண்டிருக்கும் வகையில் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புவி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர முன்னூற்று அறுபத்து ஐந்தேகால் நாள்கள் ஆகின்றன. இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாள்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பிப்ரவரி மாதத்தில் 28 நாள்கள் மட்டுமே வருகிறது.
மீதமுள்ள கால் நாள்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும்.