இரவின் நிழல் -50 தொழில்நுட்பத் தகவல்கள்

 இரவின் நிழல் -50 தொழில்நுட்பத் தகவல்கள்

பார்த்திபன் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத் திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதே ஸ்பெஷல்.

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் வல்லவர் நடிகர் பார்த்திபன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எடுத்த ஒத்த செருப்பு ஒரே நடிகர் நடித்த படம் எனப் பேர் வாங்கியது. தற்போது உருவாகி இருக்கும் படம்தான் இந்த ‘இரவின் நிழல்’.

பார்த்திபனுடன் கலை இயக்குநர் விஜய் முருகன்

இது ஒரு நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம்.(NON LINEAR SINGLE SHOT MOVIE). 90 நாட்கள் ஒத்திகைக்குப் பின் 23 சிங்கிள் ஷாட்டுகளுக்குப் பிறகு இந்த முயற்சி படக்குழுவினர்களுக்கு கைகூடியுள்ளது.

இந்தப் படத்திற்காக 98 நாட்கள் ஒத்திகை, படப்பிடிப்பு என்று நடந்தது. 23 நாட்கள் முழுமையான படப்பிடிப்பு நடந்தது. 72 இடங்களில் 59 செட்கள் போடப்பட்டன. செட்டின் பின்னிணைப்பாகப் போடப்பட்ட செட்களையும் சேர்த்தால் 72 செட்கள் வரும்.

சென்னை கேளம்பாக்கம் அருகே  60 முதல் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத் தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கேமரா முதல் காட்சி ஒளிப்பதிவு செய்ய  ஆரம்பித்ததில் இருந்து இறுதிக்காட்சி முடியும் வரை தங்கு தடையின்றி  அந்தக் கேமரா பயணம் செய்யுமாறு அதில் பல்வேறு வகையான பின்புலங்களையும் நிகழ்விடங்களையும் 1970, 1980, 2000, 2010, 2020 என்று பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும் அந்த அரங்குகள் அமைக்கப்பட்டது.

அந்த செட்கள் நகரும்படியாகவும் திறந்து மூடும் படியாகவும் படப்பிடிப்புக்கு ஏற்ற வரையில் முன்னே நகர்ந்து வளைந்து ஏறக்குறைய வட்டமாகச் சுற்றி வரும் நிலையில் இந்த அரங்குகளின் அமைப்பு வேலைகளைச் செய்யப்பட் டிருந்தது. இதைப் போட்டு முடிக்க சுமார் 4000 தொழிலாளர்களின் உழைப்பு நாட்கள் தேவைப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முதலில் ஒரு பாடல்தான் இருந்தது. இப்போது 6 பாடல்கள் இருக்கிறது. ஒரே ஷாட்டில் வரும் படத்தில் 6 பாடல்கள் என்பது பெரிய சாதனை.

காலையில் 5 மணிக்கு ஷூட்டிங் ஒத்திகையை ஆரம்பித்தால் இரவு 12 மணிக் குத்தான் முடியும். 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடிகர்கள் நடித்துக்கொண்டே கேமராவுடனே  பயணிக்க வேண்டும். இப்படி 90 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

படப்பிடிப்புக்குப் பயன்படுத்தும் கிரேன்கள் இந்தப் படத்துக்குப் பயன்படுத்த வில்லை. பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் கிரேன்களைப் பயன்படுத் தினார்கள். அது 150 அடி உயரம் போகும்  வசதியுடையது. அப்படி பயன்படுத்தப் பட்ட 4 கிரேன் ஒவ்வொன்றுக்கும் நாள் வாடகையே பெரிய தொகை கொடுக் கப்பட்டது. இதெல்லாம் நடைமுறை சிக்கல். இதையெல்லாம் மேக்கிங் வீடியோ வில் பார்த்தால்தான் தெரியும்.

அது எப்படி நான் லீனியர் பாணியில் அதுவும் ஒரே ஷாட்டில் ஒரு முழு படத்தை யும் எடுக்க முடியும் என்ற கேள்விக்கான பதிலைத்தான் படம் திரையிடும்முன் முதல் 30 நிமிடங்கள் நமக்குத் திரையில் காட்டுகிறார்கள்.

படத்தின் உருவாக்கத்தை (மேக்கிங்) பற்றியும் அவர்கள் சொதப்பிய ஷாட்களைப் பற்றியும் நெகிழ்ச்சியோடு தங்களின் அனுபவங்களைப் படக்குழுவினர்கள் பகிர்ந் திருக்கிறார்கள். இதன் பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் முழுப்படமும் தொடங்குகிறது.

கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தை சலிப்பு ஏற்படாத வகையில் பார்வையாளர்களுக்குத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

கதாநாயகன் தனது 10 வயது முதல் 40 வயது வரை தன் வாழ்க்கையின் ஒவ் வொரு காலகட்டத்திலும் நடந்த கசப்பான மற்றும் இனிப்பான அனுபவங்களை ஒரு நாள் இரவில் அசைபோடுவதுதான் இந்த ‘இரவின் நிழல்’ கதை.

படத்தில் மொத்தம் 5 பேர் ‘நந்து’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா,பார்த்திபன் ஆகியோர் அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நந்துவாக நடித்துள்ளனர்.

அதேபோல் நாயகன் நந்துவிற்கு மொத்தம் 3 கதாநாயகிகள்.

சினேகா குமாரி, பிரிகிடா, சாய் பிரியங்கா ருத் ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத் தின் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இவர்கள் மூவருமே எந்த ஒரு இடத்திலும் சொதப்பாமல் தங்களின் கதாபாத் திரத்தை கவனத்தோடு செய்திருந்தனர்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் பிரிகிடா தன் கண்களால் நம்மை ஈர்த்து அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தின் மற்ற கதாபாத்திரங்களான ரோபோ சங்கர், வரலட்சுமி, ரேகா நாயர் போன்றோர் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சிரமமின்றி செய்திருக் கின்றனர்.

இந்தப் படத்தின் காட்சிகளுக்கு உயிரூட்டும்படியான ஆழமான பின்னணி இசையை அற்புதமாக கொடுத்து படத்தை உலகத்தரத்திற்கு எடுத்துச் சென்றுள் ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

படத்தில் காட்சிகள் நகர்ந்து கொண்டே இருக்கும் அவற்றுக்கு இணையாக ரஹ்மானின் பின்னணி இசையும் காட்சிகளோடு பொருந்திவரும். அதேபோல பாடல்களும் அதன் வரிகளும் ரசிக்கும்படி இருந்தது.

இந்தப் படத்திற்காக கலை இயக்குநர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத் துள்ளார்.

சிங்கிள் ஷாட் என்பதால் ஒவ்வொரு காலகட்டங்களும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொரு அறைக்கும் வேறு வேறு விதமான கலையை அமைத்து 1980,1990,2000 என பல்வேறு பரிமாணங்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக கலை இயக்குநர் விஜய் முருகன் மற்றும் அவரது குழுவுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட்.

பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ வில்சன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய் திருக்கிறார். இவரின் உழைப்பும் மெனக்கெடலும் ரொம்பவே அதிகம்.

முழு படத்தையும் சிங்கிள் டேக்கில் படம் பிடிக்க வேண்டும். இதில் சிறு பிழை ஏற்பட்டால் கூட மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்.

“ஒரு காட்சிக்காக 50 டேக் வாங்கினேன்” என பேட்டியளிக்கும் நடிகர், நடிகைகள் மத்தியில் ஒரே ஷாட்டில் ஒட்டுமொத்த படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குந ரும் நடிகருமான பார்த்திபன்.

திரைக்கதை, வசனம், பாடல், எடிட்டிங் என இந்த முறை அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார் பார்த்திபன்.

படத்தின் புரமோஷன் விழாவில் பார்த்திபன் பேசும்போது, “சினிமாவிற்கு  வந்து 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைவெளியில் நான் வழக்கமான படங்களை எடுப்பதைவிட வித்தியாசமான படங்கள் எடுக்க வேண்டும் என்று  நினைத்தேன். ஒரு ஆள் நடித்த படம் ‘ஒத்த செருப்பு’ படம் எடுத்து விட்டேன். இப்போது ஒரே ஷாட்டில் எடுத்திருக்கும் இரவின் நிழல் தயாராகியிருக்கிறது. கின்னஸ் பதிவிற்கு இது அவசியம். நான் இந்தப் படத்தை எல்லோருக்கும் போட்டுக் காட்டியபோது அவர்கள் எல்லோருமே இது வெட்டி ஒட்டப்பட்ட படம் என்றுதான் சொன்னார்கள். விஷயம் தெரிந்த இயக்குநர்களுக்கே இது புரியவில்லை யென்றால் சாதாரண ரசிகனுக்கு எப்படித் தெரியும். நாங்கள் எடுத்த மேக்கிங் வீடியோ ஆறு நிமிடத்துக்குள்ளேயே கட் ஆகிடும் அவ்வளவு பிரச்சினைகல் இருந்தது. ரிகர்சல் வந்தவருக்கு கோவிட் வந்திருக்கும் மறுநாள் வரமாட்டார். அவரைப் போலவே ஒரு ஆளை ஏற்பாடு செய்ய வேண்டும். பலருக்கு ரிகர்சல் மீது நம்பிக்கையே இல்லை.  அதை  டைம் வேஸ்ட் என்று நினைத்தார்கள். நான் நாடகத்திலிருந்து வந்ததனால் எனக்கு ஒத்திகை அவசியமாகப் பட்டது. நான் எடுத்த ‘உள்ளே வெளியே’ படத்தின் போது பெரிய ஹீரோக்கள் சிலரே ஒத்திகைக்கு வரத் தயங்கினார்கள்.

கதாநாயகனைப் பற்றி  பத்திரிகைகள் பலவாறு தாறுதாறாக எழுதுகின்றன. அதில் உண்மையில்லை நான் சொல்கிறேன் என்று ஹீரோ சொல்ல ஆரம்பிக் கிறான் இதுதான் படம். எல்லோரும் கூகுளில் தேடிப்பாருங்கள் இப்படி ஒரு டெக்னிகலோடு வந்த படம் இரவின் நிழல் படம் மட்டும்தான். இந்தப் படத்தைப் பற்றி அஜய் தேவ்கானை வைத்து எடுக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. தொடர்ந்து என் படங்களை இந்தியில் ரீ மேக் செய்ய ஆசைப்படுகிறார்கள்.  இந்தியில் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு எனக்குக் கிடைத்த சம்பளம் 5 கோடி, இதே படத்தை ஹாலிவுட்டில் டென்சில் வாசிங்டனை வைத்து எடுக்க இருக்கிறேன். அதற்கு எனக்குச் சம்பளம் 15 கோடி. அது எவ்வளவு பெயர் எடுத்துக்கொடுத்திருக்கிறது என்பதை இதன் மூலம் சொல்கிறேன்.

இந்த படத்தின் வசனம் (கெட்ட வார்த்தைகள்) மற்றும் சில காட்சி அமைப்புகளில் (அரை நிர்வாணம்) சில குறைகள் இருந்தாலும் பார்த்திபன் என்ற வித்தியாசமான கலைஞனின் இந்த புதிய முயற்சியைக் கண்டிப்பாகப் பாராட்டி வரவேற்கலாம். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மகுடம் இரவின் நிழல்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...