ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் : மணிமூர்த்தீஸ்வரம்

 ஆசியாவிலேயே பெரிய விநாயகர்  கோயில்  : மணிமூர்த்தீஸ்வரம்

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப் பாடுகள் நீக்கப்பட்டு இந்த ஆண்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த் தியை ஒட்டி சிறப்பு பூஜை  நடைபெற்றது.  ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி யில் இங்கு விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் காலையில் யாகசாலையில் பூஜைகள் மற்றும் அபிஷேக தீபாராதனையும் மாலையில் விஷேச அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வும் தீபாரா தனைகளும் நடைபெற்றன. மாலையில் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்ணாகுதி நடைபெற்றது. மூலவர் விநாயகப்பெருமான் 1008 தேங்காய்களுடன் சந்தனக்காப்புடன் அலங்காரத்துடன் பக்தர்களுக் குத் தரிசனம் அளித் தார்.

ஆலயத்தின் சிறப்பு

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோயில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் விநாயகருக்கென தனி ஆலயமும் கொண்டது நெல்லை சந்திப்பில் உள் ளது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் திருக்கோவில். ராஜகோபுரத் தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

தாமிரபரணியின் ரிஷி தீர்த்தக் கட்டத்தின் மேற்குக் கரையில், கிழக்குத் திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது உச்சிஷ்ட கணபதி திருக்கோவிலில் நாயக்க, பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.

கிழக்கு நோக்கிய கருவறையில் விநாயகப் பெருமான், நான்கு கரங்களு டன், தன் தேவியான நீலவேணி அம்மையை மடியில் இருத்தி, அவரை அணைத்தபடியும், அவரது மடி மீது தனது துதிக்கையை வைத்தபடி அமர்ந்த கோலத் தில் காட்சித் தருகிறார். இவருக்கு மூர்த்தி விநாயகர் என்ற பெய ரும் இங்கு விளங்குகிறது.

கோவிலுக்குள் நுழைந்தால் பலி பீடம், கொடி மரம் தாண்டி விநாயகரின் மூஷிக வாகனம் இருக்கிறது. அதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால் நேராகக் கருவறையில் உச்சிஷ்ட கணபதியும் அவருக்கு அடுத்த தனிச் சந்நதியில் நெல்லையப்பரும் காட்சித் தருகிறார்கள்.

திருக்கோவில் உள் சுற்றுப் பிரகாரத்தில் 32 விநாயகரின் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், காந்திமதி அம்மை சன்னதி மற்றும் சித்தர் களின் ஜீவ சமாதியும் இருக்கின்றன.

இங்கு விநாயகப் பெருமான் 32 வடிவங்களில் காட்சியளிக்கிறார்.

1. பால கணபதி, 2. தருண கணபதி, 3. பக்தி கணபதி, 4. வீர கணபதி, 5. சக்தி கணபதி, 6. துவிஜ கணபதி, 7. சித்தி கணபதி, 8. உச்சிஷ்ட கணபதி, 9. விக்ன கணபதி, 10. க்ஷிப்ர கணபதி, 11. ஹேரம்ப கணபதி, 12. லட்சுமி கணபதி, 13. மகா கணபதி, 14. விஜய கணபதி, 15. நிருத்த கணபதி, 16. ஊர்த்துவ கணபதி, 17. ஏகாட்சர கணபதி, 18. வர கணபதி, 19. திரியாட்சர கணபதி, 20. க்ஷிப்ர பிரசாத கணபதி, 21. ஹரித்திரா கணபதி, 22. ஏக தந்த கணபதி, 23. சிருஷ்டி கணபதி, 24. உத்தண்ட கணபதி, 25. ருண மோசன கணபதி, 26. துண்டி கணபதி, 27. துவிமுக கணபதி, 28. மும்முக கணபதி, 29.சிங்க கணபதி, 30. யோக கணபதி, 31. துர்கா கணபதி, 32.சங்கடஹர கணபதி.

சித்திரை மாதம் முதல் 12 நாட்களுக்கு சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூல வர் மீது படந்து சூரிய பூஜை செய்கின்றன. மத்திர மாகரண விதிப்படி யோக தத்துவ விளக்கமாக அமர்ந்தநிலை விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் ஒன்று உச்சிஷ்ட கணபதி தோற்றம் அகஸ்தீயரின் சீடரான ஹேரம்ப மகரிஷி நிறுவி வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

மூஞ்சூரு வாகனம் அழகாக இருக்கின்றது. நெல்லையப்பரும் தரிசனம் தருகின்றார். நெல்லையப்பர் கோவிலில் வழிபாடு நடக்கும்போது பிரம் மாண்ட மணி ஒலிக்கும். அதைத் தொடர்ந்து இங்கும் மணி ஓசை கேட்கும். இதனால் மூர்த்தீஸ்வரம் என்ற பெயரிலிருந்து இவ்வூர் மணிமூர்த்தீஸ் வரம் என்றானது. பூக்கள் நிரம்பிய ஏழு கலசங்கள் தாமிரபரணியில் மிதந்து வந்து சிந்துப்பூந்துறை அருகே வரும்போது குப்புற கவிழ்ந்து பூக்கள் சிதறி னவாம். அப்போது இக்கோவில் மணி தானாகவே ஒலிக்க ஆரம்பித்ததாம். அதனாலும் மணிமூர்த்தீஸ்வரம் ஆனது.

திருக்கோவில் வரலாறு

முற்காலத்தில் வித்யாகரன் என்னும் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் படைக்கும் கடவுளான நான்முகனை வேண்டி கடுமையான தவம் புரிந் தான். அவனுடைய தவத்திற்கு இறங்கிய பிரம்ம தேவரும், வித்யாகரனுக் குக் காட்சி அளித்து கேட்கும் வரத்தை அளிப்பதாகக் கூறி அருளுகிறார். அதற்கு வித்யாகரன் தனக்கு அழிவே இல்லாதபடி சாகாவரம் வேண்டும் என கேட்கிறான். அதற்கு பிரம்மதேவரோ ‘சாகா வரம் என்பதை யாருக்கும் வழங்க முடியாது’ எனக் கூறி வேறு வரம் கேட்கக் கூறுகிறார்.

தனக்கு எப்போதும் அழிவு நேர்ந்து விடக் கூடாது என்பதில் திண்ணமாக இருந்த வித்யாகரன், சமயோஜிதமாக யோசித்து ஒரு வரம் கேட்கிறான். அதாவது, ‘தனக்கு மனிதனாக பிறந்தவனாலோ, மிருகங்களாலோ, அகோர மானவர் களாலோ அழிவு இருக்கக்கூடாது. தன்னை அழிப்பவன் தேவ அசுர சபை களின் முன்பு யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடன் போர் புரிய வேண்டும், அதே நேரம் அவன், ஒரு பெண்ணோடு இணைந்த கோலத் தில் இருக்க வேண்டும்’ எனக் கேட்கிறான். பிரம்ம தேவரும் அவ்வாறே ஆகட்டும் என வரமளித்து விடுகிறார்.

இப்படி ஒரு வரத்தைப் பெற்ற வித்யாகரன் சும்மா இருப்பானா? தன்னை வெல்ல யாரும் இல்லை, தனக்கு அழிவே இல்லை என்ற தலைக்கனத் துடன் வானுலகத்து தேவர்கள், முனிவர்கள் என அனைவரையும் அடிமைப் படுத்தி, அவர்களை சித்ரவதை செய்து வந்தான். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அனைவரும் ஒன்று கூடி மும்மூர்த்திகளாகிய சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் முறையிட்டனர்.

பின்னர் அவர்களின் ஆலோசனைப்படி தேவர்கள் அசுரர்களை அழிக்க, விநாயகப் பெருமானை வேண்டி மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்தினார் கள். அவர்களின் யாகத்தை ஏற்ற விநாயகப் பெருமான் அந்த யாகக் குண்ட அக்னியிலிருந்து கோடி சூர்ய பிரகாசம் கொண்டவராய் தோன்றினார்.

பூவுலகத்தில் பிரம்மாவின் ஆலோசனைப்படி பதங்க முனிவர் தலைமை யில் அனைத்து முனிவர்களும் ஒரு யாகத்தை நடத்திட, அந்த யாக குண்ட அக்னியிலிருந்து இருந்து நீலவேணி என்னும் சக்தி வெளிப்பட்டாள். பின் னர் அக்னியில் தோன்றிய விநாயகருக்கு, நீலவேணி தேவியைத் திரு மணம் செய்து வைத்தனர்.

அதனைக் கண்ட வித்யாகரன் கடுங் கோபத்தோடு போர்க் களத்திற்கு வந்தான். அவன் போருக்கு வந்தபோது விநாயகர், தனது மனைவியான நீலவேணியைத் தன் மடிமீது அமர்த்திய நிலையில், தன் இரு கைகளால் அணைத்து, துதிக்கையை தேவியின் மடியில் வைத்தபடி இருக்க, அந்த நேரத்தில் வித்யாகரன் அங்கு வந்து தொந்தரவு செய்திட, வெகுண்டெழுந்த விநாயகப் பெருமான், தன் தேவியோடு மகிழ்ந்திருந்த நிலையிலேயே கோடி சூர்ய பிரகாசத்தோடு அவனை உற்று நோக்க, அந்த ஒளிக்கதிரின் வீச்சு தாங்காமல் வித்யாகரன் பொசுங்கி விடுகிறான்.

வித்யாகரன் வாங்கிய வரத்தின்படி அசுரர்கள், தேவர்கள் கூடிய சபையிலே விநாயகப் பெருமான், தன் தேவியை மடியில் இருத்தியபடியே யாருடைய உதவியும் இல்லாமல், தன் பார்வையினாலேயே அவனை வதம் செய் கிறார்.

இதனை தரிசித்த முனிவர்கள், விநாயகரிடம், நீலவேணி தேவியை மடி யில் இருத்திய கோலத்துடன், என்றும் தாங்கள் யாகம் புரிந்த தாமிரபரணி நதிக்கரையின் ரிஷி தீர்த்தக் கட்டம் அருகே வீற்றிருந்து அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும் என விண்ணப்பிக்க, அதன்படியே விநாயகரும் அங்கே கோவில் கொண்டு அருள்பாலித்து வருவதாக தல வரலாறு கூறு கிறது.

முற்காலத்தில் மிகப் பிரம்மாண்டமாக இருந்த மணிமூர்த்தீஸ்வரர் கோவில், காலப் போக்கில் சிதிலமடைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்னர் ராஜகோபுரம் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது. இருந்தும் இன்னும் பிரகாரத்தின் கோட்டைச் சுவர்கள் மற்றும் முன் மண்டபங்கள் சிதிலமடைந்தே காணப்படுகிறது.

திருமணம் கைகூடும்

ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன் களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விஷேசமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்களுக்குத் தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

திருக்கோவில் சிறப்புக்கள்:

விநாயகப் பெருமானுக்கென ராஜ கோபுரம், கொடி மரம் ஆகியவற்றுடன் தனிப் பெருங்கோவிலாக அமையப் பெற்றுள்ளது மணிமூர்த்தீஸ்வரம். இங்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி அமையப் பெற்றுள்ளது. இங்கு சண்டி கேசுவரர் சன்னதியிலும் விநாயகரே சண்டிகேசுவரராக காட்சியளிக் கிறார்.

அமைவிடம்: திருநெல்வேலி மாநகர்., சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 3.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது மணிமூர்த்தீஸ்வரம் விநாயகர் கோவில்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...