காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…

 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டம் இன்று நடக்கிறது…

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதையடுத்து இன்று கர்நாடகாவில் பந்த் நடக்க உள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது மிகுந்த பரபரப்பை கூட்டி வருகிறது.

5,000 கன அடி காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் சொல்லியும்கூட, கர்நாடகா இதனை ஏற்கவில்லை.. 18 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவையும், கர்நாடகா ஏற்கவில்லை..

பெயரளவுக்கு சிறிது நீரை தந்துவிட்டு, காவிரி நீரை ஒரு சொட்டுகூட தமிழ்நாட்டுக்கு திறந்துவிட மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் கூறிவருகின்றன. கர்நாடகாவில் மழை இல்லை. அணைகளில் தண்ணீர் இல்லை என்று காரணங்களையும் சொல்லி வருவருடன், போராட்டங்களையும் நடத்தி, வருகிறார்கள்.

இதனிடையே, 2 நாளைக்கு முன்பு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை அடுத்த மாதம் 15ம் தேதி வரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.. இது கர்நாடகாவுக்கு மேலும் சிக்கலை தந்துள்ளது.. அதனால், இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்ய முடிவு செய்துள்ளது.

இத்தகைய சூழலில், இன்று அதாவது செப்டம்பர் 29ம் தேதி டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரையை, கர்நாடகா முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்படலாம் என தெரிகிறது.. அதேசமயம், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.. ஒருவேளை இதனை ஏற்க மறுக்கும்பட்சத்தில் கர்நாடகா அரசு மறுபடியும் சுப்ரீம்கோர்ட்டை நாடலாம் என்று கூறப்படுகிறது.

ந்த கூட்டத்தின் எதிர்பார்ப்பு கூடிவரும்நிலையில், கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.. மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடந்துமுடிந்த நிலையில், கன்னட சங்கங்களை ஒன்றாக இணைத்து, முழு அடைப்பு போராட்டத்தை இன்று நடத்தப்போவதாக, கன்னட சலுவளி கட்சியின் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்..

இந்த பந்த் ரொம்ப சீரியஸாக இருக்கும்.. அரசு பஸ்கள், ஓட்டல், ரெஸ்டாரண்டுகள், திரையரங்குகள் இயங்காது. பெங்களூரில் விமான சேவைகளை முடக்குவோம்’ என்று வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக கூறியிருந்தார். இந்த பந்த் அறிவிப்பினால், ஒட்டுமொத்த கர்நாடகாவும் முடங்கும் நிலை உருவாகி உள்ளது. அத்துடன், இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

கர்நாடகாவில் இப்படியென்றால், தமிழ்நாட்டிலும் கர்நாடகா காங்கிரஸ் அரசை எதிர்த்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.. இப்போது 2 மாநிலங்களிலுமே காவிரி நீர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்துள்ளதால், இன்று நடக்க போகும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...