முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்வு

 முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்வு

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதிவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபகி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக இருந்துள்ளார். இவருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாக வுள்ளது. மாலைக்குமேல் இரவில் சரியான தகவல் தெரியவரும். நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது. டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன் றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் 727 நாடாளுமன்ற உறுப் பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். ஆனால், 719 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்.

நாடாளுமன்றத்தில் உள்ள அறை எண் 73இல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருந் தனர். வாக்கு எண்ணிக்கையின்போது இந்திய தேர்தல் ஆணையத்தால் அனுமதி வழங்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மொத்தம் 31 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு பேனாவை பயன் படுத்தி எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 771 எம்.பி.க்களில் 8 பேர் வாக்களிக்கவில்லை. 763 எம்.பி.க்கள் வாக்களித்தனர். நாடு முழுவதும் உள்ள 4.025 எம்.எல்.ஏ.க்களில் 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட வில்லை. 3.991 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து இருந்தனர். இதனால் குடியரசு தேர்தலில் 99 சதவிகித வாக்குகள் பதிவாகின.

திரவுபதி முர்முவை நாடு முழுவதும் 44 கட்சிகள் ஆதரித்துள்ளன. மேலும் எதிர்க் கட்சிகளில் சில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக மாறியுள்ளன.

முர்முவுக்கு 65 சதவிகிதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. குடியரசு தேர்தலில் முர்மு வெற்றி பெற்றிருப்பதன் மூலம் முதல் பழங்குடியினப் இனப் பெண்  குடியரசாகும் பெருமையை திரவபதி முர்மு பெற்றுள்ளார். திரவுபதி முர்மு குரயரசுத் தலைவராகப் பதவியேற்கும் விழா வருகிற 25ஆம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

திரௌபதி முர்முக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள தால் அவரின் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளனர். லட்டுக்கள் தயார் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக  பொறுப்பேற்க உள்ள திரவுபதி முர்மு ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச்  மாவட்டத்தில் உள்ள உபர்பேடா கிராமத்தில் 1958 ஜூன் 20 ல் பிறந்தவர். திரவுபதி முர்மு பழங்குடியின பழக்கவழக்கப்படி 15 வயதிலேயே திருமணமாகி அதன் காரணமாக கடுமையான குடும்ப வன் முறையை எதிர்கொண்டவர்.

1979 ல் கல்லூரிப் படிப்பை முடித்த முர்மு உடனடியாக அரசு தேர்வெழுதி இளநிலை  உதவிளாளராக   மின் துறையில் இணைந்தார். எனினும் அந்த அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆசிரியர் பணிக்கு திரும்பினார். ஒடிசா தலைநகர் ஜார்பாடா பகுதியில் அமைந்துள்ள அரவிந்தர் ஒருங்கிணைந்த கல்வி மையத்தில் 1994 வரை ஆசிரியையாகத் தொடர்ந்தார். தந்தையிடம்  இருந்த பொதுவாழ்க்கை தொடர்பு முர்முவிடமும் தொற்றிக்கொள்ள 1997 ல் பா.ஜ.க.வில் இணைந்தார். தொடர்ந்து நடந்த தேர்தலில் முதல் பதவியே கவுன்சிலர்.

ஒடிசாவில் பா.ஜ.க.வின் வளர்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தி வந்த தேசிய தலைமை, ஒடிசாவின் பழங்குடி மக்களின் எண்ணிக்கையை குறிவைத்து அவரின் இந்த வெற்றிக்கு பரிசாக பழங்குடியின மோர்ச்சா அமைப்பின் தலைவர் பதவியை வழங்கியது. கட்சியில் இணைந்த சில வருடங்களிலேயே இவ்வாறு தேசிய தலைவராக உயர்ந்தார் முர்மு.

2000 ல் நடந்த ஒடிசா சட்டமன்ற தேர்தலில்  பிஜு ஜனதா தளமுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது பா.ஜ.க. இதில்  ராய்ரங்கப்பூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.  கூட்டணியில் முதல் முறை யாக அமைச்சராகவும் பதவி பெற்றார்.

2005 ல் நடந்த தேர்தலில் தனது சொத்து மதிப்பாக சிறு சேமிப்பையும், சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பதையும் பதிவு செய்து எளிமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி அடுத்த தேர்தலிலும் அமோக வெற்றிபெற்று மீண்டும் அமைச்சரானர் முர்மு.

அமைச்சராக இருந்த ஒன்பது ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பு, மீன்வளம், போக்குவரத்து, வணிகம் என பலதுறைகளில் சிறப்பாக பணியாற்றினார்.  தேசிய அளவில் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான விருதையும் வென்றார்.

2015 ஆம் ஆண்டு இவரை ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்கச் செய்தது பா.ஜ.க. தலைமை.. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் முர்மு.

தற்போது பதினாறாவது குடியரசு தேர்தலில் வெற்றிபெற்றிருக்கும் திரவுபதி முர்மு ஒரு சாதரண குக்கிராமத்தில் பிறந்து, கவுன்சிலர், எம் எல் ஏ, அமைச்சர், ஆளுநர் என படிபடியாக முன்னேறியிருக்கிறார். பழங்குடி மக்களின் முகமாக வும், இந்திய பெண்களின் முகமாவும்  காட்சியளிக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *