இன்று நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு: சீமான் வெளியிடுகிறார்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயல்பாட்டு வரைவை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிடுகிறார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் மும்முரம் காட்டி வருவதுடன், தேர்தல் அறிக்கைகளையும் தயார் செய்து வெளியிட தொடங்கியுள்ளன. அதன்படி அதிமுக, தவெக கட்சிகள் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டன. தற்போது நாம் தமிழர் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட தயாராக உள்ளது.

மற்ற கட்சிகளைப் போல் தேர்தல் வாக்குறுதிகளை வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி எப்படி அமையும் என்பதற்கான முழுமையான விவரங்களுடன் கூடிய ‘ஆட்சி செயல்பாட்டு வரைவாக’ வெளியிட இருக்கிறது நாதக. இதன் மூலம் மாற்று அரசியலை விரும்புவோரை தன் பக்கம் ஈர்ப்பதே கட்சியின் நோக்கம். அந்தவகையில் சென்னை கிண்டியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாதக ஆட்சி செயல்பாட்டு வரைவு அறிக்கையை வெளியிடுகிறார்.

விளம்பர அரசியல் செய்யமாட்டோம், மக்கள் அரசியல் தான் நாம் தமிழர் கட்சியின் இலக்கு என்று சீமான் முழங்கி வரும் சூழலில் கல்வி, மருத்துவம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த புரட்சிகரமான திட்டங்கள், அதிரடியான அறிவிப்புகள் இந்த வரைவில் இடம்பெறலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!