மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தில் 90% பொய்யானவை – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிக்கை

 மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தில் 90%  பொய்யானவை  – முன்னாள் இஸ்ரோ  விஞ்ஞானிகள் அறிக்கை

நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான பான் இந்தியா திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’. இந்தப் படத்தின் கதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப் படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தில் நம்பி நாராயண னாக மாதவன் நடித்திருந்தார். நாயகியாக சிம்ரன் உட்பட பலர் நடித்துள் ளனர்.

இந்த படம் குறித்து பேசிய நடிகர் மாதவன், “விஞ்ஞானி நம்பி நாராயண னின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட் டது” என்றார்.

இந்த படம் லாபநோக்கத்தில் வெற்றி பெற்றாலும்  சர்ச்சையைச் சந்தித்துள் ளது.

“நடிகர் மாதவன் இயக்கி, நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தில் தெரிவிக்கப் பட்ட 90 சதவிகிதத் தகவல்கள் பொய்யானவை” என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளான ஏ.இ.முத்துநாயகம், ஈ.பி.எஸ்.நம்பூதிரி, சசிகுமாரன் ஆகி யோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தப் படம் குறித்து திருவனந்தபுரத்தில் அவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

“நாராயணன் பல ஆண்டுகளாகப் பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வரு கிறார். நாராயணன், படத்தில் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி பொது மக்களைத் தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தெரிகிறது. நாராயணன், திரைப் படத்திலும், ஊடகங்களிலும் பொய்யான தகவல்களைத் தெரிவித்து இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளை அவமானப்படுத்தி இருப்பதால் சில விஷயங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளோம்.

நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதால் கிரையோஜெனிக் வளர்ச்சியில் தாமதம், நாட்டிற்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாக அவர் தகவல் பரப்பு வது தவறானது. இஸ்ரோ 1980களில் மத்தியில் திரவ உந்துவிசை ராக்கெட் இன்ஜினான கிரையோஜெனிக் உருவாக்கும் பணியைத் தொடங்கியது.

நம்பி நாராயணன்

ஈ.பி.எஸ்.நம்பூதிரி தலைமை தாங்கிய திட்டத்தில் நாராயணனுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. கிரையோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் நாராயண னின் பணிகள் எதுவும் கிடையாது. விகாஸ் இன்ஜினுக்குப் பின்னால் நாராயணன் இருந்தார் எனக் கூறுவது தவறானது. ஏ.பி.ஜே.அப்துல் கலா மின் தவறை நாராயணன்தான் திருத்தியதாகத் திரைப்படத்தில் நாராயணன் கூறியிருக்கிறார். அதுவும் முற்றிலும் தவறானது. இது குறித்து நடவடிக்கை எடுக்க இஸ்ரோ தலைவரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர்.

நடிகர் மாதவனுக்கு நல்ல பெயரையும் லாபத்தையும் பெற்றுத்தந்த ‘ராக் கெட்ரி’ படத்தில் கூறப்பட்டுள்ள தகவல் 90 சதவிகிதம் பொய் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லா மல் பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...