வரவேற்பைப் பெற்றுள்ளது ‘நம்ம ஊரு சென்னை’ செஸ் ஒலிம்பியாட் பாடல்!

 வரவேற்பைப் பெற்றுள்ளது ‘நம்ம ஊரு சென்னை’ செஸ் ஒலிம்பியாட் பாடல்!

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தமிழக அரசு இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிட்டு உள்ளது.  வெளிநாட்டு செஸ் வீரர்களை வரவேற்கும் வகையில் ‘வெல்கம் டு நம்ம ஊரு சென்னை’  என்கிற வீடியோவைப் பார்ப்ப தற்கே மிக அழகாக இருக்கிறது. இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைர லாகி வருகிறது.

‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம செஸ், நம்ம பெருமை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தொடக்க விழா நடை பெறவிருக்கிறது.

இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வர உள்ள நிலை யில், ‘செஸ் ஒலிம்பியாட் 2022’ போட்டிக்கான சின்னம் சமீபத்தில் வெளியிடப் பட்டது.

‘செஸ் தம்பி’ என்ற இந்தச் சின்னம் தமிழக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. செஸ் விளையாட்டில் இருக்கும் குதிரை, வேட்டியைக் கட்டிக்கொண்டு வணக் கம் கூறி வரவேற்பதைப் போல அந்தச் சின்னம் அமைந்துள்ளது. இந்தச் சின்னத்தை தமிழக அரசு பிரபலப்படுத்தி வருகிறது.

2021ஆம் ஆண்டு நடக்க இருந்த இந்தப் போட்டியானது கொரோனா காரணமாக இணையவழியிலேயே நடைபெற்றது. அதில் இந்தியாவும் ரஷியாவும் கோப்பை யைப் பகிர்ந்துகொண்ட நிலையில், 2022ஆம் ஆண்டின் சர்வதேச ஒலிம்பியாட் போட்டி, ரஷியாவில் நடக்க இருந்தது. ஆனால், அங்கு போர் நடந்து வரும் காரணத்தால், தற்போது இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடல் படப்பிடிப்பு கடந்த 7-ம் தேதி இந்த சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி வெளியிட்டார்.

இந்தப் போட்டிக்கான முழு வருகைப் பாடலை தமிழக அரசு சமீபத்தில் வெளி யிட்டது.  இந்த ப்ரோமோ வீடியோ  3 நிமிடங்கள் ஓடக்கூடியது. இந்த முழு வீடியோ பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கிறது. நடினக் கலைஞர்கள் மகாபலிபு ரத்திலும், கோயில் மற்றும் நேப்பியர் பாலத்திலும் ஆடிப்பாடி வரவேற்கிறார்கள். இடையில் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றி பாடுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிரித்த முகத்துடன் வெள்ளை உடையில் நடந்து வந்து வரவேற்பதைப்போல அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடன மாடும் காட்சி கண்ணைக் கவருகிறது. இந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வெல்கம் டு நம்ம ஊரு சென்னை’ என தொடங்கும் இந்தப் பாடல், செஸ் போர்டைப் போலவே பெயிண்ட் செய்யப்பட்ட நேப்பியர் பாலத்தில் சதுரங்கக் காய்கள் போல, கறுப்பு வெள்ளை ஆடை அணிந்து அந்த வீடியோவில் ஆடு வதைப் பார்க்க அழகாக இருந்தது. விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த செஸ் ஜாம்பவான்கள் பலரையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த நேப்பியார் பாலத்தில் பொதுமக்கள், மற்றும் இளைஞர்கள், இளைஞிகள், மாணவி, மாணவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

வீடியோ காண…

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...