இன்றைய தினப்பலன்கள் (25.07.2022) | அ.மோகன்ராஜ்

 இன்றைய தினப்பலன்கள் (25.07.2022) | அ.மோகன்ராஜ்

மேஷம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். சிறு மற்றும் குறுந்தொழில்களில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய மாற்றத்தினை உருவாக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆபரணங்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வரவு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.
ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய அணுகுமுறையின் மூலம் காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை : காலதாமதமான நாள்.
புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

கடகம்

வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். எதிலும் தனித்து செயல்படுவீர்கள். மந்திரம் சார்ந்த விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.
பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ஆயில்யம் : சோர்வு நீங்கும்.

சிம்மம்

தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செய்தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பூரம் : லாபம் மேம்படும்.
உத்திரம் : சாதகமான நாள்.

கன்னி

இளைய சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேளாண்மை சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடலில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய வகை ஆடைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவலைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : குழப்பம் நீங்கும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆன்மிக பயணங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : நம்பிக்கை ஏற்படும்.

விருச்சிகம்

உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : மந்தமான நாள்.

தனுசு

புதுவிதமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : சிந்தனைகள் உண்டாகும்.
பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம்

மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். மனதில் இருந்துவந்த கடன் தொடர்பான கவலைகள் குறையும். பயணங்கள் செல்லும் பொழுது உடைமைகளில் கவனம் வேண்டும். வீடு மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : பிரச்சனைகள் நீங்கும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மாற்றமான நாள்.

கும்பம்

உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : புரிதல் உண்டாகும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.

மீனம்

பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தொழிற்சங்கம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கால்நடை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மேன்மை

நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
பூரட்டாதி : பொறுமை வேண்டும்.
உத்திரட்டாதி : திருப்திகரமான நாள்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...