அடிக்கடி சூடுபடுத்தி உண்ணக் கூடாத உணவுகளும் சேர்ந்து உண்ணக்கூடாத உணவுகளும்

இன்றைய அவசர உலகத்தில் நேரமின்மை என்பதை முதலில் நாம் சிக்க னப்படுத்துவது சமையல் நேரத்தைத்தான். சமையல் நேரத்தைச் சிக்கனப் படுத்த சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தி உண்பது சகஜமாகிவிட்டது.

ஒருமுறை சமைத்த ரசத்தை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடக்கூடாது என்று அந்தக் காலத்தில் பாட்டி கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் இப் போது எல்லா சமைத்த உணவையும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவ தென்பது சர்வ சாதாரணமாகி விட்டது. அதற்கான தொடக்கம் குளிர் பதனப் பெட்டி, மைக்ரோ வேவ் அடுப்பு என்று எங்கும் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள்!

ஒருமுறை சமைத்த உணவை மீதி வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது என்பது நிறைய வீடுகளிலும் வழக்கமாகி விட்டது. ஆனால் சில உணவுகளைத் திரும்பவும் சூடு பண்ணி உண்பது ஆபத்தானது என்கின் றனர். மருத்துவர்கள். அது என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.

*     பசலைக்கீரை, கேரட், செலரி, டர்னிப் போன்ற நைட்ரேட் சத்துக்கள் அதிகமுள்ள காய்கறிகளை மீண்டும் சூடு படுத்தினால் அவை புற்றுநோய் காரணிகளாக மாறி வெளிப்படும் அபாயம் உள்ளது. பசலைக்கீரையில் உள்ள இரும்புச்சத்தானது மீண்டும் மீண்டும் சூடானால் ஆக்ஸிஜனேற்றம் நடந்து தேவையில்லாத Free radicals உருவாகும்.

* பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக் கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.

*     சமைத்த சோறு கூட மீண்டும் சூடாக்கினால் விஷமாகிவிடும். காரணம், அரிசியில் இருக்கும் (Bacillus Cereus) பாக்டீரியா சமையல் சூட்டில் அழிந்து விடும். ஆனால் அதன் இனப்பெருக்கி உயிரிகள் (spores) அப்படியே இருக் கும். அவை நேரம் செல்லச் செல்ல பல்கிப் பெருகி உணவை விஷமாக்கி விடும். சமைத்த சோறு இரண்டு மணிநேரம் ஆவதற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். அல்லது மீதமான உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பிறிதொரு முறை சூடு பண்ணி சாப்பிடுவதாக இருந்தாலும் சூடு செய்த துமே சாப்பிட்டு விட வேண்டும்.

*     முட்டைகளை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் அதன் அதிகமான புரதச்சத்தில் உள்ள நைட்ரஜன் ஆக்ஸிஜனேற்றமாகி புற்று நோய் காரணி கள் உண்டாகும். சமைத்த முட்டைகளை ஆறியிருந்தாலும் பரவாயில்லை என்று அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

*     கோழிக்கறியும் அவ்வாறே! சூடு பண்ணி சாப்பிட்டால் அதன் புரதச்சத்து உருமாறி வயிற்றுக்கோளாறை ஏற்படுத்திவிடும்.

*     உருளைக்கிழங்கையும் சூடு பண்ணி சாப்பிடக்கூடாது. அதிலுள்ள சத்துக்களான விட்டமின் பி6, பொட்டாசியம், விட்டமின் சி இவையெல்லாம் உடலுக்கு நல்லதுதான். ஆனால் அடிக்கடி சூடு செய்வதால் நேரம் செல்லச் செல்ல இவை கெடுதல் செய்யும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சியை அதிகமாக்கி பொட்டுலிசம் என்னும் அபாயகரமான நோய் ஏற்படுத்தி விடும்.

*     காளான்கள் புரதச்சத்து மிக்கவை என்பதால் மீண்டும் சூடுபடுத்தினால் புரதச்சத்து சிதைந்து வயிறு கோளாறு ஏற்பட்டுவிடும். குளிர் சாதனைப் பெட்டியில் வைத்து பிறகு சாப்பிட நேர்ந்தாலும் சூடாக்காமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.

*     செக்கு எண்ணெயாகத் தயாரிக்கப்படும் ஒமேகா 3 வகைக் கொழுப்பு சத்துக்கள் மிகுந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் ஆளிவிதை எண்ணெய் போன்றவற்றை சமையலுக்குப் பொரிக்கும் அளவிற்கு சூடாக்குவது மிகவும் தவறு. சூடாக்கினால் அவை சிதைந்து கெட்டுப்போய் வயிற்றையும் கெடுத்துவிடும். இவற்றை முடிந்தவரை குளிர்ப்பதனப் பெட்டியில் வைத்து சமைக்காமல் சாப்பிடும் சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். பாக்டீரியா உருவாகி சிக்கு வாசனை வராமல் தடுக்கப்படும்.

அவ்வப்போது தேவைப்படும் அளவிற்கு மீதம் ஏற்படாமல் அளவாகச் சமைத்த உணவைச் சாப்பிடுவது நல்லது. நேரக் குறைவு காரணத்தினால் அதிகம் செய்து வைத்து பிறகு சாப்பிட நேர்ந்தாலும் மேற்கண்ட எச்சரிக் கைகளைக் கடைப்பிடிக்கவும்.

அதேபோல் சேர்ந்து சாப்பிடக்கூடாத எதிர் உணவுகளைப் பற்றி பார்ப்போம்.

ஒன்றுக்கொன்று எதிர்வினை புரியும் உணவுப்பொருட்களை சேர்த்துச் சமைப்பதும் சேர்த்து உண்பது உடல்நலனுக்குப் பெரும்கேடு விளைவிக் கும். சமையல் செய்யும் பெண்ணோ ஆணோ அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய எதிர் உணவுகளைத் தவிர்க்கவும்.

மீன் X முள்ளங்கி

பசலைக்கீரை X  எள்

திப்பிலி X மீன்

தயிர் X மீன்

திப்பிலி X தேன்

துளசி X  பால்

தேன் X  நெய்

பால் X  புளிப்பான பொருள்கள்

மோர் X  வாழைப்பழம்

இறைச்சி X  விளக்கெண்ணெய்

முள்ளங்கி X  பால்

அகத்திக்கீரை X ஆல்கஹால்

இவையெல்லாம் ஒன்றுக்கொன்று எதிர் உணவுகள். சேர்ந்து சாப்பிடும் போது உடலில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி நிரந்தர நோயாளி ஆக்கி விடும். ஜாக்கிரதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!