அமலா பால் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கடாவர்’

 அமலா பால் நடிப்பில் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘கடாவர்’

முன்னணி நட்சத்திர நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித் திருக்கும் ‘கடாவர்’ எனும் திரில்லர் திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது.

கொலை வழக்கு ஒன்று போலீஸ் உயரதிகாரி விஷால் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார். கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் க்ரைம் திரில்லர் திரைப்படம்.

இந்தப் படத்தின் மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் அமலா பால் அறிமுக மாகிறார். கடாவர் படம் குறித்து அமலா பால் கூறுகையில், “ஒரு கலைஞராக, என்னை நடிகையாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் நடிக்கிறேன். இத்தகைய ஒரு முடிவை எடுத்த பிறகு அதோ அந்த பறவை போல, ஆடை படங்களுக்குப் பிறகு கடாவர் கதை இதுவரை பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட ஒரு கதையாக இருந்தது.

நான் இந்தப் படத்தில் ஒரு தடய நோயியல் நிபுணராக நடிக்கிறேன். இதில் நடிக்க நான் நிறைய தயாராக வேண்டி இருந்தது. ஏனெனில் நாம் திரைப்படங்களில் பார்த்த வழக்கமான விசாரணைகள் போல இது இருக்காது.

கேரளாவின் மிகவும் பிரபலமான தடய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு போலீஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கதாபாத்திரத்துக்கு தயாராவதற்கு அந்தப் புத்தகத்தை வாசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த தொழிலைப் பற்றிய மேலும் நுணுக்கமான அறிவைப் பெற ஒரு தடய அறுவை சிகிச்சை நிபுணருடன் இரண்டு நாட்கள் செலவிட்டேன்.

என்னை போலவே இந்தப் படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையை வைத்திருந்த என் தயாரிப்பாளர்களான அஜய் பணிக்கர் மற்றும் பிரதீப் ஆகியோருக்கு ஆதர வாக இருக்க விரும்பினேன்.

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் படத் தொகுப்பாளராகப் பணியாற்றி யிருக்கிறார்.

பட பூஜையில்

டிஸ்னி+ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளம்- தற்போது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக திகழ்கிறது. இந்த டிஜிட்டல் தளம், இந்தியர்கள் தங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையிடும் முறையை மாற்றி அமைத்திருக் கிறது. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை இந்தியா முழுவதும் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையிலான உள்ளடக்கத்துடன் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் இயங்கி வருகிறது.

இந்த டிஜிட்டல் தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என எட்டு மொழிகளில் 1,00,000 மணி நேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. இத னுடன் உலக அளவில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வினையும் பிரத்யேகமாக அளிக்கிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...