இன்றைய ராசி பலன்கள் – 28-02-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

 இன்றைய ராசி பலன்கள் – 28-02-2020 – வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். தந்தைவழி உறவுகளின் ஆதரவுகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
—————————————

ரிஷபம்
எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். வாகனத்தை தனக்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். மனக்கவலைகள் குறைந்து தெளிவு கிடைக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : அனுபவம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : தெளிவு கிடைக்கும்.
—————————————

மிதுனம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : ஆதரவுகள் கிடைக்கும்.
திருவாதிரை : சேமிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————

கடகம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். போட்டிகளில் வெற்றிக்கான சூழல் அமையும். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : வேறுபாடுகள் உண்டாகும்.
ஆயில்யம் : வெற்றிகரமான நாள்.
—————————————

சிம்மம்
பூர்வீக சொத்துக்களில் சுபவிரயம் செய்வீர்கள். நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : சுபவிரயம் உண்டாகும்.
பூரம் : முயற்சிகள் மேலோங்கும்.
உத்திரம் : சுபிட்சமான நாள்.
—————————————

கன்னி
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். நீர்நிலை சார்ந்த பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : அமைதி வேண்டும்.
அஸ்தம் : சிந்தித்து செயல்படவும்.
சித்திரை : பயணங்கள் உண்டாகும்.
—————————————

துலாம்
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.
சுவாதி : இலாபம் மேம்படும்.
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————

விருச்சிகம்
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் செய்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான சுபவிரயங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : சுபவிரயங்கள் உண்டாகும்.
கேட்டை : நிதானத்துடன் செயல்படவும்.
—————————————

தனுசு
பிள்ளைகளால் சுபவிரயம் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு<

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...