கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பில் உள்ளது ஞான விநாயகர் திருக்கோயில். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவிகள் விநாயகர் உருவத்துக்குப் பூக்களால் கோலமிட்டு சிறப்பு விளக்கு பூஜைகளுடன் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் நடுவராக அனுஷ்யா கிருஷ்ணா பிரசாத், சாமிநாதன் (டீன் ஓய்வு) மற்றும் நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதில் 1 முதல் 6 வயது மற்றும் 7 முதல் 12 வயது வரை என வயது வாரியாகப் போட்டிகள் நடைபெற்றது,
குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் பல வருடங்களாக இப்போட்டி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பகுதியாக 7 வயது சிறுவன் பாரதி வித்யாபவன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவன் பாடல் பாடியதற்காக அதர்வா ஜானகிராமனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

