உலக யோகா தினம் 2022

 உலக யோகா தினம் 2022

யோகாவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 8வது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், யோகா ஸ்டுடியோக்கள் அல்லது பிற பொது இடங்களில் ஒன்றாக யோகா பயிற்சி செய்வதற்காக மக்கள் கூடுகிறார்கள். யோகாவின் பல நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம்.

யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம்.

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது சர்வதேச யோகா தினம் பற்றிய திட்டங்களை முதன்முதலில் முன்வைத்தார்.  அதற்கு 177 உறுப்பு நாடுகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.  ஐக்கிய நாடுகள் சபை 69/131 தீர்மானத்தின் மூலம்  சர்வதேச யோகா தினம் ஜூன் 21ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை டிசம்பர் 11, 2014ஆம் ஆண்டு அன்று அறிவித்தது. 2015 ஆம் ஆண்டி லிருந்து, சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது.

நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ள ஒருவரது உடல் வைரஸுடன் சண்டையிட்டு நோயிலிருந்து பாதுகாக்கப்படலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெவ்வேறு யோகா ஆசனங்கள் உதவுகின்றன. அவற்றை பின்பற்று வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக அவசியம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் யோகாசன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வில்லை. இந்த ஆண்டு 75-வது சுதந்திர ஆண்டும் ஓராண்டுக்குக் கொண்டாடப் பட்டு வருவதால், அதையொட்டி யோகா தினத்தை சிறப்பாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.

‘மனிதகுலத்திற்கான யோகா’ என்பது இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருளாகும். தொற்றுநோய்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் கடினமான விளைவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அவை நமது மன ஆரோக்கியத் திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. எனவே, மனநலக் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை அதிகரித்துள்ளது, அத்தகைய சூழ்நிலையில் யோகாவைத் தழுவுவது அவசிய மாகிவிட்டது.

யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்தால், பல உடல்நலப் பிரச்னைகளை சமாளிக்க உதவும். சுய விழிப்புணர்வு, தனிப்பட்ட சக்தி மற்றும் சுய குணப் படுத்துதலை ஊக்குவிக்க உதவுகிறது. இது மனதில் உள்ள தீங்கு விளைவிக்கும் எண்ணங்களையும் உடலில் உள்ள நச்சுகளையும் குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை, மூளை செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக் கியத்தையும் மேம்படுத்துகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு காத்மாண்டுவில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் முன்னாள் நேபாள நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசும்போது:

“யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக் கப்பட்டபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா தோன் றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறி விட்டோம். ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டார். நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர்.

முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப் பட்டுவிட்டது. அதைச் சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தது சர்ச்சையாகியிருந்தது.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.