5000 கழிப்பறைகள் கட்ட உதவிய சேவகி

 5000 கழிப்பறைகள் கட்ட உதவிய சேவகி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  பொது மக்களிடையே கழிப்பறைகள் கட்டு வதற்கு  மானியம் மற்றும் அதற்குரிய வழிகாட்டுதல் முறைகள் பற்றிய விழிப் புணர்வை  ஏற்படுத்தி வருகிறார் மதுரை மாவட்டம் திருமங்கலம்  பகுதியில்  மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாள ராகப் பணியாற்றும் செல்வி.

நிர்மல் பாரத் திட்டத்தில்சுகாதாராத்  தூதுவராகவும், தூய்மைக் காவலர்களுக்கு முன்னோடி  ஊக்குவிப்பாளராகவும்  திகழும்  செல்வி, தூய்மை  இந்தியா திட்டத் தில் இணைந்து சேவையாற்ற கிராம ஊராட்சிகளுக்குச் சென்று  கழிப் பறையின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்ததால், தான் வாழும் கிராமத்தை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி ஊர் மக்களிடம் நன் மதிப்பையும் பெற்றிருக் கிறார்.

கொரோனா தொற்று முன்பு வரை 5000க்கும் மேலான கழிப்பறைகள் கட்டு வதற்கு உதவி புரிந்திருக்கிறார் செல்வி. இவரது சேவைகளுக்காக 11 முறை மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகள் உள்பட தமிழகம் மற்றும் பீகார் மாநிலம் உள்ளிட்ட பல்வேறு பொது அமைப்புகளிடமிருந்தும்  2022ஆம் ஆண்டு வரை 52 விருதுகள் பெற்றிருக்கிறார்.  2019ல்  மத்திய அரசு மகா உத்சவ் விருதுவழங்கிக் கௌரவித்தது. 

செல்விக்கு இரண்டு மகன்கள்,  ஒரு பெண்.  கணவர்  கூலி வேலை  செய்கிறார். தன் குடும்பம் ஏழ்மை  நிலைமையில்  இருந்தாலும்  மற்றவர்களுக்கு கழிப்பறை கள் கட்ட உதவி புரிவதற்காக யாரிடமும் எந்தப் பணமும்  கேட்பதில்லை. அப்படி அன்பாகக் கொடுக்க முன்வந்தாலும் தவிர்த்து விடுகிறார். செல்வியிடம் பேசி னோம்.

இந்த எண்ணம் எப்படி வந்தது?

என்னோட சின்ன வயசிலிருந்து  சமூக சேவையில் ஈடுபட்டு  வருகிறேன். மக்கள் கலெக்டர் ஆபீஸ் போனால் யாரைப் போய் பார்க்கணும், எங்க பார்ம் வாங்கி என்ன எழுதணும் என்று தெரியாது என்பார்கள். அதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பேன்.

ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைஆதார் கார்டு மற்றும் மகளிர் சுய உதவிக் குழு மூலமாக லோன்  வாங்கித் தருவது   போன்ற உதவிகள் செய்து  வந்தேன். அதன் தொடர்ச்சியாக, தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு அந்தத் திட்டத்தின்கீழ் பணிபுரிய ஆர்வம் ஏற்பட்டது.

எங்கள் சக்கிமங்கலம் ஊரில் திறந்தவெளியில் கழிப்பறைகளாகப் பயன்படுத்திய தால்  பெண்கள், குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு  ஆளானார்கள்.

என்ன செய்யலாம் என்று யோசித்து விடியற்காலையில் திறந்த வெளிக்குச்  சென்றுவிட்டு திரும்பும்போது   விசில் அடித்து திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது. மேலும்  அந்த மலத்தில் உட்காரும் ஈ நம் வீடுகளுக்கும்  வரும்.  இதனால் தொற்று நோய் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள்  பாதிக்கப்படுவார்கள்.  உங்கள் குழந்தைகளுக்கு  கொக்கிப்புழு, நாடாபுழு உருவாகி உடலில்  ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்படும். ஒவ்வொருவருக்கும் வீடு எப்படி முக்கியமோ  அதுபோல கழிப்பறை முக்கியம்  என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தினேன்.

இந்த விளக்கத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள். எங்கள் கிராமத்தைச் சுற்றி யுள்ள மேலூர், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒன்றியங்கள் முழுவதும் உள்ள கிராமங்களில் தனிநபர் கழிப்பறை மற்றும் பொதுக்  கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இதை மனதிற்கொண்டு அரசின் திட்டங்களான “வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுங் கள். மத்திய, மாநில அரசுகள்  சேர்ந்து ரூ.12,000 மானியம் தருவார்கள்”  என்று  பொதுமக்களிடம் எடுத்துச்  சொன்னேன். முதலில்  தயங்கிய கிராம மக்கள், கழிப் பறை அவசியம் என்பதை உணர்ந்து வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்ட ஆரம்பித் தார்கள்.

முதலில் நான் குடியிருக்கும் பகுதியான சக்கிமங்கலம், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள 160 வீடுகளில் கழிப்பறைகள்  கட்டுவதற்கு உதவி செய்தேன்.

அடுத்ததாகப் பசும்பொன் நகரில் 175 வீடுகள் உள்ளன.  அங்கு ஒரு  வீட்டிலும் கழிப்பறை  இல்லை. அங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கழிப்பறை கட்ட வைத் தோம். இதன் மூலமாக கொரோனாவுக்கு முன்பு வரை கிட்டத்திட்ட 5000 கழிப் பறைகள் கட்டி முடித்தோம்.

கொரோனா காலத்திற்குப் பிறகு 20202021 ஆண்டில் மேலும் 1500 கழிப்பறைகள்  கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறேன். அடுத்து 2021-2022ஆம் ஆண்டு திட்டப்படி கழிப்பறைகள் கட்டுவதற்கு அரசிடம் மானியம் அனுமதி கோரப்பட் டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஒளிரும் மதுரை அமைப்பாளர்கள் மூலமாக 15,000 மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறோம். அப்பகுதி மக்களே அதன் பராமரிப்புப் பணிகளைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஒவ் வொரு ஞாயிற்றுக்கிழமையும் இயற்கை பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஒத்த கடை, நரசிங்கபுரம் பகுதிகளில் மரக்கன்று நட்டு வருகிறோம். 

திருமங்கலம் பகுதியில் உள்ள ஆலம்பட்டி, கரிசல்பட்டி கிராமத்தில் 2125 வீடு களிலிருந்து சேரும் குப்பைகளைப் பிரித்து வாங்கி அதிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கிறார்கள். விவசாயிகள் மற்றும் வீட்டில் தோட்டம் வைத்திருப்பவர் களுக்கும் மண் புழு உரத்தை விற்பனை செய்து அந்த வருவாயில் கூலித் தொழி லாளர்களுக்குச் சம்பளம் மற்றும் அந்தக் கிராமத்திற்குத் தேவையான உதவி களைச் செய்து கொடுக்கிறார்கள்.

தமிழக  அரசு சுகாதாரப் பிரிவின்கீழ் தூய்மை இந்தியா திட்டம் மூலம் திடக் கழிவு, திரவக்கழிவு  பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இதனால் எனக்குப் பெரிய வருமானம் இல்லையென்றாலும் முழுமையான மனத்திருப்தியை ஏற்படுத்துகிறது” என்றார் செல்வி.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...