தொடர்ந்து ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.05 லட்சம் கோடியை தாண்டியது
புதுதில்லி: பிப்ரவரியில் ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு ரூ.1.05 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 1 1.1 லட்சம் கோடியாக இருந்தது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரியை அமல்படுத்தியது. பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒன்றாக இணைத்து இந்த ஜி.எஸ்.டி. முறை உருவாக்கப்பட்டது.
மாதந்தோறும் சேகரிக்கப்படும் இந்த வரியின் மொத்த தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (பிப்ரவரி 2020) வசூலிக்கப்பட்ட மொத்த ஜி.எஸ்.டி. வரி தொகையின் விவரங்களை ஞாயிற்றுக்கிழை மத்திய அரசு வெளியிட்டது.
அதன்படி கடந்த மாதத்தின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் தொகை ரூ.1,1.1 லட்சம் கோடி ஆகும். பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாயை ரூ.1.05.366 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக ஜி.எஸ்.டி வருவாய் ஒரு கோடியை கடந்து வருகிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வசூலான வரிவருவாயை விட 12% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ரூ.20,569 கோடியும், மாநில ஜி.எஸ்.டி. மூலம் ரூ.27,348 கோடி ரூபாயும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ரூ.48,503 கோடி ரூபாயும், கூடுதல் வரி மூலம் 8,947 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2020 பிப்ரவரி மாதத்தில் வழக்கமான தீர்வுக்குப் பிறகு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வரி வருவாய் ஈட்டிய மொத்த வருவாயில் ஜிஎஸ்டி மூலம் ரூ. 43,155 கோடி மற்றும் எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ. 43,901 கோடி கிடைத்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பொருட்களின் இறக்குமதியிலிருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியை கணக்கில் எடுத்துக் கொண்டால், 2020 பிப்ரவரி மாத வருவாயுடன் 2019 பிப்ரவரி மாத வருவாயுடன் ஒப்பிடும்போது 8% அதிகரித்துள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.