ரத்த தானத்தின் அவசியமும் அவசரமும்

 ரத்த தானத்தின் அவசியமும் அவசரமும்

அவசர உலகத்தில் விபத்தும், நோயும் தவிர்க்கமுடியாதது. எதிர்பாராத விபத்து, மகப்பேறு, அறுவை சிகிச்சை, நோய் ஆகியவற்றின்போது, பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அவருக்கு ரத்தம் தந்து காப்பாற்றினால், உயிர் பிழைக் கும் மனித உயிர்கள் ஏராளம். முகமும், முகவரியும் தெரியாதவர்களுக்கு, நம் மால் எப்போதும் செய்யமுடிகிற, கொடுத்தாலும் குறையாத தானம்… ரத்ததானம் தான்.
இந்தியாவில் ரத்த தானம் 1942ஆம் ஆண்டு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்காக ரத்த தானம் பெறப்பட்டது. இதற்காக ரெட் கிராஸ் சார்பில் கொல்கத்தாவில் முதல் ரத்த வங்கி தொடங்கப்பட்டது.
1960களில் தன் ஆர்வலர்களால் பல்வேறு நகரங்களில் ரத்த வங்கிகள் தொடங்கப் பட்டன. தற்போது சிறிய நகரங்களில்கூட ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின் றன. 1975ம் ஆண்டு இந்திய ரத்த மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சொசைட்டி சார்பில் அக்டோபர் 1ம் தேதி தேசிய ரத்த தான தினமாக அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மொத்த தேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (ஒரு யூனிட் ரத்தத்தின் அளவு 450 மில்லி லிட்டர்). ஆனால் கிடைப்பதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கும் யாரோ ஒருவருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 38,000க்கும் மேல் ரத்த கொடையாளிகள் தேவை. பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும்.

ஒரு நாட்டின் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் ரத்ததானம் செய்வது அந்த நாட்டின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்வதற்கான குறைந்தபட்ச மாகும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 2018 மார்ச் 23ம் தேதி மக்களவையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி உலக சுகாதார அமைப்பின் விதிமுறைக்கு ஏற்ப இந்தியாவில் 1.9 மில்லியன் யூனிட் குறைவாக இருந்தது.
உலகளவில் ரத்தத்தின் தேவை, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. தேவைப்படும் ரத்தத்தை, இன்னொருவர் தானம் செய்வதன் மூலம் மட்டுமே பெறமுடியும். இதுவரை மனித ரத்தத்துக்கு மாற்று கண்டுபிடிக்கப்படவில்லை. ரத்ததானம் செய்வதன் மூலம், ஒருவருடைய உயிர் காப்பற்றப்படுகிறது. இன்னொருவருக்கு ரத்த தானம் செய்ய வழிகாட்டியாக அமைகிறது. இன்று நீங்கள் ரத்த தானம் செய்தால், அது நாளை உங்களுக்குக்கூடப் பயன்படலாம். ரத்ததானம் செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜூன் 14ம் தேதி, இந்திய ரத்த தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
நல்ல உடல்நிலையுடன், 18 முதல் 60 வயது உள்ள எவரும் ரத்த தானம் செய்ய லாம். உடலின் எடை 45 கிலோவுக்குமேல் இருக்கவேண்டும். ரத்த தானம் கொடுக்கும் முன், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, ஹீமோகுளோபின் ஆகியவற்றை சோதனை செய்ய வேண்டும். உடலின் வெப்பநிலை 37.50 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் இருக்கவேண்டும். சராசரியாக நமது உடலில் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். தானத்தின்போது, 350 மி.லி. ரத்தம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும். 2 நாட்களில் இழந்த ரத்தத்தை மீட்டுவிடலாம். 2 மாதங்களில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை, சரியான அளவுக்கு வந்துவிடும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ரத்த தானம் வழங்கலாம்.
தானம் செய்த ரத்தத்தை இழந்ததாகக் கருதவேண்டியதில்லை. ரத்தத்தில் இரும்புச்சத்தை சரியான அளவில் வைத்துக்கொள்ள தானம் உதவுகிறது. ரத்தத் தில் அதிகப்படியாக உள்ள கொழுப்பும், தானம் செய்யும்போது சீரடைகிறது. ஒரு யூனிட் ரத்தத்தை மூன்று பகுதியாகப் பிரித்து, ரத்த சிவப்பணுக்கள், பிளாஸ்மா, பிளேட்ளெட் எனப் பயன்படுத்த முடியும். இதனால் மூன்று பேர் உயிரை ஒருவ ரால் காப்பாற்ற முடிகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பேருக்கு ஏதாவது ஒரு விதத்தில் ரத்தம் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், உறவினர்கள், நண்பர்கள் மூலமே ரத்த தானம் செய்யப்படுகிறது. ஒவ்வொருவரும் தானாக முன்வந்து ரத்தானம் செய்தால் மட்டுமே, தேவையான ரத்தத்தைப் பெற முடியும்.

ரத்த தானம் செய்யத் தேவையான தகுதிகள் :
● ரத்த தானம் செய்பவர் 18 வயது நிரம்பியவராகவும் 60 வயது மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.
● ரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
● ரத்த தானம் செய்பவரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் ரத்த தானம் செய்யத் தகுதியுடையவர்கள். எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பும் ஏற்பட்டவராக இருத்தல் கூடாது.
● கடந்த ஓராண்டுக்குள் எந்தத் தடுப்பு மருந்தும் உபயோகப்படுத்தி இருத்தல் கூடாது.
ரத்த தானம் செய்வோர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்
● மது அருந்தியவர்கள் ரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.
● புகைப்பிடித்திருந்தால் குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ரத்த தானம் செய்வது சிறந்தது. ரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது.
● 3 மாத இடைவெளிக்குப் பிறகே அடுத்ததாக ரத்த தானம் செய்ய வேண்டும்.
ரத்ததானம் செய்பவர்கள் தவிர்க்க வேண்டியவை
● எய்ட்ஸ், மேகநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், வலிப்பு நோய் உள்ளவர்கள் ரத்த தானம் கொடுக்கக்கூடாது.
● இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்திருப்பின் அல்லது ரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் ரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
● பெண்கள் மாதவிடாய் காலங்களில் ரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
● தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை ரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
ரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
● தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.
● ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.
● இந்தியாவில் மருத்துவமனைகள், ரத்த வங்கிகள் அவசர கால ரத்த மாற்றத் திற்கு ரத்த தானங்களையே நம்பியுள்ளன.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...