சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

 சென்னையில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.55 குறைந்தது

சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 6 மாதங்களுக்குப் பிறகு 55 ரூபாய் குறைந்துள்ளது.

   சென்னையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2020 ஜனவரி மாதத்தில் ரூ.734 ஆக விலை உயர்ந்து காணப்பட்டது. அதிலும் பிப்ரவரி மாதம் விலை திடீரென ரூ.147 விலை அதிகரித்து ரூ.881-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

  இந்த நிலையில், மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மார்ச் மாதம் ரூ.55 குறைந்து ரூ.826-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

   இந்த விலை குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்குப் பிறகு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...