ரோபோடிக் அறுவை சிகிச்சையின் சிறப்புகள்

  ரோபோடிக் அறுவை சிகிச்சையின் சிறப்புகள்

ஏழை, எளியவர்களும் இலவசமாகப் பயன்பெறும் வகையில் சென்னை யிலுள்ள சிறப்பு சிறுவர் பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 34.60 கோடி யில் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் தொடங்கிவைத்தார். அகில இந்திய அளவில் மாநில அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள முதல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ரோபோடிக் துறையின் சிறப்பு மருத்துவராக உள்ளார் டாக்டர் இரா.ஜெய்கணேஷ். சிறுநீரக அறுவை சிகிச்சை துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த அவரிடம் ரோபோடிக் அறுவை சிகிச்சை இயந்திரத்தில் என்னென்ன நோய் களுக்குச் சிகிச்சை பெறலாம். அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்துப் பேசினோம்.

டாக்டர் இரா.ஜெய்கணேஷ்

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

அதிநவீன சிகிச்சை முறைகளைக் கண்டறிய எனது சொந்த முயற்சியில் நான் பயின்ற சிறப்பு சிகிச்சைகள் நிறைய உண்டு. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு கோயம்பத்தூரில் உயர்தர லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை, 2004ஆம் ஆண்டு மும்பையில் Microsurgery, 2006-07 குஜராத் மாநிலத்தில் உள்ள தலை சிறந்த மருத்துவமனையில் Advanced Endo Urology, Percutaneous Renal Surgery, 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியுயார்க் நகரில் Roswell Park Cancer Centre, Robotic Surgery hands on training & Certification as Robotic Surgeon, அமெரிக்காவின் உள்ள Miami Cancer Centreல் பணியாற்றியிருக்கிறேன். மேலும் புதுதில்லி அருகில் Medanta Hospital Robotic training and observationல் மருத்துவப் பணி என்று   உலகின் தலைசிறந்த மருத்துவமனைகளில் பணியாற்றினேன். இந்த அனுவங் களின் விளைவாக தமிழக அரசுப்பணியில் முதலில் ரோபோடிக் சர்ஜரி பயின்று சிறப்புப் பெற்றேன்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

லேபராஸ்கோபியின் அதிநவீன முன்னேற்றமே ரோபோடிக் அறுவை சிகிச்சை (ROBOTIC SURGERY). மிகக் கடினமான அறுவை சிகிச்சைகளை மிகத் துல்லிய மாகவும் நுணுக்கமாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களால், ரோபோடிக் கருவி கள் மூலம் நோயாளியின் உடலில் செயல்படுத்த பெரிதும் உதவும் தொழில் நுட்பம்.

கடினமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும்போது உறுப்புகளின் ரத்த நாளங்களும் நரம்பு நாளங்களும் கண்டறியப்படுவது அவசியமாகிறது. ஏனெ னில் அறுவை சிகிச்சையின்போது உறுப்புகளை அகற்ற நேரிட்டால் அவற்றின் ரத்த நாளங்களின் ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் ரத்த இழப் பைத் தடுத்து பலவீனமடைந்த உறுப்பை அகற்ற முடியும். அப்படிச் செய்யும் போது அதன் நரம்பு நாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவற்றைத் திறம்படச் செயல்படுத்த 3D விரிவாக்கம் அவசியமாகிறது (3D Magnification). அறுவை சிகிச்சை நிபுணரின் கைகள் 120 டிகிரி மட்டுமே சுழன்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். ஆனால் ரோபோடிக் சிகிச்சையில் உள்ள ENDO WRIST மூலம் 360 டிகிரி சுழலமுடியும். 3D விரிவாக்கம் உள்ளதால் மிக எளிதில் துல்லியமாக நாளங்களின் அமைப்புகளைக் கண்டு எளிதில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும்.

அறுவை சிகிச்சை செய்யும் நிபுணரின் கைகளில் ஏற்படக்கூடிய நடுக்கம் ரோபோடிக் சிகிச்சையின்மூலம் தவிர்க்கப்படும். ரோபோடிக் சிகிச்சையால் அறுவை சிகிச்சை நிபுணரின் கண்கள் மற்றும் கைகள் இயற்கையாகவும் தொடர்ச்சியாகயும் செயல்பட முடிகிறது. மற்றும் ரோபோடிக் சிகிச்சை மூலம் 3D விரிவாக்கம் மற்றும் உடல் உறுப்பின் ஆழத்தன்மை அறிதலை எளிதாக்கு கிறது. இதன் விளைவாக உடலின் இடுப்பு போன்ற ஆழமான பகுதிகளிலும் அறுவை சிகிச்சையை மிக நுணுக்கமாகவும் எளிதாகவும் செயல்படுத்த முடியும். இதனால் ரோபோடிக் சிகிச்சை கருவியில் அமைந்துள்ள லேசர் ஒளிக்கீற்று மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் உறுப்பை சமன் செய்து இயக்கிவிடலாம்.

ரோபோடிக் அறுவை சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது?

சிக்கலான உடல் உறுப்புகளின் அமைப்பினாலும், அவை உடலில் இடம் பெறும் குறுகிய இடங்களாலும், டாக்டரால் அறுவை சிகிச்சைகளை எளிதாகப் பார்த்து நுணுக்கமாகச் செயல்படுத்த இயலுவதில்லை. இந்தக் கட்டாயங்களால் தோன்றி யவையே நுண்ணறுவை சிகிச்சைகளான (Minimally invasive surgery) லேபராஸ் கோபி மற்றும் என்டோஸ்கோபி. இந்த விஞ்ஞான முன்னேற்றங்களால் மேலும் முன்னேறிய தொழில்நுட்பம்தான் ரோபோடிக் அறுவை சிகிச்சை.

ரோபோடிக் இயந்திரத்தில் அறுவை சிகிச்சை செய்வதால் என்ன நன்மை?

தனியார் மருத்துவமனைகளில் ரோபோடிக் அறுவை சிகிச்சை வழங்கப்படுகின் றன. ஆனால் அதற்கான செலவுகள் மிக மிக அதிகம். தமிழ்நாட்டில் ஏழ்மையால் நலிந்துள்ள நோயாளிகள் அவ்வளவு பணம் செலவு செய்து அந்த உயர்தர அறுவை சிகிச்சையைப் பெற முடிவதில்லை. எனவே அந்த எளிய மக்களுக்கும் உயர்தர ரோபோடிக் அறுவை சிகிச்சையை முழுவதும் இலவசமாகப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு 34.60 கோடி ரூபாயில் ரோபோடிக் சிகிச்சை இயந்திரத்தை அரசு பன்னோக்கு மருத்துவ மனைக்கு வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

ரோபோடிக் அறுவை சிகிச்சையால் பயன்பெற்ற நோயாளிகள் பற்றி?

முதன்முதலில் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ரோபோடிக் இயந்திரம் மூலம் திருப்பத் தூரைச் சேர்ந்த கிருஷ்ணன் எனும் ஏழைத் தொழிலாளிக்கு சிறுநீரகப் புற்று நோய் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தோம். அவர் இரண்டே நாட்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அதைத் தொடர்ந்து பத்து ரோபோடிக் அறுவை சிகிச்சைகளைத் திறம்படச் செய்துள் ளோம்.

ரோபோடிக் அறுவை சிகிச்சையின் சிறப்புகள் என்ன?

மிகக் கடினமான அறுவை சிகிச்சைகளை நிபுணர்களால்  மிக எளிதாகச் செய் முடிகிறது. உதாரணமாக, நோயாளியின் உடம்பில் சிறிய தழும்புகள் இருந் தாலும் சிக்கிச்சைக்குப் பின்  ரத்த இழப்பு, வலி மற்றும் நோய்த்தொற்று பெரி தும் குறைகிறது.  அதோடு அறுவை சிகிச்சையின் பின் வலி நிவாரண ஊசி கள் (Analgesics) அதிகம் தேவைப்படுவதில்லை. மேலும் ரோபோடிக் அறுவை சிகிச்சை யில் செய்யப்படும் மிகப் பெரிய அறுவை சிகிச்சையிலும் விரை வாகக் குண மடைந்து வீடு திரும்பலாம்.

எந்தெந்த நோய்களுக்கு ரோபோடிக் இயந்திரத்தில் அறுவை சிகிச்சை செய்ய லாம்?

சிறுநீரகம், குடல்நோய், புற்றுநோய், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சைகள் செய்யலாம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...