ப்ரபல ஒடிடியில் விஜய் நடித்த “லியோ”! | தனுஜா ஜெயராமன்
தற்போது விஜய் நடித்து வெளியாகி இருந்த லியோ படம் குறித்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய்யின் 67வது படமாக உருவான லியோ, கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் வாசுதேவ், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமாக லியோ விளம்பரத்தில் சக்கை போடு போட்டது. ரசிகர்களிடையே லியோ படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பும் காணப்பட்டது.
லியோ தான் கோலிவுட்டில் முதல் ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக இருக்கும் என்றெல்லாம் பரபரப்பான எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி லியோ திரைப்படம் வரும் 23ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து Leo on Netflix என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஓடிடி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே தீபாவளிக்காக லியோ ஸ்க்ரீன்கள் குறைக்கப்பட்டன.
அதேநேரம் லியோ ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.