திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி, இயக்குநர் பேரரசு மோதல்

 திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி, இயக்குநர் பேரரசு மோதல்

‘டைட்டில்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளயீடு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் சமீபத்தில் நடை பெற்றது. படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவருக்கும் தனது நன்றியைப் பதிவு செய்தார். பின்பு பேசிய ஸ்டுடியோ9 R.K.சுரேஷ் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார்.  ‘மைம் கோபி’ படத்தின் பெயரே ‘டைட்டில்’ என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது என்று கூறினார்.

இயக்குநர் விக்னேஷ், கதாநாயகன் விஜித்துடன் தனது நட்பு சிறுவயதில் இருந்து எவ்வாறு தொடங்கியது என்பதனை அழகாக வருணித்தார். நடிகர் ஜீவா மற்றும் ராஜ்கபூர் படத்தின் கதாநாயகன் விஜித்தை வாழ்த்தியதுடன் நிறுத்தாமல், ஒரு சிறிய படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்பதனை மீண்டும் பதிவு செய்தனர்.

இயக்குநர் ரகோத்து விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்தப் படத்தினை மக்களி டம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை பதிவு செய்தார். இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் படத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

தத்தோஶ்ரீ ராதாரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தி னார். தான் பேசிய அனைத்தையும் எவ்வாறு ட்ரெண்ட் ஆகிறது என்பதனையும் நக்கலாகப் பதிவு செய்தார். மேலும் ஒரு படம் என்றால் அந்தப் படத்தில் பணி யாற்றிய அனைவரும் அந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிக்கொள்ளவில்லை எனவும் ஏற்றிக்கொடுத்தால் வாங்கிக் கொள்ளாமல் இருக்கவா முடியும் எனவும் வினவி னார். ஒரு படத்தை காப்பாதணும்னா அது தமிழ்நாட்டு மக்களால் மட்டுமே முடியும்” என்றார். மேலும் “எல்லாரும் படத்தை திரையரங்கில் பார்க்கணும், OTTயில் பாத்தா வேலைக்கு ஆகாது. அத்தோடு நிறுத்தாமல், திரையரங்கம் சென்றால் படம் பார்த்துவிட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்” என்றார்.

அடுத்து பேசிய இயக்குநர் பேரரசு, ராதாரவியின் பேச்சை கண்டித்துப் பேசினார். மேலும் தனது பேச்சில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சாடினார். இயக்குநர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி கொடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனைக் கூறினார். ‘திருப்பாச்சி’ படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினைக் கூட தன் பாணியில் கூறினார்.

கே.பாக்யராஜ் பேசும்போது. “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கிய மான ஒன்றாகும். அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தைக் கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்தக் காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது. எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர் சனங்கள் எனக்கு எதிராக வரும். ‘சுவரில்லா சித்திரம்’ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது” என்று பேசினார்.

தனது ‘அந்த 7 நாட்கள்’ படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளைப் பதிவு செய்தார். மேலும் ‘முந்தானை முடிச்சு’ என்ற தனது படம் எவ்வாறு பிரபலமடைந்தது எனவும் தன் பாணியில் மக்களுக்குக் கொண்டு சேர்த்தது பற்றியும் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.

இறுதியாகப் பேசிய இயக்குநர் S.P.முத்துராமன், “ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடையச் செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல் திரை உலகில் காலடி எடுத்து வைப்பதற்குப் பொறுமை மற்றும் நம்பிக்கை தேவை.  அது உங்களிடம்  இருக்கின்றது. நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகணும், இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணணும். விட்டு கொடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்” என்று கூறினார்.

சலசப்பாகத் தொடங்கிய நிகழ்ச்சி சமரசமாகி சமாதானமாக முடிந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...