திருச்சிற்றம்பலம் – திரை விமர்சனம்
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய மூன்று படங் களில் இணைந்த மித்ரன் ஜவகர் – தனுஷ் கூட்டணி கிட்டத்தட்ட 12 ஆண்டு களுக்குப் பிறகு 4-வது முறையாக இணைந்துள்ள படம்தான் திருச்சிற்றம் பலம்.
அசுரன், கர்ணன் ஆகிய படங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து படங்களும் தோல்வி அடைந்த நிலையில் ஒரு பெரிய வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் தனுஷ்.
தனுஷுக்கு நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.
நாயகன் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார். இவர் தந்தை மற்றும் தாத்தாவுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இவரது தோழியான சோபனா (நித்யா மேனன்) கீழ் வீட்டில் வசிக்கிறார். சிறு வயதி லிருந்தே நாயகனும் சோபனாவும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வருகின் றனர்.
தந்தையின் அலட்சியம் காரணமாக சிறுவயதில் நிகழ்ந்த விபத்தில் அம்மா வையும், தங்கையையும் இழந்த நாயகன் அந்த விபத்துக்கு அப்பாதான் காரணம் என்று நினைத்து அவருடன் வருடக்கணக்கில் பேசாமல் இருக்கிறார்.
நாயகனுக்கு உறுதுணையாக அவரது தாத்தாவான பாரதிராஜாவும் தோழியான நித்யா மேனனும் உடன் இருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென நாயகனின் தந்தைக்கு பக்கவாதம் ஏற்படுகிறது.
அதன்பிறகு நாயகன் சந்தித்த மாற்றங்கள், காதல்கள், தோல்விகள் மற்றும் ஆச்சர்யங்கள் என்பதே மீதிக்கதை.
படத்தின் முதல் பாதி முழுக்க நகைச்சுவை காட்சிகளாலும் இரண்டாம் பாதி செண்டிமெண்ட் காட்சிகளாலும் திரைக்கதையமைத்து ரசிகர்களின் ரசனைக் கேற்ப படத்தை கொண்டு சென்றுள்ளார் இயக்குநர்.
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனரின் கதாபாத்திர தேர்வுகள் தான்.
அந்தளவுக்கு படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரத் தில் கச்சிதமாக பொருந்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து பல காட்சிகளில் நம்மை ஈர்த்திருக்கிறார் நடிகை நித்யா மேனன்.
சிறிது நேரமே வந்தாலும் ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் இரு வருமே தங்களுக்கான கதாபாத்திரத்தை அழகாகச் செய்துவிட்டு சென்றுள் ளனர்.
தனுஷின் தாத்தாவாக இயக்குநர் பாரதிராஜா மிகச் சரியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாகவும் நாயகனின் தந்தையாகவும் இந்த படத்தின் சென்டிமென்ட் காட்சிகளில் நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை மூலமாக சிறப்பான பங்களிப்பைச் செய் துள்ளார் அனிருத். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.
பிரியாத வரம் வேண்டும், யாரடி நீ மோகினி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் வந்த பல காட்சிகளை இந்தப் படம் நினைவுபடுத்து வதைத் தவிர்க்க முடியவில்லை.
‘திருச்சிற்றம்பலம்’ தனுஷ் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ரசிகர் களையும் கவரும் என்பது திண்ணம்.