இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’

 இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கும் ‘ஹிட்லிஸ்ட்’

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’. தெனாலி, கூகுள் குட்டப்பா படங் களுக்குப் பிறகு,  RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவா கிறது “ஹிட்லிஸ்ட்” திரைப்படம்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம்  “ஹிட்லிஸ்ட்”. சரத்குமார் முக்கிய கதாபத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று கோலகலமாக நடைபெற்றது.

விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ படம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாகக் காரணாமாயிருந்தது. அப்படிப்பட்ட விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’ படம் கமர்ஷியல், ஆக்சன் திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர்கள் சூர்ய கதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.

இப்படத்தின் பூஜையில் இன்று திரை பிரபலங்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில்  கே.எஸ்.ரவி குமார், விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ.ஆர். முருக தாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், ஆர்.பாண்டியராஜன், ஆர். கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா,  பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப் பிரகாஷ்  உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன்,  படம் வெற்றிபெற  படக்குழுவினரை வாழ்த்தினர்.

இயக்குநர்களுடன் தயாரிப்பாளர் மற்றும் விக்ரமன் குடும்பம்

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என  அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப் படமாக உருவாகவுள்ளது.

படம் குறித்த  மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...