சிறுவாபுரி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 19 ஆண்டுக்குப் பிறகு நடந்தது
பொன்னேரி அருகே சிறுவாபுரியில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலே முக்தி என்றால், சிறுவாபுரி முருகனை நினைத்தாலே அவருடைய அருள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரசித்திப் பெற்ற முருகன் கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தாகும்.
சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் இந்த ஊர் அழைக்கப்படுகிறது. புராணக் கதைகளின்படி, ராமா யண காலத்தில், ராமருக்கும் அவருடைய மகன்களான லவ-குசனுக்கும் போர் நடந்த இடம் சிறுவாபுரிதான் என்றும் கூறப்படுகிறது. சிறுவர் போர் புரிந்த இடம் சிறுவாபுரி என்றானதாகக் கூறப்படுகிறது.
சிறுவாபுரி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதை உள்ளிட்டு கும்பாபிஷேக விழா முடியும் வரை கோவிலைச் சுற்றி உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளைத் தாமாக அகற்றிவிடுவதாகவும், கும்பாபிஷேகத்திற்கு பிறகு மீண்டும் அதே இடத்தில் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக் கப்பட்டது. பொதுவாக ஒரு கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாஷேகம் நடத்தப்படவேண்டும். 7 ஆண்டுகள் தள்ளி நடத்தப்படுவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் சிறுவாபுரி நகரமே விழாக் கோலத்தில் காட்சியளித்தது.
சொந்த வீடு என்பது தற்போது எல்லோருக்கும் பெரும் கனவு. அது வாய்க்கப் பெருவது சாதாரணம் அல்ல. அதற்கு ஆண்டவனின் அருள்வேண் டும். நம்மாக ஒரு சொந்த வீடு வாங்குவது என்பது எல்லாருக்கும் சாத்திய மாவது அவ் வளவு எளிதானது அல்ல. இப்படி சொந்த வீடு கனவோடு உள்ள வர்களுக்கு உந்துசக்தியாக இருந்து சொந்த வீடு கனவை நிறைவேற்றித் தருபவர் சிறுவாபுரி முருகன்.
அமைவிடம்
சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் 33 கிலோமீட்டர் பயணம் செய்து, அதன்பின் இடது புறமாகப் பச்சைபசேல் வயல்வெளிகளைக் கடந்து 3 கிலோ மீட்டர் தொலைவு போனால் சிறுவாபுரி முருகன் கோயிலை அடை யலாம்.
.சென்னை, செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர்மற்றும் பொன் னேரி வழியாகவும் முருகனை காணச் செல்லலாம்.
முருகனைப் பற்றி நிறைய பாடல்கள் பாடிய அருணகிரிநாதர் திருப்புகழில் சிறுவாபுரி முருகன் திருத்தலம் பற்றிப் பாடியுள்ளார்.
ஸ்ரீபாலசுப்ரமணிய சுவாமி நான்கரை அடி உயரத்தில் நின்ற திருக்கோலத் தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீபாலசுப்பிரமணியரைத் தவிர, இந்தக் கோயி லில் அமைக்கப்பட்டுள்ள எல்லா தெய்வங்களின் சிலைகளும் மரகதப் பச்சைக்கல்லால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலின் தல விருட்சமாக மகிழ மரம் திகழ்கின்றது.