யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’

 யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘மெடிக்கல் மிராக்கல்’

சந்தானம் நடிப்பில் ‘ஏ1’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ படங்களை இயக்கிய ஜான்சன் அடுத்த தாக இயக்கும் படத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மெடிக்கல் மிராக்கல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

யோகிபாபு நாயகனாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

யோகி பாபுவுக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். ஏற்கெனவே ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப குழுவினராக இசை – சித்தார்த் விபின், ஒளிப்பதிவு – S.மணிகண்ட ராஜா, எடிட்டிங் – தமிழ்குமரன், கலை இயக்கம் -ராஜா A, பாடல்கள் – ரோகேஷ், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் V, தயாரிப்பு மேற்பார்வை – கே.ஆர்.பாலமுருகன், மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (AIM) ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

முழுக்க முழுக்க அரசியல் நகைச்சுவையாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

திரில்லர், காதல், குடும்பப் படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப் பினர் ரசிப்பார்கள். ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண் டாடுவார்கள்.

நகைச்சுவை படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியைத் தரும். ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங் கள் தருவதென்பது எளிதல்ல. அந்த வகையில் தமிழ் திரையுலகில் பெரும் வெற்றியை குவித்து அனைவராலும் கொண்டாடப்படும் என நம்பப்படுகிறது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.