13 வயது சிறுமியிடம் கருமுட்டை கொள்ளை… பகீர் தகவல்கள்
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டை களை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா மற்றும் அவர் கருமுட்டை களை விற்பதற்குத் துணை செய்ததாகக் கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது செய்யப்பட் டுள்ளனர். சிறுமியின் நலன் கருதி அவர் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள் ளார்.
கருமுட்டை கொடுக்கும் நபர் குறைந்தபட்சம் 23 வயதானவராக இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு, 13 வயது சிறுமியின் வயதை 23 என மாற்றம் செய்து, போலியாக ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதற்கிடை யில், சிறுமியிடம் வளர்ப்புத்தந்தை சையத் அலி பாலியல் துன்புறுத்தல் செய்தபோதும், இந்திராணி சிறுமியைக் காப்பாற்றவில்லை என ஆய்வாளர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஏற்கனவே சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர், போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்தவர் என 4 பேர் கைது செய்யப் பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள்ளனர். ஈரோடு ஏ.டி.எஸ்.பி. கனகேஸ்வரி தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத் தியுள்ளனர்.
ஈரோட்டில் சிறுமிக்கு கருமுட்டை எடுத்த விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆஸ்பத்திரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். அந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், நிர்வாக இயக்குநர்கள் டாக்டர்கள் என இரண்டு கட்டமாக போலீசார் விசாரணையை விரிவாக நடத்தி முடித்துள்ளனர்.
மேலும் சென்னையில் இருந்து வந்த மருத்துவக்குழு பாதிக்கப்பட்ட சிறுமி யிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆஸ்பத் திரிக்கு நேரடியாகச் சென்று அதிரடி விசாரணையை மேற்கொண்டது. சிறுமியிடம் கருமுட்டை எடுத்த ஈரோட்டில் உள்ள இரண்டு தனியார் ஆஸ்பத்திரி, சேலம், ஓசூரில் உள்ள இரண்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவக் குழுவினர் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இது தவிர திருவனந்தபுரம், திருப்பதியிலும் இரண்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி யிடம் கருமுட்டை எடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக அந்தச் சிறுமிக்கு பெருந்துறை மருத்துவமனையிலேயே அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு கருமுட்டை எடுக் கத் தயாரான நிலையில் அவரைத் திருவனந்தபுரம் மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு சிறுமியை அனுமதித்து மயக்க ஊசி செலுத்தி கருமுட்டை எடுக்கப்பட்டது.
இதேபோல் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத் துச் செல்லப்பட்டு கருமுட்டை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த இரண்டு ஆஸ்பத்திரிகள் மூலம் எத்தனை முறை சிறுமி அழைத்து செல் லப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 3-வது முறையாக ஈரோட்டில் உள்ள இரண்டு தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி. எஸ்.பி. கனகேஸ்வரி அதிரடி விசாரணை நடத்தினார்.
கருமுட்டை எடுப்பது என்பது அந்தக் குழந்தைக்கு வலி நிறைந்த அனுபவ மாக இருந்திருக்கும். உடல் மறுத்துப்போவதற்காக ஊசி செலுத்தப்பட்டிருந் தாலும், அந்தக் குழந்தைக்குத் தனக்கு என்ன நடக்கிறது என்ற குழப்பம் இருந்திருக்கும். அவரது தாய் கூட்டிச் சென்றிருப்பதால், மறுப்பதற்குக்கூட அந்தக் குழந்தைக்கு வாய்ப்பு இருந்திருக்காது. மருத்துவர்கள் அந்தச் சிறுமியைப் பார்த்த பின்னரும் வயதைக் கணிக்காமல் எப்படி கருமுட்டை எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள் என்று தெரியவில்லை.
பதின்பருவத்தில் எட்டு முறை கருமுட்டைகளை எடுத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கருமுட்டை எடுக்கும் நேரத்தில் அதைத் தாங்க முடியமால் இறந்துபோகவும் வாய்ப்பு உள்ளது என்பது பரிதாபகர மானது.
செயற்கை கருத்தரிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், கருமுட்டை விற்பனை செய்வதற்கு விதிகள் நிர்ண யம் செய் யப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய அளவிலும் மாநில அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் இயங்குகின்றன. கருமுட்டைகளை எடுக்கும் மருத்துவமனைகள் அதற்கென பதிவு செய்துகொள்ளவேண்டும். கரு முட்டை கொடுப்பவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஈரோடு சிறுமிக்கு நடந்துள்ள விதிமீறல்களை பார்க்கும் போது, கருமுட்டை விற்பனை குறித்த கண்காணிப்பு முறையாக நடைபெற வில்லை என்று தெரிகிறது
ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருமுட்டை விற்கலாம் என சட்டம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து இது வரை எட்டுமுறை கருமுட்டைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறை சிறுமியின் கருமுட்டை கொடுக்கப்பட்டபோதும், அவ ருக்குக் கொடுக்கப்பட்ட ரூ.20,000 பணத்தை இந்திராணி, சையத் அலி எடுத்துக்கொண்டதாகவும், மாலதி ரூ.5,000 கமிஷன் பெற்றுக்கொண்டதாக வும் தெரியவந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தல் மற்றும் கருமுட்டை கொடுப்பதற்காக மருத்துவ மனைகளுக்கு அழைத்துச்செல்வது தொடர்கதையாக இருந்ததால், ஒரு கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி தோழியின் வீட்டில் இருந்ததாகவும் இந்திராணியும், சையத் அலியும் அங்கும் சென்று கருமுட்டை விற்பனைக்கு அழைத்துச்செல்ல வந்ததால், பயத்தில் சிறுமி, அவர்களுக்கு மறுப்புத் தெரிவித்து, சித்தி வீட்டுக்குச் சென்றார். அவர்களின் உதவியுடன் காவல் நிலையம் வந்து புகார் தெரி வித்தார். பெண்கள் நீதிமன்ற நீதிபதி அவருக்கு மனநல ஆலோசனை அளித்த பின்னர் அவர் அரசு காப்பாகத்தில் தங்கவைக்கப்பட்டுள் ளார்.
இதற்கிடையே பெண் புரோக்கர் மாலதி வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்ததுள்ளது. பல்வேறு நாட்களில் அவரது வங்கிக் கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்தள்ளதால் சிறுமி மட்டு மின்றி மேலும் பல சிறுமிகள் மற்றும் பெண்களிடம் கருமுட்டை தானம் என்ற பெயரில் புரோக்கர் மாலதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரு முட்டை விற்பனை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணை முழுமை யடைந்தால் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாக வாய்ப் புள்ளது.
மேலும் அந்தச் சிறுமிக்கு எந்தெந்த நாட்களில் கரு முட்டை எடுக்கப்பட் டது? எந்த ஆவணங்கள் அடிப்படையில் கருமுட்டை எடுக்கப்பட்டது? அந்த ஆவணங்களில் கையொப்பம் இட்டது யார்? கடந்த நான்கு ஆண்டுகளில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை பேருக்கு கருமுட்டை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் குறித்து கேட்டு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறப் பட்டுள்ளது.
ஆனால் ஆஸ்பத்திரி தரப்பில் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள் ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இந்த இரண்டு ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குநர், டாக்டர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெறும் எனத் தெரியவந்துள்ளது. இதன் மூலம் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. இதனால் இந்த விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் அக்கறை காட்டும் அளவுக்கு செயற்கை கருத்தரிப்பில் அரசு கவனம் காட்டவில்லை என்பததான் வருத் தத்துக்குரியது.