சென்னை தினம் கண்காட்சி | அசரவைக்கும் அரிய படங்களின்

சென்னை எழும்பூரில் உள்ள ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் ‘மெட் ராஸ் லிட்ரரி சொஸைட்டி’ என்கிற நூலகத்தில் சென்னை தினத்தை முன்னிட்டு வெள்ளைக்காரர்களுக்கு அடிமை சேவகம் செய்த மெட்ராஸ் வாசிகளின் 60 போட்டோக்களைக் கண்காட்சி வைத்திருக்கிறார்கள்.

பல்லக்குத் தூக்குபவர்கள், ஆயாக்கள், சிப்பாய், பங்கா (துணி விசிறி)  இழுப்பவர் கள், சமையல்காரர்கள், தண்ணீர் கொண்டுவருபவர்கள், துணி இஸ்திரி போடுப வர்கள், போஸ்ட்மேன் போன்ற அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர் களுக்குச் சேவகம் செய்த எளிய மக்களின் இன்றைய அடையாளத்தை இந்தக் கண்காட்சி யில் சென்னை தினத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 3 வரை நடக்கும் இந்தக் கண்காட்சியை நடத்தும் ‘மெட்ராஸ் லோக்கல் இஸ்ட்ரி முகநூல் குழு’வின் தலைவர் வெங்கடேஷ் ராமகிருஷ்ண னிடம் பேசினோம்.

கடந்த ஐந்து வருடங்களாக மெட்ராஸ் சரித்திரத்தைப் பற்றி ஆய்வு செய்து வரு கிறேன். போஸ்ட் கார்டில் இடம் பெற்ற படங்கள், பத்திரிகைகளில் வந்த படங்கள், இந்தியாவைப் பற்றி எழுதிய புத்தகங்களில் வந்த படங்களைச் சேகரித்து இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளோம். அன்றைய சென்னை மக்களின் எளிய வாழ்க் கையை வரலாற்று ரீதியாகப் பதிவு செய்யும்  நோக்கம்தான் இது.

வெள்ளைக்காரன் 1639ஆம் ஆண்டு மெட்ராஸுக்கு வந்ததிலிருந்து  250 வருட காலப் படங்களைச் சேகரித்திருக்கிறோம். அதில் இங்கு 60 படங்களைக் காட்சிப் படுத்தியிருக்கிறோம்.

மெட்ராஸில் வெள்ளைக்காரர்கள் தொழில் செய்ய வந்தார்கள். அந்தக் காலத்தில் சென்னையின் பெரும்பகுதி வேளச்சேரி, மைலாப்பூர், திருவல்லிக்கேணி போன் றவை கிராமங்களாகவே இருந்தன.  மெட்ராஸ் என்கிற தனி இடத்தை வெள் ளைக்காரர்கள்தான் வந்து தொடங்கினார்கள். வெள்ளைக்காரர்களுக்கு மெட்ராஸ் புது இடம். அதனால் அவர்களுக்கு ரொம்பவே இந்த ஊர் மக்களின் உதவி தேவைப்பட்டது. முக்கியமாக வெள்ளைக்காரர்கள் ஆடைகள் வாங்க வந்தார்கள். அதனால் நெசவாளர்களுடன்தான் தொடர்பு ஏற்பட்டது. அப்புறம் சிப்பாய்களைக் கொண்டுவந்து தங்கள் பாதுகாப்புக்காகச் சிறிய போர் படையை ஆரம்பித்தார்கள். காசு வரவர கொஞ்சம் சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மெட்ராஸ் மக்களை சேவகம் செய்யப் பயன்படுத்திக்கொண்டார்கள்.

அந்தக் காலத்தில் கரண்ட் இல்லை. போக்குவரத்துக்கு கார் இல்லை. அவர்கள் இருந்தது குளிர்ப்பிரதேசம். இங்கு வெப்பம் அதிகமான இருக்கும் பிரதேசம். அத னால் பங்கா என்கிற துணியால் விசுறுகிற பேனை மெட்ராஸ் மக்களைக் கொண்டு விசிற வைத்தார்கள். மேல்தளத்தில் ஒரு பெரிய கனமாக துணியைக் கட்டிவிட்டு அதை அங்கும் இங்கும் இழுப்பார்கள். இரவு முழுக்க தூங்காமல் இருவர்  மாற்றி மாற்றி இழுப்பார்கள். கை வலியெடுத்தால் காலிலும் கால் வலி யெடுத்தால் கையிலும் இழுப்பார்கள். அதிலிருந்து ஏற்படும் காற்றின் சுகத்தில் வெள்ளைக்காரர்கள் தூங்குவார்கள்.

வெள்ளைக்காரக் குழந்தைகளைப் பராமரிக்க ஆயாக்கள் தேவைப்பட்டார்கள். அவர்களை மெட்ராஸில் உள்ள ஆயாக்களைப் பயன்படுத்தினார்கள். சில அதி காரிகள் இங்கிலாந்துக்கு மாற்றலாகிப் போகும் போது இந்த ஆயாக்களையும் கூடவே கூட்டிக்கொண்டு போய்விடுவார்கள். அவர்கள் அத்தோடு அவ்வளவு தான். திரும்பி வருவதற்கு வாய்ப்பில்லை. திருப்பி அனுப்ப வழியில்லை. அத னால் ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலேயே ‘ஆயாஸ் ஹோம்’ என்கிற பெயரில் அவர்களுக்காக இல்லம் நடத்தினார்கள்.

வேலையும் பணமும் கிடைத்ததால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலிருந்தும் வெள்ளைக்காரனுக்கு சேவகம் செய்ய தமிழர்கள் மெட்ராஸுக்கு வந்தார்கள்.

சென்னை தேனாம்பேட்டையில் சென்னைக்கு வந்த ராஜாக்களின் குறுநில மன் னர்கள், பாளையத்தார்களின் ஓவியம் மற்றும் போட்டோக்கள் கண்காட்சியையும் வைத்திருக்கிறோம்.

இந்தப் படங்களை போஸ்ட் கார்டில், பத்திரிகைகளில் வந்தது, இந்தியாவைப் பற்றி எழுதிய புத்தகங்களில் வந்த படங்களைச் சேகரித்து இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளோம்.

வரலாறு ஆய்வாளர், காவிரி மைந்தன் என்கிற சரித்திர நாவலாசிரியர், கடந்த ஐந்து வருடங்களாக மெட்ராஸ் சரித்திரத்தைப் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக் கிறார்.

முகநூலில் மெட்ராஸ் லோக்கல் இஸ்ட்ரி குருப் என்று ஆரம்பித்தோம். இதில் தற்போது பாகிஸ்தான் தென்அமெரிக்கா உள்ளிட்ட 31 ஆயிரம் பேர் இணைந் திருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து மெட்ராஸ் டேவுக்காக இந்தக் கண் காட்சியை நடத்தினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!