வார ராசிபலன்கள் !! 25-07-2022 முதல் 31-07-2022 வரை | அ.மோகன்ராஜ்

 வார ராசிபலன்கள் !! 25-07-2022 முதல் 31-07-2022 வரை | அ.மோகன்ராஜ்

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே..!! இந்த வாரம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய செயல்பாடுகளில் தந்தையின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டு வியாபார பணிகளில் சில மாற்றத்தை செய்வீர்கள். உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்க்கை துணைவர் இடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நல்ல மாற்றத்தினை உருவாக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள்.

வழிபாடு :
முருகப்பெருமானை வழிபட மேன்மை உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே..!! இந்த வாரம் கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். இழுபறியாக இருந்துவந்த வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கலைத்துறை சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். மாணவர்கள் பாடங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

வழிபாடு :
மகாலட்சுமியை வழிபட சுபிட்சம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே..!! இந்த வாரம் மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அமைதியான சில செயல்பாடுகள் முன்னேற்றமான வாய்ப்புகளை உண்டாக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இழுபறியான தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகம் ரீதியான முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். செய்தொழிலில் சில மாற்றத்தினை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள்.

வழிபாடு :
பெருமாளை வழிபட சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே..!! இந்த வாரம் கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். புதுவிதமான வியூகங்களை செயல்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதலும், தெளிவும் ஏற்படும்.

வழிபாடு :
வராஹி அம்மனை வழிபட காரியசித்தி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே..!! இந்த வாரம் சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கல்வி தொடர்பான பணியில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் விலகும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷ யங்களில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். இல்லற வாழ்க்கையில் புரிதல் மேம்படும். கோப உணர்வுகளை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வழிபாடு :
சிவபெருமானை வழிபட நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே..!! இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி பிறக்கும். வியாபார பணிகளில் சில மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை செய்து முடிப்பீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். மாமியார் வழியில் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

வழிபாடு :
ராமரை வழிபட எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே..!! இந்த வாரம் செயல்பாடுகளில் விவேகத்தை கடைபிடிக்கவும். பழைய நினைவுகளால் ஏற்பட்ட சோர்வு நீங்கி புத்துணர்ச்சியை பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். நெருப்பு சார்ந்த வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். காது தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும்.

வழிபாடு :
லட்சுமி ஹயக்ரீவரை வழிபட ஞாபகசக்தி மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே..!! இந்த வாரம் நண்பர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை குறைத்து கொள்ளவும். இனிமை கலந்த பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். இழுபறியான வழக்கு சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் அவ்வப்போது ஏற்படும். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்லவும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும்.

வழிபாடு :
தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த காரியம் நிறைவேறும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே..!! இந்த வாரம் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும். இணையம் தொடர்பான செயல்பாடுகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். வாழ்க்கை துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படுவது லாபகரமான சூழ்நிலைகளை உருவாக்கும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

வழிபாடு :
குருமார்களை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே..!! இந்த வாரம் பணிபுரியும் இடத்தில் எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடனும் நடந்து கொள்ளவும். எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவது முன்னேற்றத்தினை ஏற்படுத்தும். துரித வகை உணவுகளை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து அதற்கு தகுந்தாற்போல சில முடிவினை எடுப்பீர்கள்.

வழிபாடு :
ஆஞ்சநேயரை வழிபட நினைத்தது நினைத்த நேரத்தில் நடைபெறும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே..!! இந்த வாரம் குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். உங்களின் மீதான மதிப்பு வெளிவட்டாரத்தில் மேம்படும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறு தூர பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

வழிபாடு :
அய்யனாரை வழிபட எதிரிகள் பயம் நீங்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே..!! இந்த வாரம் தம்பதியர்களுக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இனிப்பு சார்ந்த உணவுகளில் கவனம் வேண்டும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கல்வி சார்ந்த செயல்பாடுகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிக பணிகளில் விதண்டாவாத கருத்துக்களை குறைத்துக் கொள்வது நல்லது. பேச்சுக்களில் அதிகாரம் மேம்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் ஏற்படும்.

வழிபாடு :
ராகவேந்திரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...