இன்று தங்கம் வாங்கலாமா?
என்ன சொல்கிறது விலை நிலவரம்?
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 32 ஆயிரம் ரூபாயில் இருந்து குறைந்துள்ளது.
சனிக்கிழமை காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ.31,888க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.78 குறைந்து ரூ.3,986க்கும் விற்பனையாகிறது.
அதே சமயம், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.60 குறைந்து ரூ.47.40க்கு விற்பனையாகிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது.
குறிப்பாக, கடந்த 24-ஆம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய நாளில், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, கடந்த 4 நாள்களாக தங்கம் விலை குறைந்துவருகிறது. மேலும், தங்கம் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ………………… 3,986
1 பவுன் தங்கம் ………………… 31,888
1 கிராம் வெள்ளி ……………… 47.40
1 கிலோ வெள்ளி …………….. 47,400
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ………………… 4,064
1 பவுன் தங்கம் ………………… 32,512
1 கிராம் வெள்ளி ……………… 49.00
1 கிலோ வெள்ளி …………….. 49,000