இலங்கையில் சிக்கல் தீருமா? சகஜ நிலை திரும்புமா?

 இலங்கையில் சிக்கல் தீருமா? சகஜ நிலை திரும்புமா?

இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று (20-7-2022) நடந்த ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிக வாக்குகள் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இலங்கையில் நீடித்து வரும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பொறுமையிழந்த அந்நாட்டு மக்கள், அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தின் பலனாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குருநாகல் லில் உள்ள மஹிந்த ராஜபக்சேவின் வீட்டிற்குப் போராட்டக்காரர்கள் தீ வைத் தனர்.

இலங்கையில் மேலும் மக்கள் போராட்டம் வலுவடைந்த சூழலில், அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை இடைக்கால அதிபராகத் தேர்வு செய்வதாக சபாநாயக ருக்கு கோத்தபய ராஜபக்சே கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து, இலங்கை யின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபரானார்.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் போர்க்கொடி தூக்கினர். பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர் ராஜினாமா செய்தார். அதன் பின்னரும் அவரது வீட்டுக்குப் போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர். இதன் பின்னரும் அவருக்கு இலங்கையில் கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில்தான் எதிர்ப்பையும் மீறி அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே.

தேர்தலில் விக்ரமசிங்கே வெற்றி

223 வாக்குகளில் 134 வாக்குகள் பெற்றார் ரணில் விக்ரமசிங்கே. இவரை எதிர்த் துப் போட்டியிட்ட டலஸ் அழகபெரும 83 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்று இருந்தனர். நான்கு வாக்குகள் செல்லாதவை. ரணிலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடந்து வருவதால் ஒரு வாரத்திற்கு பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜி.ஜி. பொன்னம்பலம், செல்வராஜ கஜேந்திரம் ஆகிய இரண்டு எம்.பி.க்கள் வாக் களிக்கவில்லை. தனது 89 வயதிலும் வாக்களிப்பதற்கு எம்.பி. ஆர். சம்பந்தன் வந்திருந்தார். அவரை கைத்தாங்கலாக இருவர் பிடித்து வந்தனர். 

இலங்கை பார்லிமெண்டில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு இன்று நடந்தது. மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில், 223 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்.பி. சமன்பிரியா ஹெராத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் குளுகோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்படியே பார்லிமென்ட் வந்திருந்து வாக்கு அளித்தார். அவருடன் கையில் குளுகோஸ் பாட்டிலும் கொண்டு வந்திருந்தனர்.

ஆளுங்கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.

தொடரும் போராட்டம்

மீண்டும் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரம சிங்கேவை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் மீது அடக்குமுறையைக் கையாள ரணில் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

நாளை முறைப்படி பார்லிமென்ட் வளாகத்தில் அதிபர் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சபாநாயகரை ரணில் கேட்டுக் கொண்டார். நாளை அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்கே கடந்து வந்த பாதை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான 73 வயது ரணில் விக்ரமசிங்க, 1993 முதல் 1994 வரையிலும், 2001 முதல் 2004 வரையிலும், 2015 முதல் 2018 வரையிலும் இலங்கையின் பிரதமராக இருந்துள்ளார். 2018ல் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவையடுத்து 2 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் பிரதமராகப் பதவி யேற்றார்.

மிதவாதியான ரணில் விக்ரமசிங்கே கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜ பக்சேவின் ஆதரவு பெற்றவர். பக்சே சகோதரர்களின் ஆளும் கட்சியின் வாக்குகள் பெற்றே ரணில் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். மாற்றத்தை எதிர் பார்த்து போராடிவரும் மக்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படுமா என்பது கேள்விக்குறியே. வெளியில் இருந்துகொண்டே பக்சே சகோ தரர்கள் இவரை இயக்கக்கூடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள் இலங்கை அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் நாட்டின் 25ஆவது பிரதமராக பதவியேற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை வர லாற்றில் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடம் கொண்ட ஒருவர் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...