கல்வியில் சிறந்த கண்ணகி நகரை உருவாக்க இறையன்பு மும்முரம்

 கல்வியில் சிறந்த கண்ணகி நகரை உருவாக்க இறையன்பு மும்முரம்

சென்னை கண்ணகிநகர் பகுதியில், பல மாற்றங்களைக் கொண்டுவந்து முதல் பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கும் முயற்சியில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஈடுபட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கண்ணகி நகர் பகுதி குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதியாகத்தான் பார்க்கப்படுகிறது. இங்கு அதிகம் படிக்காதவர்கள் இருப்பதாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிலை சமீபகாலமாக மாறி வருகிறது.

கண்ணகிநகர் பகுதியில் 23,704 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய மக்கள், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ளோராகவும் தினக்கூலி வேலை செய்வோராகவும் உள்ளனர் இதனால் இப்பகுதி மக்களால், தங்களது பிள்ளை களை பள்ளிப் படிப்புடன் நிறுத்தி விடுகின்றனர். மேற்கொண்டு கல்லூரிப் படிப்பை அவர்கள் தொடரமுடியாத சூழல் நிலவிவந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு மாரிச்சாமி என்பவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மக்கள் நலச் சங்கத்தை தொடங்கினார். அதன்பிறகு தலைமைச் செயலாளர் இறையன்பு வழிகாட்டுதலின்படி கண்ணகி நகர் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுள்ளன.

குறிப்பாக 12 மையங்களில், 650 மாணவர்களுக்கு மாலை நேரப் பயிற்சி வகுப்புகள், பறை இசை, கராத்தே, குத்துச்சண்டை, யோகா, சிலம்பம், கபடி, வாலி பால், சதுரங்க விளையாட்டு, கேரம்போர்டு, மியூசிக் போன்ற பல்வேறு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அப்பகுதி சிறுவர்கள் பண்பாட்டு பயிற்சிகளான பறை இசை, நாடகம் போன்ற வற்றில் கூடுதல் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

இங்கு பயிற்சி கொடுக்கப்படும் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்று தங்களது தனித்திறமையையும் வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றால் அதற்குப் படிக்க வேண்டும் என்று கூறுவதால், சிறுவர்கள் படிப்பையும் தொடர்கின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் நிலவொளி கல்வியின் மூலம் 60 நபர்களுக்கு எழுத வும், படிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பயின்ற வைதேகி என்ற பெண்மணி அதே பயிற்சிப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் தனது பேரக் குழந்தையுடன் படித்து 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 4 பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறுள்ளார்.

கணவனை இடிந்த வைதேகி சுமார் 24 வருடங்கள் கழித்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால் ஆவின் பால் பண்ணையில் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

35 வயது அமுதா, 10ஆம் வகுப்புப் படித்துத் தேர்ச்சிப் பெற்று அரசுப் பள்ளியில் சமையல் வேலை செய்கிறார். மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.க்கான பயிற்சி களை வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சியைத் தழுவிய சிலர் படிப்பைத் தொடர முடியாமல் சூழலில் இருந்தவர்களுக்கு உரிய பயிற்சி கொடுத்து மீண்டும் தேர்ச்சி பெற வைத்து மேற்படிப்பைத் தொடர வழிவகை செய்திருக்கின்றனர்.

2018-2019ம் ஆண்டு 10 மாணவர்களையும், 2019-2020ம் ஆண்டு 18 மாணவர்களை யும் 2020 2021 ஆண்டு 35 மாணவர்களையும், 20212022ஆம் ஆண்டு 55 மாணவர் களையும் விரும்பிய கல்லூரியில் கேட்ட பாடப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாகப் படிக்க வாய்ப்பு இல்லாத மாணவர்களைத் தலைமைச் செயலாளர் இறையன்பு படிக்க வைத்து வருகிறார். அதேபோல் இந்த ஆண்டும் 52 இந்த மாணவர்கள் அனைவரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பதும், இதில் அதிகப்படியாக மாணவியர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிலர் தாய் தந்தையை இழந்தவர்கள். மதிப்பெண்கள் மிகக் குறைவாக இருந்தாலும் அவர் களைச் கல்லூரியில் சேர்த்து வைப்பதுடன் கல்விச் செலவையும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள்.

மாலை நேரப் பயிற்சி வகுப்பில் பயின்ற 31 மாணவர்கள் ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரகத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் நினைவாக விண்ணில் செலுத்திய மிகச் சிறிய (50 கிராம்) செயற்கைக்கோள்களைச் செலுத் தும் குழுவில் இணைந்து தங்களுடைய பங்களிப்பை வழங்கியதன் மூலம் கின்னஸ் புக் ஆப் ரெக் கார்ட், நேஷனல் புக் ஆப் ரெக் கார்ட், ஏசியன் புக் ஆப் ரெக் கார்ட் போன்ற உலக சாதனை புத்தகத்தில் கண்ணகி நகர் பகுதியில் சாதனை படைத்தவர்கள் என்ற பெயரைப் பதிவு செய்துள்ளார்கள்.

தலைமைச் செயலாளர் மூலம் படித்த, படித்துக் கொண்டிருக்கின்ற 54 மாணவர் கள் மாலை நேரப் பயிற்சி வகுப்பில் ஆசிரியராக மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள்.

தலைமைச் செயலாளர் இறையன்பு, கடந்த ஓராண்டில் மட்டும் கண்ணகி நகர் பகுதியின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக மூன்று முறை வருகை தந்து மாணவர் களுடன் கலந்துரையாடியுள்ளார். இதுமட்டுமல்லாமல் தமிழக முதல்வரையும் கண்ணகி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கண்ணகி நகர் இனி கல்வி நகராக மாறிவிடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

கொரோனா ஊரடங்கு காலங்களில் தலைமை செயலாளர் இறையன்பு மூலம் 49,800 நபர்களுக்கு உணவும், 5,900 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களையும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலம் மக்கள் நலச்சங்கம் சார்பில் மாணவர்கள் வழங்கி யுள்ளனர். பெருமழைக் காலங்களில் மாணவர்கள் உணவு சமைத்து பகுதி மக்களுக்கு வழங்கி தங்களுடைய சமூகக் கடமைகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், ஒழுக்கத்து டனும், நேர்மையுடனும், சமூகச் சிந்தனையுடனும் செயல் படுவதற்கு மாணவர் களுக்குப் பயிற்சிகள் வழங்கி வருகிறது டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தங்கள் பகுதியில் மரம் நடுவது. தூய்மைப் பணிகளைச் செய்வது எனத் தங்களுடைய நற்சிந்தனையின் மூலம் பல மாற்றங்களை இப்பகுதியில் ஏற்படுத்தி வருகிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...