கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்.

 கேரளாவில் மறு வீட்டுக்கு வந்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது.

மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர்.

சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்து வழங்கப்பட்டது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

திருமணத்திற்கு பின் அடுத்த நாள் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு முதல்முறையாக விக்னேஷ் சிவன் – நயன்தாரா மறுவீட்டு அழைப்புக்கு கேரளா‌‌ மாநிலம் கொச்சியில் உள்ள நயன்தாரா வீட்டுக்கு சென்றுள்ளனர்.

மேலும், கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர். இந்த வீடியோ & போட்டோக்கள் தற்போது செம்ம வைரலாகி வருகின்றன.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *