கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி

 கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தடுப்பூசி ரெடி

இளம் வயது பெண்கள் முதல் 44 வயதுடைய பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை, கர்ப்பப்பை வாய் போன்ற உடல் பாகங்களில் இந்த நோய் ஏற்படுகிறது. ஆரம்பத் திலேயே புற்றுநோய் இருப்பதை கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தற்போது இந்தத் தடுப்பூசியானது தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாட்டி லேயே முதல்முறையாக சீரம் நிறுவனம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டே பல கட்ட சோதனைகளை தொடங்கியது. தொடர்ந்து பல் வேறுகட்ட சோதனைகள் நிறைவடைந்த பின்னர் தற்போது இந்தத் தடுப்பூசி யானது தயாரிக்கப்பட்டுள்ளது.

இளம் வயது முதல் 44 வயதுடைய பெண்களுக்கு இந்த கர்ப்பப்பை வாய் புற்று நோய் பரவலாகக் காணப்படுகிறது. அவர்களுக்காகவே இந்த தடுப்பூசி தயாரிக்கப் பட்டுள்ளது. சில மாதங்களில் இந்தத் தடுப்பூசி ஆஸ்பத்திரிகளில் கிடைக்கும்.

உலகளவில் பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் அடங்கும். இந்த வகை புற்றுநோய் பொதுவாக 15 முதல் 45 வயது வரை உள்ள பெண்களை அதிகம் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.

2020ல் 600,000க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 342,000 பேர் இதனால் மாண்டனர். பெரும்பாலும் குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் உள்ள பெண்களே இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.25 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுவதாகவும், இவர்களில், 75,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிகின்றது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் இந்நோயால் மடிவதைக் குறைக்க இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட  தடுப்பூசி உதவும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நம்புகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்கான ‘செர்வாவாக்’  தடுப்பூசியை இந்தியாவில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு தடுப்பூசியும் 200லிருந்து 400 ரூபாய்க்கு விற்கப்படும். அடுத்த ஈராண்டுகளில் 200 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது.  இந்த ஊசி ஒன்பது வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) என்றால் என்ன?

கர்ப்பப்பை அல்லது கருப்பையின் அடிநிலைப் பகுதியான கர்ப்பப்பை வாயில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்.

பெரும்பாலான புற்றுநோய்கள் செதிள் உயிரணு வகை. அதேசமயம் சுரப்பிச்சுவர் புற்றுநோய் அடுத்த மிகப் பொதுவான புற்றுநோய் வகையாகும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது உலகளவில் பெண்களில் காணப்படும் நான்காவது மிகவும் பொதுவான புற்றுநோய். இந்தியாவில் இது பெண்களில் ஏற்படும் புற்றுநோய் களில் 6.29 சதவிகிதம் பங்களிக்கிறது.

ஆரம்பக் கட்டங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளை ஒருவர் கவனிக்க முடியாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வளர்ச்சி அடையும்போது அறிகுறிகள் தெளிவாகத் தெரிகின்றன.

அறிகுறிகள்

மாதவிடாய் அல்லது பாலியல் உடலுறவுக்குப் பிறகு ஒழுங்கற்ற அல்லது அசாதாரண யோனி ரத்தப்போக்கு.

முதுகுவலி, கால்வலி, சோர்வு, எடை இழப்பு, பசியின்மை, துர்நாற்றமுள்ள வெளி யேற்றம் அல்லது யோனிப் பகுதியில் ஏதேனும் அசௌகரியம்.

தொற்று ஏற்படக் காரணங்கள்

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெரும்பாலாக மனித காம்புவடிவக்கட்டி வைரஸ் (HBV) தொற்று காரணமாக ஏற்படுகிறது. இது ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு யோனி வாய்வழி அல்லது குத உடலுறவு வழியாகப் பரவுகிறது. புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புண்களை அதிகரிக்கும் சில காரணிகளைப் பார்ப்போம்.

புகைப்பிடித்தல், மிகக் குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி, ஐந்து வருடங்களுக்கும் மேலாகப் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளைப் பயன்படுத்துதல், மூன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்றவை காரணங்கள்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...