பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்’ பாடலைப் பாடக் காரணமானவர் நீலகண்டபிரம்மசாரி

 பாரதியார் ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில்’ பாடலைப் பாடக் காரணமானவர்  நீலகண்டபிரம்மசாரி

தூத்துக்குடி மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் எனும் இளைஞனால் வெள்ளைக்கார கலெக்டர் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக் கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டவர்தான்  நீலகண்ட பிரம்மச்சாரி. அப் போதுதான் அவர்  பெயர் நாடு முழுவதும் பிரபலமாகப் பேசப்பட்டது.

யார் இந்த நீலகண்ட பிரம்மச்சாரி? இவரது சாதனைகள்தான் என்ன என்பதை இன் றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டாமா? வாருங்கள் பார்ப் போம்.

வ.உ.சி.க்கு தண்டனை வழங்க காரணமாக இருந்த ஆஷ் துரையைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது.

நீலகண்ட பிரம்மச்சாரியிடம் துப்பாக்கிப் பயிற்சி பெற்ற வாஞ்சிநாதன், ஆஷ் துரையை மணியாச்சியில் சுட்டுக் கொன்று தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆஷ் கொலை வழக்கில் 14 குற்றவாளிகள். எல்லோருமே 25 வயதுக்குக் கீழே. நீலகண்ட பிரம்மச்சாரி வயது 21. சங்கர கிருஷ்ணனுக்கு 22. ஆஷ் கொலை நடந்த தேதி ஜூன் 17, 1911. திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 11இல் விசாரணை. 1912 பிப்ரவரி 12இல் தீர்ப்பு.

நீலகண்டருக்கு 7 வருஷம் சிறை தண்டனை சென்னை, கோவை சிறைகளில் கழிந்தது.

கடுங்காவல் என்பதால் விறகு வெட்டச் சொன்னார்கள். நான் ஒரு அரசியல் கைதி. எனக்கு இந்த வேலைகள் தரக் கூடாது, படிப்பதற்குப் புத்தகங்கள் வேண் டும் என்று போராடி வெற்றி பெற்றார். தண்டனை வெறுங்காவல் தண்டனையாக மாறியது. ஜெயில் உடை நீக்கி சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். பிறகு பாளையங்கோட்டை சிறை. பிறகு பெல்லாரி சிறை.

1914இல் உலக யுத்தம் தொடங்கிய சமயம் சிறையிலிருந்து தப்பியோடி மாட்டிக் கொண்டு, கூடுதல் தண்டனை பெற்றார்.

ஏழரை ஆண்டு முடிந்து 1919 ஆகஸ்ட் 14ஆம் தேதி விசாகப்பட்டினம் சிறையி லிருந்து விடுதலை.

அப்புறம் வெளியே வந்ததும் ஆங்கிலேயர் அரசுக்கு எதிர்த்துப் பிரசாரம். புரட்சி இயக்க வீரர்களுக்குப் பல துன்பங்கள். மீண்டும் விடுதலைப் போராட்ட வேலை களில் ஈடுபட சென்னை விஜயம்.

தங்க இடம் இல்லை. கையிலும் காசு இல்லை. வறுமை, பகல் எல்லாம் மெரினா பீச். ராத்திரி. எழும்பூர் ரயில் ஸ்டேஷன்.

இந்த ‘அபினவ பாரதம்’ எனும் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் பல துன்பங்களை ஏற்க வேண்டியிருந்தது. சில நாட்கள் உண்ண உணவின்றி, இரவில் ராப்பிச்சைக்காரர்கள் போல பிச்சை எடுத்து சாப்பிட்ட அனுபவமும் இவர்களுக்கு உண்டு.

திருவல்லிக்கேணியில் நிறைய வீடுகளில் திண்ணை. அதில் ஏதாவதொன்றில் தூக்கம். பசித்தால் கார்பரேஷன் குழாய் பம்பு அடித்து தண்ணீர் பசியை விரட்ட, ராப்பிச்சை சில இரவுகளில் பசியாற்றியது.

அப்படி ஒரு இரவு பாரதியார் வீடு என்று தெரியாமலேயே அவர் வீட்டிலேயே போய் பிச்சை கேட்க, “நீலகண்டா.. உனக்கா இந்த நிலை” என்று கண்ணீர் சிந்தி வீட்டினுள் அழைத்துச் சென்று பார்த்தால் பாரதியார் வீட்டில் ஒரு பருக்கை சோறு கூட இல்லை.

“நீலகண்டா நான் என்ன செய்வேன். என் சட்டை பையில் காலணா (3 நயா பைசா இப்போது) தான் இருக்கிறது. ஏதாவது கிடைத்தால் வாங்கி சாப்பிடு” அப்போது காலணாவிற்கு மதிப்பு இருந்தது. ஒரு பாக்கெட் பிஸ்கட், தோசை , இட்லியாவது வாங்கி சாப்பிட வழி உண்டு.

தனது இயலாமை, வறுமையை நினைத்து கண்ணீர் விட்டு வருந்தி அப்போது பாரதி முழங்கியது தான், “தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”

1889 டிசம்பர் 4-ல் சீர்காழியை அடுத்த எருக்கூர்  கிராமத்தில் சிவராமகிருஷ்ணன் – சுப்புத்தாயி தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்தார் நீலகண்ட பிரம்மச்சாரி.

இவருக்கு 2 தம்பிகள் 5 தங்கைகள். இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கிடைத்த செல்வம் வறுமைதான். சீர்காழி இந்து உயர்நிலைப்பள்ளி யில் 4ம் பாரம் எனும் ஒன்பதாம் வகுப்பு படித்தார். ஒரு நாள் ஒருவரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இவர் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்த ‘ஊட்டுப்புரை’ சத்திரத்தில் தங்கிக் கொண்டார். அங்கு சிலகாலம் இருந்தபின் சென்னைப் பட்டணம் வந்து திருவல்லிக்கேணி சிங்கராச்சாரி தெருவில் டி.யு.சி.எஸ்.சில் பணிபுரிந்தார். அவரது நேர்மைத் திறத்தால் இவர் அங்கு சாமான்கள் வாங்கும் முகவராக நியமனமானார். 

1905இல் கர்சன் ஹிந்து முஸ்லீம் பகுதியாக வங்காளத்தை ரெண்டாக பிரித்த தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு. லார்டு கர்சன் வங்காளத்தை மதரீதியாக இரண்டாகப் பிரித்தார். நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. விபின் சந்திர பால் இதை எதிர்த்துப் போராடினார். சென்னை கடற்கரையில் பல கூட்டங்களில் பேசினார். அவற்றைக் கேட்ட பல இளைஞர்கள் புரட்சி வீரர்களாக மாறினர். அவர் களில் நமது நீலகண்டனும் ஒருவர். தனது இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத் துக்காக ‘அபினவ பாரதம்’ எனும் புரட்சி இயக்கத்தைத் தோற்றுவித்து அதில் 20,000 மேற்பட்ட படைவீரர்களை ஒருங்கிணைத்துப் போராடத் தயாரானவர் நீலகண்டன். இவரது வாழ்க்கையின் பெரும்பகுதி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுமிருந்த சிறைகளில் கழித்தவர்.

1907இல் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு மகாகவி பாரதியாரின் தொடர்பு ஏற்பட்டது. தேசபக்தர் சந்திரகாந்த் சக்ரபர்த்தி சென்னை வந்தபோது நீலகண்டனை அவருக்கு பாரதி அறிமுகம் செய்ய நீலகண்டனைத் தனது புரட்சி இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார் சந்திரகாந்த்.

தஞ்சை மாவட்ட ஒரு ஆசாரமான பிராமண குடும்பத்துச் சின்னங்களோடு விளங் கிய நீலகண்டன், தனது புரட்சி எண்ணங்களுக்கேற்ப தனது குடுமியை எடுத்து கிராப்பு வைத்துக் கொண்டார். தமிழகத்தின் முதன்முதல் குடுமியை எடுத்த இந்து இவராகத்தான் இருப்பார். 

இவர் தன் பெயரோடு ‘பிரம்மச்சாரி’ எனும் பெயரை இணைத்துக் கொண்டார். பிரம்மச்சாரி என்பதற்கு திருமணமாகாமலும், பெண்கள் தொடர்பே இல்லாதவர் எனும் பொருள்படக்கூடிய சொல். இருந்த போதிலும், குடும்ப பந்தங்களில் ஈடு படாத, கொண்ட குறிக்கோளுக்காகப் பாடுபட தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வர் என்ற பொருளில் அவர் இந்தப் பெயரை ஏற்றுக் கொண்டார். மேலும் ஜாதிப் பெயரை இணைத்துக் கொள்ளாமல் பொதுவாக இந்தத் திருநாட்டின் தேசபக்தன் எனப் பொருள்படும்படி இந்தச் சொல்லை அவர் பயன்படுத்தினார்.

1908இல் இவர் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்குச் சென்று சந்திர காந்த் சக்கரபர்த்தியின் தொடர்பால் ‘அபிநவ பாரத இயக்கம் தொடங்கினார்.

திருநெல்வேலியைச் சுற்றி பல ஊர்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தினார். நீல கண்டனை ஆங்கிலேய ரகசிய போலீசார் கண்காணித்தனர். பிரிட்டிஷ் இந்தியா விலிருந்து தப்பி பிரெஞ்சு காலனி புதுச்சேரி சென்று கொஞ்ச காலம் தங்கினார்.

புதுச்சேரியில் சைகோன் சின்னையா என்பவர் நடத்தி வந்த அச்சகத்தில் ‘சூர்யோ தயம்’ எனும் பத்திரிகையைத் தொடங்கி அதில் பாரதியாரின் சீடனும், தம்பி என்று அவரால் அழைக்கப்பட்ட சு.நெல்லையப்பரை பணியில் அமர்த்திக் கொண் டார். வ.உ.சி.யின் உற்ற தொண்டனாக இருந்த மாடசாமிப் பிள்ளை தலைமறை வாகப் புதுச்சேரியில் இருந்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ராணுவப் பயிற்சி அளித்து வீரர்களை வடக்கே உருவாக்குமுன்பு, தெற்கே துப்பாக்கியில் சுட 6000 பேருக்கு பயிற்சி கொடுத்த வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி. அவரது சுதந்திர புரட்சி இயக்கத்தில் 20,000 பேருக்கு மேல் படைவீரர்கள் இருந்தனர்.

நீலகண்ட பிரமச்சாரி நேர்மை பற்றி ஒரு வார்த்தை.

இயக்கத்துக்காகப் பணம் கையில் நிறைய சேர்ந்தது. அவர் அப்பா வைதிக பிராம் மணர். பிள்ளை ஏதாவது சம்பாதித்து பணம் அனுப்புவான் என்று ஏமாந்தவர். ஒரு கடிதம் எழுதுகிறார்” குடும்பம் காசில்லாமல் தவிக்கறது ஒரு பத்து ரூபாய் அனுப்பேன்”.

நீலகண்டன் பதிலே எழுதவில்லை. ஒரு பைசாவும் பொதுப் பணத்திலிருந்து தொடக்கூடாது என்ற வைராக்கியம். யாராவது ஒருவருக்கு இருக்கிறதா இந்த வைராக்கியம் இப்போது?

அப்பா குடும்பத்தை காலி செய்துகொண்டு மாயவரம் போய் வேதம் சொல்லிக் கொடுத்து ஏதோ சொற்பமாக சம்பாதித்து ஜீவிதம் செய்தார். நீலகண்ட பிரம்மச்சாரி இப்போதைய பாகிஸ்தானிலுள்ள முல்டான் சிறையிலும், வாசம் செய்தவர்.

கம்யூனிஸ்ட தலைவர் சிங்காரவேலரின் தொடர்பால், ‘பொதுவுடமைக் கட்சியின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்ட குற்றத்திற்காக’ 1922-இல் பத்து ஆண்டுகள் ரங்கூன் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது நீண்ட நெடிய அரசியல், பொது வாழ்வு, ஆன்மிகம் பற்றி மூன்று நூல்களை எழுதியுள்ளார். 1909 முதல் 1917 வரை இவர் சிறையில் அனுபவித்த கொடுமைகளை “மெய் ஒப்புதல்” எனும் நூலாக எழுதினார், ஆனால் அதை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை.

இவரது இரண்டாவது நூல் “உபதேஷ்” எனும் தலைப்பிலானது. 1946ல் பெங்களூ ரில் வெளியிடப்பட்டது. மூன்றாவது நூல் “தேர்ந்தெடுத்த சொற்பொழிவுகள்”. இதுவும் பெங்களூரில் வெளியானது. தீவிரவாதம், புரட்சிகர இயக்கம் இவற்றில் இளமை வேகத்தில் ஈடுபட்டு பின்னாளில் ஆன்ம விசாரத்தில் ஈடுபட்டுத் துறவி யாக மாறிய இவரது வாழ்க்கை இன்றைய பல புரட்சிகர இயக்கத்தாருக்கும் ஓர் நல்ல வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

தனக்கென எதுவும் இல்லாத சந்நியாசியாக பிற்கால வாழ்க்கை. மனது எதிலும் ஈடுபடக்கூடாது என்று சதா சர்வ காலமும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஜபம் செய்தார்.  இவரை நந்தி மலையில் மகாத்மா சந்திக்க முயன்றும், இவர் இருந்த குன்று மிக உயரத்தில் இருந்தமையால் மகாத்மாவின் செயலாளர் மகாதேவ தேசாய் சென்று இவரை அழைத்துவந்து மகாத்மாவைச் சந்திக்க வைத்த வரலா றும் நமக்குக் கிடைக்கிறது. 

1933ல் டிசம்பர் மாதம் அப்போதைய மைசூர் சமஸ்தானத்தில் உள்ள நந்தி எனும் சிற்றூரை அடைந்தார். இப்போது அவர் சுவாமி ஓம்கார். அப்போது அவருக்கு வயது 44. அது தொடங்கி தனது இறுதிக் காலம் 88ம் வயது வரை அவரது இருப் பிடமாக இவ்விடம் அமைந்தது. நந்தி கிராமத்துக்கு அருகேயுள்ள சுல்தான் பேட்டை அருகேயுள்ள சென்னகிரி எனும் மலையடிவாரத்தில் இவர் தனது ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். இவர் இருந்த இடம் மிக செங்குத்தான மலைச்சரிவு என்பதனால் எவரும் அவ்வளவு எளிதில் இந்த இடத்துக்குச் செல்ல முடியாது. அவர் இந்த ஆசிரமத்தில் தனது ஆன்மிக வாழ்க்கையைத் தொடங் கினார். அவருடைய புரட்சி வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள், துறவற வாழ்க்கை நாற்பத்தி நான்கு ஆண்டுகள் என வாழ்க்கை இரு சரிசமமான பிரிவுகளாக அமைந்து விட்டது.

மைசூரில் நந்தி மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைத்து ஓம்காரானந்த சுவாமி களாக வாழ்ந்து 88வது வயதில் 1978, மார்ச் 14ம் தேதி காலமானார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published.