நடிப்பு சூரர் சூர்யாவுக்கு தேசிய விருது! ரசிகர்கள் மகிழ்ச்சி

 நடிப்பு சூரர் சூர்யாவுக்கு தேசிய விருது! ரசிகர்கள் மகிழ்ச்சி

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சூர்யாவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. நடிகர் சூர்யா தேசிய விருதை வெல்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதிலும் இருந்து 295 திரைப்படங்கள் இந்த விருதுக்கு அனுப்பப் பட்டிருந்தன. அதில் இருந்து 66 திரைப்படங்களும், 140க்கும் மேற்பட்ட டாக்கு மெண்டரி படங்களையும் ஜூரி மெம்பர்கள் பார்த்தனர்.

அதிலிருந்து சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு விருதுகள் வழங்கப் படும். அந்த வகையில் 10 ஜூரி மெம்பர்களும் இன்று காலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்து தேசிய விருது வென்ற வர்களின் பட்டியலை வழங்கினர்.

அதில் இடம்பெற்றுள்ள வெற்றியாளர்களின் விவரங்கள் தற்போது வெளியிடப் பட்டு உள்ளன. இந்த விருதுகள், திரைத்துறையினரின் மிகப் பெரிய அங்கீகார மாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழில் வெளியான ‘சூரரைப் போற்று’ சிறந்த திரைப்படத்திற் கான தேசிய விருதை வென்று அசத்தியுள்ளது. மேலும் 5 விருதையும் இந்தப் படம் பெற்றிருக்கிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படம் உண்மைச் சம்பவ அடிப்படையில் கதைக்களத்தின் பின்னணியில் உருவாகியிருந்தது.

சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் பாத்திரம் ஒருவித புதிய அதிர்வலை களை ஏற்படுத்தியதாக, படம் வெளியான போது பலரும் பாராட்டியிருந்தனர்.

சிறந்த திரைக்கதைக்கான விருதும் ‘சூரரைப் போற்று’ படத்திற்கு கிடைத்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, ஷாலினி உஷா இருவரும் இந்த விருதினை பெறுகின்றனர்.

சூர்யா தயாரித்துள்ள தியேட்டர் எக்ஸ்பீரின்ஸ் படமான சூரரைப் போற்று, கொரோனா பரவலால் துரதிருஷ்டவசமாக அமேசான் ஓ.டி.டி.யில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பை அளித்தனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி சூரரைப்போற்று படத்தை இயக்குநர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கியிருந் தார். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாகக் கருதப்படும் சூரரைப் போற்று படத்தில் சூர்யா அந்த கேரக்டராகவே மாறி நடித்திருந்தார்.

குறிப்பாக, பணம் இல்லாமல், தவித்ததும் விமானத்தில் கட்டணம் அதிகமாகி விட்டதால் அவர் பயணம் ரத்தாகிறது. ஊருக்குச் செல்ல பணம் கேட்டு சக பயணி களிடம் பணம் கேட்டு அவர் நடித்திருந்த அந்தக் காட்சிகள் மிரட்டலாக அமைந் திருந்தது. அனைவரையும் கண்கலங்க வைத்தன. இந்நிலையில், இந்தப் படத் திற்கு எதிர்பார்த்ததைப் போலவே தேசிய விருதுகள், அதுவும் பல்வேறு பிரிவு களில் கிடைத்துள்ளது ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.

குறிப்பாக, சூரரைப் போற்று படத்தில் சூரியாவின் நடிப்பில் உயிர் இருந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்து எளிய மக்களும் விமான சேவையைப் பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் கட்டணம் குறைவாக விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்காக அவர் போடும் திட்டங்கள், அதற்காக வங்கிகளிடம் கடன் பெறத் துடிக்கும் மனவேதனையை நடிப்பில் முழுமையாக வெளிப்படுத்தி யிருந்தார்.

பொதுவாக வாழ்க்கை  வரலாற்றுப் படத்தை எடுக்கும்போது ஒரு டாகுமெண்ட்ரி யாகப் போய்விட வாய்ப்பிருக்கிறது. அதிலும் அதிர சண்டைக்காட்சிகளோ பிரம்மாண்டப் பாடல்களோ இல்லாத கதையில் ஒரு மாஸ் ஹீரோ அந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க மாட்டார்கள். ஆனால் நடிப்பு சூரர் சூர்யா அந்தக் கதையின் வலிமையைத் தெரிந்துகொண்டு தானே தயாரித்தும் சிறப்பாக நடித்திருந்ததே இந்தப் படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்திருப்பதற்குக் காரணம். இந்தப் பட வெற்றியின் எல்லா புகழும் சூர்யாவையே சாரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.  

இந்நிலையில் சூரரைப் போற்று ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றதை அடுத்து நடிகர் சூர்யா உருக்கமான பதிவை  வெளியிட்டுள்ளார். மேலும் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் மேலும் ஸ்பெஷல் ஆகிவிட்டது.

“வணக்கம்.. அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.. ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு   ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப் படத்திற்கு  இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது. தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டு கள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.  தேசியவிருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி. பிரகாஷ், அபர்ணா பால முரளி,  இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள். சிறந்த திரைப்படத்தை தயாரிக் கத் துணைநின்ற படக்குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது.

மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணைநிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன்..   என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்.. இந்த தேசியவிருது அங்கீகாரம், நல்ல திரைப்படங் களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக் கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.  அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..” என்று தெரிவித்துள்ளார்.

நடிப்பு சூரர் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களோடு இன்னும் பல உரிய விருதுகளையும் பெற வாழ்த்துகிறது மின்கைத்தடி.

தேசிய விருது பெற்றவர்களின் விவரங்கள்

சிறந்த பி.ஜி.எம்.க்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு கிடைத்திருக்கிறது. சிறந்த ஃபீச்சர் படமாக சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதைக்கான விருது சூரரைப் போற்று படத்திற்கு கிடைத்திருக் கிறது. சூரரைப் போற்று படத்திற்கு அடுத்தடுத்து 5 விருதுகள் அறிவிக்கப்பட் டுள்ள தென்னிந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிறந்த படம்: ‘சூரரைப்போற்று’ படத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்: இந்த விருது இரண்டு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கும், ‘தி அன்சங் வாரியர்’ படத்துக்காக அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: ’சூரரைப்போற்று’ படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக் கப்பட்டுள்ளது.

சிறந்த உறுதுணை நடிகர் (பெண்): சிவரஞ்சனியும் சில பெண்களும் படத்துக்காக லக்ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்: சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வசந்த் இயக்கி யிருந்தார். சிறந்த மலையாளப் படமாக ‘திங்கலஞ்ச நிச்சயம்’ (Thinkalazhcha Nishchayam) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை): தமிழில் ‘சூரரைப்போற்று’ படத்தின் சிறந்த பிண்ணனி இசைக்காக ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு தேசிய விருது அறிவிக் கப்பட்டுள்ளது.

பெஸ்ட் எடிட்டிங்: ‘சிவரஞ்சினியும் சில பெண்களும்’ படத்துக்காக எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத்துக்கு தேசிய விருது அறிவிப்பு.

சிறந்த திரைக்கதை: ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதாகொங்காரா இருவருக்கும் ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் best screenplay (diologue writer): ‘மண்டேலா’ படத்தின் சிறந்த திரைக்கதை வசன எழுத்தாளர் விருது மடோனே அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது: மண்டேலா படத்துக் காக அதன் இயக்குநர் மடோனாஸ் அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெஸ்ட் ஸ்டண்ட் விருது: ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக ராஜசேகர், மாஃபியா சசி மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இசையமைப்பாளர் விருது: தெலுங்கில் வெளியான ‘ஆலா வைகுந்தபுர முலோ’ படத்தின் இசையமைப்புக்காக இசையமைப்பாளர் தமன் சிறந்த இசை யமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறந்த பெண் பின்னணி பாடகர்: ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்துக்காக நஞ்சம்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆண் பின்னணி பாடகர் விருது ராகுல் தேஷ் பாண்டே ‘மீ வசந்தராவ்’ மராத்தி படத்துக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த உறுதுணை நடிகர்: அய்யப்பனும் கோஷியும் படத்துக்காக பிஜூ மேன னுக்கு அறிவிக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர்: அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய கே.ஆர்.சச்சிதா னந்தனுக்கு (மறைவு) சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறவிக்கப் பட்டுள்ளது.

பெஸ்ட் புக் ஆன் சினிமா : கிஸ்வர் தேசாய் எழுதிய ‘தி லாங்கஸ்ட் கிஸ்’ புத்தகத் துக்கு வழங்கப்பட்டது.

திரைப்படங்களுக்கு உகந்த மாநிலமாக (Most Film Friendly State) மத்தியப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...