தூக்கம் வரமா? சாபமா?
பெரிய வெற்றியானாலும், படுதோல்வியானாலும் சம்பந்தப்பட்டவர் அன் றைய இரவுத் தூக்கத்தைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும்.
இன்றைய கணினி உலகில் எல்லாமே இயந்திரமயமாகிப்போனது. அமைதி யான, இயற்கை எழில்கொஞ்சும் கிராமங்களிலும் ஆர்டிபீசியல் ஊடக விளம்பரங்களினால் மாசுப்பட்டு, வாழ்க்கை முறை மாறி, உணவு முறை மாறிவிட்டது. வசதிகளைப் பெருக்குவதற்காக ஓடவேண்டிய கட்டம் கிராமத்திலும் உருவாகிவிட்டது. இந்த ஓட்டம் அன்றாட நடைமுறை வாழ்க்கை முறையை மாற்றி உணவு உண்ணும் பழக்கத்தையும் துயில் எனும் உறக்கத்தையும் மாற்றிக் கெடுத்து விட்டது.
மாலை 7 மணிக்கு படுத்து அதிகாலை 5 மணிக்கு எழுந்து அன்றைய பணியைத் தொடங்கிய காலம் போய்விட்டது. ஏதோ பழைய ஆட்கள் தான் இப்பொழுதும் பழக்கத்தின் பேரால் அப்படி அதிகாலையில் எழுந்திருக் கிறார்கள். இளையவர்கள் இரவு முழுக்க தொலைக்காட்சிப் பெட்டியில் தொலைந்துபோய் அல்லது வேறு கேளிக்கைகளில் இரவு நேரத்தை இரவல் வாங்கி, விடிந்தபின்பும் உறங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வீட்டுக்குள் வந்த சின்னத்திரை தற்போது கைக்குள் வந்துவிட்டது. அதோடு ஓ.டி.டி. தளங்களில் திரைப்படங்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் கொட்டிக் கிடக்கின்றன. ஒருமுறை சொடிக்கினால்போது ஆயிரம் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இந்த ஊடகப் பேயிடமிருந்து விலகியிருந்து உணவையும் உறக்கத்தையும் ஒருவன் சரியாகக் கடைப்பிடித்தால் அவனை எந்த நோயும் அண்டாது. மனக்கவலை, சோம்பல், பலவீனம், உளவியல் பிரச்சினைகள் இருக்காது.
துயில் எனும் உறக்கம் மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது? அது இயற்கையா? மனிதன் இரவில் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கி உறங்கப் பழகினானா?
மனிதன் இரவில் முடங்கி உறங்கப் பழகினான் என்றால் நமது முன்னோடி களான விலங்கினங்கள் அவ்வப்போது உறங்குகின்றனவே?
நாள் முழுக்க இயங்குகின்ற உடல் உறுப்புகளுக்கு ஓய்வு தேவை. அதனால் இயற்கையின் கொடைதான் உறக்கம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
ஒருவனின் நாள் முழுக்க நடக்கும் சுக-துக்கங்கள் நேரடியாக அவனது உறக்கத்தைத்தான் பாதிக்கிறது. பெரிய வெற்றியானாலும், படுதோல்வி யானாலும் அவன் அன்றைய இரவுத் தூக்கத்தைத் தியாகம் செய்துதான் ஆகவேண்டும்.
இன்டர்நெட் எனும் இணையத்தால் உலகமே சுருங்கிவிட்டது எனலாம். அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வானாலும், அடுத்த வீட்டில் நடக்கும் தகராறானாலும் மீடியாவில் வந்துவிட்டால் அடுத்த நொடியே நமக்குத் தெரிந்துவிடுகிறது. இந்த உலகச் சுருக்கத்தால் இரவுத் துயிலின் நேரம் குறைந்துவிட்டது. சிலருக்கு உறக்கம் வருவதே இல்லை. மாத்திரை யின் உதவியோடு உறங்கவேண்டிய நிலையில் இருப்பவர்கள் பெருகி வரு கிறார்கள்.
உறக்கத்துக்காகவே மதுவுக்கு அடிமையாகிவிட்டவர்கள் ஏராளம். அப்படி மது குடித்து உறங்கிப் பழகிவிட்டால் அதுவே வாழ்க்கையைக் கொல்லும் விஷமாகிப் போய்விடும்.
இன்றைய அவசர உலகில் பெரும்பாலானவர்கள் தூக்கமில்லாமல் தவிக் கிறார்கள் என்று கூறுகிறது ஒரு சர்வே! முன்பெல்லாம் உடல் உழைப்பு தான் பிரதானமாக இருக்கும். அதனால் படுத்தவுடனேயே தூக்கம் கண் களைத் தழுவிவிடும். ஆனால் இன்றைக்குப் பெரும் பாலான வேலைகளில் உடல் உழைப்பைக் குறைத்து அறிவு சார்ந்த பணிகள்தான் அதிகம் நிகழ் கிறது. அதனால் தூக்கமின்மையும் பெருகி வருவது சகஜம்தான்.
சரியான உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும் என் பதை அநேகமானோர் அறிவதில்லை. அது சோர்வையும், இளமை அழகை யும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6 லிருந்து 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம். இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.
அதற்கு மாறாக சிக்கல், வேலை நெருக்கடி, பணமுடை ஆகியவற்றை நினைத்துப் பயப்பட்டால் இரவில் தூக்கம் என்பது சிரமம்தான். ‘தூக்கம் போனால் ஏக்கம்தான் மிஞ்சும்’ என்பது பழமொழி.
இரவில் படுக்கப் போகும்போது, ‘இந்த மாதிரி விஷயங்களை’ காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று நிம்மதியாகத் தூங்கப் பழகுங்கள். இது மிகவும் கடினமான விஷயம்தான். ஆனால் முயன்று பாருங்கள். தூங்கும் போது வேறு எந்த நினைப்பும் வேண்டாம்.
குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழக வேண்டும். அப்படி பழக்கமாக்கிக் கொண்டால் தூங்குவதற்குரிய நேரம் வந்தவுடன் உறக்கம் உங்களைக் கட்டியணைக்கும். விழிப்பு வந்தவுடன் தட்டியெழுப்பும்.
பெரும்பாலும் 30 வயதிலிருந்து 50 வயதினர் மத்தியில் என்னதான் படுத்துப் புரண்டாலும் உறக்கம் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை என்று புலம்பும் பலரைக் காணலாம்.
உடலில் சோரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகிய சுரப்பிகள் தான் உறக்கத்திற்கு உதவுகின்றன. இவை குறைவாகச் சுரந்தாலோ, சுரப்பது தாமதப்பட்டாலோ உறக்கம் வருவது பாதிக்கப்படுகிறது. இதற்காக மருந்து களை எடுத்துக் கொள்வதைவிட உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். மனநிலையை தூங்கப்போகும்போது அமைதியாக வைத் திருக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
ஒன்றைக் கூர்ந்து கவனியுங்கள். பிறந்த குழந்தை உறங்கிக்கொண்டே இருக்கும். அது வளரவளர உறக்கத்தை மறுத்து விளையாடிக்கொண்டே இருக்கும். அதைத் தூங்கு தூங்கு என்று நாம்தான் தாலாட்டி, சீராட்டி, மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக இரவில் தூங்கப் பழக்கப் படுத்துகிறோம். இப்படியே ஆண்டாண்டு காலமாகப் பழக்கிப் பழக்கித்தான் இந்தப் வழக்கம் நமக்கு வந்தது. இரவில் வேட்டையாட முடியாத தாலும் விலங்குகளுக்குப் பயந்தும்தான் மனிதன் உறங்கப் பழகிக் கொண்டான். அதனால் உறக்கமே தேவையற்றது என்பவர்களும் உண்டு.
ஞானிகள்கூட உறக்கத்தில் அறியாமை ஆட்கொள்கிறது. அதனால் உறக் கத்தைத் துறக்கவேண்டும் என்கின்றனர். அதனால் அது மனிதனுக்கு இட்ட சாபம் என்கின்றனர். அது அவர்களுக்குப் பொறுத்தலாம்.
ஆனால் சாதாரண மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கத்தில்தான் உடல்உறுப்பு கள் பலம் பெறுகின்றன. மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கின்றன. அதனால் உறக்கம் என்பது உயிர்களுக்கு இன்றியமையாதது. வரம் என்கின்றனர் ஒரு பிரிவினர்.
உறக்கத்தில்தான் குழந்தைகள் வளரும் என்று விஞ்ஞானிகள் ஆய்வொன் றின் மூலம் கண்டறிந்துள்ளனர். குழந்தைகள் அன்றாடம் தூங்கும் நேரம், அவற்றின் உடல் வளர்ச்சி ஆகிய இரண்டும் ஒன்றோ டொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதிக நேரம் தூங்குவது உடலின் வளர்ச்சியை அதிகரிக் கின்றது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்க விஞ்ஞானிகளே இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். குழந்தைகளை அதிகம் உறங்கச் செய்வது அவர்களின் உடல் வளர்ச்சியை உறுதி செய் கின்றது. தினசரி 4 லிருந்து 5 மணிநேரம் அதிகமாக உறங்கும் குழந்தை களில் அதிக உடல் வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.
இங்கு உடல் வளர்ச்சி என்பது உடலின் நீளத்தை அல்லது உயரத்தைக் குறிக்கின்றது. 12 நாட்களான 23 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு அவற் றின் உறக்க நேரம், அதிகமான உறக்கம் என்பன அவர்களின் பெற்றோரால் பதிவு செய்யப்பட்டு 17 மாதங்கள் அவற்றின் வளர்ச்சி வேகம் பதிவு செய்யப்பட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆழமாக உறங்குகின்றபோதும், ஓரளவு கண் அயர்கின்ற போதும் உடல் வளர்ச்சிக் குக் காரணமான ஹோர்மோன்கள் அதிகம் செயற்படுவது கண்டறியப் பட்டுள்ளது.
தொட்டில் முதல் சுடுகாடு வரை உறக்கப் பழக்கம் இன்றியமையாது.
பிரச்சினைகள், குழப்பங்கள், தீர்வுகள், முடிவுகள், வெற்றிகள் தோல்விகள் எல்லாம் பல நேரங்களில் உறக்க நேரத்திலேயே தீர்மானிக்கப் படுகிறது. உறக்க நேரத்தில் பல கண்டுபிடிப்புகள் முடிவுக்கு வந்துள் ளன.
சீரான உறக்கமின்மையால்- குழப்பம், தீர்மானிக்க முடியாமல் தவிப்பு, மனஉளச்சல் எனத் தடுமாறுவோரும் உண்டு.
உறக்கம் மனிதனுக்கு வாய்த்தது வரமா? சாபமா? அதை எதிர்கொள் வது எப் படி? வெற்றி கொள்வது எப்படி? உறக்கத்தை மட்டும் அணைத்து வாழ்வை வசந்தசோலை ஆக்குவது எப்படி?
சிந்தியுங்கள். பிள்ளைகளிடம் செல்போன் தருவதைத் தவிருங்கள். வேண் டுமானால் அவர்களுடன் அமர்ந்து சிறிது நேரம் பார்த்துவிட்டு செல் போனை பறித்துவிடுங்கள்.
வாழ்க்கையில் பொழுதுபோக்கு தேவைதான். வாழ்க்கையோ பொழுது போக்காகிவிடக் கூடாது. பிறகு வாழ்க்கையில் என்ன செய்தோம் என்ப தைத் தேடித்தான் பார்க்கவேண்டும். இது என் அனுபவக் குறிப்பு.
அதனால்தான் மார்ச் 15 உலக தூக்க தினமாகக் கொண்டாடப்படுகிறது